Post rescue-relief, Sevabharathi teams of counselors fan out to flood hit areas




சேவா பாரதி தொண்டர்கள் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் துயரக் கதைகளை மட்டுமல்லாது, அவர்களின் இன்றைய நிலை பற்றியும் தெரிந்து கொண்டு ஆறுதலும் அரவணைப்பும் தந்து வருகின்றனர். சென்னையில் உள்ள இயக்கத்தினருடன் கோவை, பெங்களூர், ஈரோடு போன்ற வெளி இடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் செவிலியர்களும் கடந்த ஒரு வாரமாக இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
பேசின் பிரிட்ஜ் குருசாமி நகர், ராயபுரம், புளியந்தோப்பு ..சி, நகர், K M குப்பம் ஆகிய இடங்களுக்கு சென்று நிலை குலைந்து போன குடும்பத்தினர் செய்வதறியாது தத்தளிக்கின்ற மக்களுக்கு ஆறுதல் கூறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சேவா பாரதி தாய்மார்கள் முயன்று வருகின்றனர். 
ராயபுரம் : சாக்கடை ஓரம் வசிக்கும் வருவாய்க் குறைந்த பூர்விக சென்னைவாசிகள். ஜெயின் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளால் உணவு மற்றும் குடிநீர் கிடைக்கப் பெற்றுள்ளனர். நாம் சென்று உறவினர் போல ஆறுதல் கூறியது அவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுத்தது என்றார்கள்.
புளியந்தோப்பு ..சி, நகர்
கால்வாய் ஒட்டிய பகுதி வயிற்றுப் போக்கு, காய்ச்சல், சேத்துப்புண், ஏராளம். நமது குழு 50 பேர்களுக்கு சேத்துப்புண்ணுக்கு மருந்தும் 100 பேருக்கு நிலவேம்புக் கசாயமும் தந்தார்கள்.

Post a Comment

0 Comments