தினமணி செய்தியில் பிழை?

"கல்வி விஷயத்தில் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு, நாட்டு நலனில் மட்டும் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்றார் சுரேஷ் ஜோஷி". _ இது 11-2-2020 தினமணி நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் கடைசி பத்தி. 


"ஜனநாயக அமைப்பில் ஆட்சியாளர்கள் மக்களின் தேவை, உணர்வுகள் இவற்றை அனுசரித்து கொள்கை வகுப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் மக்களின் உணர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு கொள்கை வகுப்பதற்கு பதிலாக நாட்டு நலனுக்கு உகந்ததை கருத்தில் கொண்டு கொள்கை வகுக்க வேண்டியிருக்கும்". - இது ஆர்எஸ்எஸ் அகில பாரத பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி கோவா அருகே நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ஹிந்தியில் வெளியிட்ட கருத்தின் தமிழாக்கம். 



Post a Comment

0 Comments