Chennai - Sandesh (SETHU)


சேது
--------------------------------------------------------------------
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன 29 சித்திரை ( 2012, மே 11)

ஹிந்து கோவில் நிலங்களை சுருட்ட பார்க்கும் அரசு?

35,000க்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்கள் இந்து அற நிலைய துறையின் நிர்வாகத்தில் உள்ளன. கோவில் மற்றும் மடங்களுக்கு சுமார் 5,00,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் சொந்தமாக உள்ளன. கோவிலின் வருவாய் சரியாக வசூலிக்காததால், கோவிலின் தினசரி பூஜை மற்றும் திருவிழாக்கள் பாதிக்கப்படுகின்றது. மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவில் நிலங்களை வாங்கி, வீடு கட்ட திட்டம் தீட்டியுள்ளது. சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண் சொசைட்டி தொடுத்துள்ள பொது நல வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கோவில் சொத்துக்களின் நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகள் குறிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் இடையில் இந்து அற நிலைய துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 4 .78 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களின் தகவல் தளத்தை ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார். சமீபத்தில் ஸ்ரீ பாலஹரி ராமானுஜ மடத்தின் ஜீயர் கொல்கத்தாவில் காலமானவுடன் அவரது உடலை ஸ்ரீரங்கத்தில் உள்ள அவருடைய மடத்தில் இறுதி சடங்குகள் செய்ய இந்து அற நிலைய துறை அனுமதி வழங்கவில்லை. அவருடைய உடல் சாலையில் வைக்கப்பட்டது. இந்த மடம் இந்து அற நிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத சார்பற்ற அரசு ஹிந்து கோவில் நிலங்களை நிர்வகிப்பது ஆட்சேபத்திற்குரியது என்பதற்கு இதுவே சரியான சான்று. 

தாமரை சங்கமமும் தேர்தல் அறைகூவலும் 

பா.ஜ.கவின் மாநில மாநாடு கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரு எல்.கே.அத்வானி அவர்கள் பேசுகையில், "அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு தயாராகுங்கள். தேர்தல் என்பது இரு இராணுவங்களுக்கு இடையே நடைபெறும் போர் போன்றதாகும். தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கும், போரில் ராணுவம் வெற்றி பெறுவதற்கும் 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். தலைவர்கள், தளபதிகள், தெளிவான கொள்கை மற்றும் வியூகம் ஆகியவை போர்க்களத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் அம்சங்கள் ஆகும். ஒரு கட்சியை வலுப்படுத்தி வெற்றி பெறச்செய்வதற்கும் இந்த அம்சங்கள் அவசியமாகும்." மாநாட்டில் நிறைவேறிய பா.ஜ.கவின் குறிப்பிடத்தக்க இந்து ஆதரவு 

தீர்மானங்களில் ஓன்று: 'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.' என்பது.. மேலும் 'பசு வதை தடை சட்டத்தை மாநிலத்தில் அமலாக்க வேண்டும்' என்று பா.ஜ.க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ஹஜ் மானிய கதியே ஜெருசலேம் மானியத்திற்கும்? 

உச்ச நீதிமன்றம் ஹஜ் மானியத்தை குறைக்க பரிந்துரைத்த போது, இணையதளத்தில் பல்வேறு நேர்மையான கருத்துக்கள் வெளிப்பட்டன. சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருந்த ஜெருசலேம் மானியத்தின் நிலைப்பாட்டை ஹஜ் மானியத்துடன் ஒரு சிலர் ஒப்பிட்டுள்ளனர். அதாவது ஜெருசலேம் பயணம் செய்பவர்களுக்கு அளிக்க போவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் அப்பட்டமான ஆசை. அண்மையில் சிலர் ஹஜ் மானியத்தின் கதியே ஜெருசலேம் மானியத்திற்கும் ஏற்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் ஹஜ் மானியத்தை 10 ஆண்டுகளுக்குள் அடியோடு நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது நினைவுகூரத்தக்கது. . 













Post a Comment

0 Comments