அவரது வயதிற்குட்பட்ட பெரும்பாலான சிறுவர்கள் தங்களது பொதுத் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும்போது, 16 வயதான ஹர்ஷ்வர்தன் ஜாலா, குஜராத் அரசுடன் "துடிப்பான குஜராத்" சர்வதேச உச்சி மாநாட்டில் தீவிரமாக பங்கேற்றார். காரணம் நாட்டிற்காக அவர் ஒரு ட்ரோனைக் கண்டுபிடித்தார். பாபுநகரில் உள்ள சர்வோதயா வித்யமந்திரில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜாலா, 2016 கண்ணிவெடி குண்டுவெடிப்பு காரணமாக பல வீரர்கள் உயிரிழந்துவிடுகிறார்கள் என்று ஜாலா தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டார். அப்போதுதான் அவருக்கு ட்ரோன் யோசனை உதித்தது. ட்ரோனின் மூன்று முன்மாதிரிகளுக்கு அவர் தனது கைப்பணத்தில் (பெற்றோர் தந்தது) இருந்து 5 லட்ச ரூபாய் செலவிட்டார். பின்னர் மாநில அரசு அவருக்கு 3 லட்ச ரூபாய் வழங்கியது, அடுத்து தனது முதல் வணிகத் திட்டத்தை உருவாக்கினார். போர்க்களங்களில் நிலக் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து செயலிழக்க உதவும் ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்கு குஜராத் அரசின் அறிவியல் - தொழில்நுட்பத் துறையுடன் ஜாலா ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.
“ட்ரோனில் அகச்சிவப்பு, ஆர்ஜிபி சென்சார் மற்றும் வெப்ப மீட்டர் மற்றும் 21 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் மெக்கானிக்கல் ஷட்டருடன் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களையும் எடுக்க முடியும். ட்ரோன் 50 கிராம் எடையுள்ள ஒரு குண்டையும் கொண்டு செல்கிறது, அது கண்ணிவெடியை அழிக்க பயன்படுகிறது. ” ட்ரோன் 8 சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய அலைகளை அனுப்புகிறது. இது தரையில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பறக்க முடியும்." என்று சொல்கிறார் ஜாலா. இதற்குக் காப்புரிமை பெற முயற்சி செய்கிறார். அரசின் உரிய ஒப்புதலுக்குப் பிறகு ராணுவத்தில் சேர்க்கப்படும்.இளம் விஞ்ஞானி ஜாலாவின் சாதனைக்கு வாழ்த்துக்கள்; அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.
0 Comments