சாத்தான்குளம் காவல்நிலையம் - தூத்துக்குடி மாவட்டம் - இருவர் இறந்தது - போலீசார் மீது வழக்கு விசாரணை - CBCID விசாரணை - சேவா பாரதி - RSS மீது குற்ற உணர்வுடன் (Criminal intention and Ulterior motive to divert the investigation in Sathankulam case) - பொய் செய்தி பரப்பும் நபர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவும் - Youtube video வலைதளத்தில் இருந்து நீக்கவும் - முதல் தகவலறிக்கை பதிவு செய்து வழக்கு விசாரணை செய்ய கோருதல் - தொடர்பாக
பொய் செய்தி பரப்பு You Tube சேனல்கள்
1) திரு மனோஜ்குமார் – கருப்பர் கூட்டம் - எச்சரிக்கை !! யார் இந்த சேவா பாரதி - Friends of Police – RSS
https://youtu.be/Z1wsRGotUu8
2) திரு திருமாவளவன் - சாத்தான்குளம் படுகொலையில் RSS பின்னணி –
https://youtu.be/WIrXAh6tUO4
3) Ms. சுந்தரவள்ளி - காக்கிச் சட்டையோடு கை கோர்த்த சங்கிகள் https://youtu.be/WHs9LYU_QwM
வணக்கம்,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் நேற்று 03.07.2020 மேற்படி மூன்று வீடியோகளையும் பார்த்தேன். மேற்படி வீடியோக்கள் முழுவதும் பொய்யான தகவலும் சாத்தான்குளம் வழக்கு விசாரணையை திசை திருப்பும் விதமாக குற்ற மனப்பான்மையுடன் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
மேற்படி நபர்கள் வீடியோவில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு இறந்துபோன வழக்கு விசாரணை மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றத்தால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் மேற்படி CBCID போலீசார் விசாரணையை திசைதிருப்பும் நோக்கிலும் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கிலும் மக்களுக்கு தவறான தகவல்களை தந்து திசைதிருப்பி விடுகிறார்கள்.
உண்மையில் சாத்தான்குளத்தில் சேவா பாரதி என்ற அமைப்பே இல்லை. தமிழகத்தில் எந்த காவல்நிலையத்திலும் போலீசாருடன் இணைந்து காவல்நிலையத்திற்குள் Friends of Police என்ற பெயரில் சேவா பாரதி அமைப்பினர் பணிசெய்யவே இல்லை. மேற்படி வீடியோவிலும் அதை பதிவிட்ட நபர் யார் எந்த ஊரைச்சேர்ந்த சேவா பாரதியினர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் Friends of Police ஆக பணியாற்றுகிறார் என்று கூறவில்லை.
பொதுவான குற்றச்சாட்டை வேண்டுமென்றே தவறான உள்நோக்கத்தில் பரப்பி விடுகிறார்கள். கொரோனா என்ற கொடிய நோய் தீவிரமாக பரவி வரும் இக்கட்டான காலகட்டத்தில் பலரும் காவல்துறையினருடன் இணைந்து பொது இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், பொதுமக்களுக்கு உணவு வழங்குதல் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற பணிகளை சேவாபாரதி அமைப்பு தமிழகம் முழுவதும் செய்து வந்தது. மேலும் சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் சேவா பாரதி அமைப்பினர் பல லட்சம் பேருக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகளை செய்துவந்தனர் என்பது வெளிப்படையான உண்மை.
கொரோனா காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பல லட்சம் பொதுமக்களுக்கு மற்றும் மருவத்துவமனையில் உள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளையும் சேவா பாரதி அமைப்பினர் செய்து வந்தனர். மேற்படி செய்தி ஊடகங்களிலும் செய்தி தாள்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சேவா பாரதி அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நற்பெயரும் மரியாதையும் உயர்ந்து வந்தது.
இந்நிலையில் சேவா பாரதி அமைப்பிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் மேற்படி அமைப்பை சாத்தான்குளம் காவல்நிலையம் கொலைவழக்கில் வழக்கு விசாரணையை திசைதிருப்பும் விதமாகவும் பொய்யான தகவல்களை மக்களுக்கு அளித்து இரண்டு பிரிவினர்களிடையே கலகம் ஏற்படுத்த முயற்சி செய்து அதன் மூலம் லாபம் அடைய துடிக்கும் மேற்படி வீடியோகளை பதிவு செய்த நபர்கள் மீதும் அதற்கு காரணமானவர்கள் மீதும் அதனை தூண்டியவர்கள் மீதும் சட்டப்படியான முதல்நோக்கு வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. எனவே மேற்படி மூன்று சேனல்களையும் தடைசெய்து வீடியோகளை வலைதளத்தில் இருந்து நீக்கவும் மேற்படி பொய்தகவலை பரப்பிய, தூண்டிய, உடந்தையாக இருந்த அனைவர் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் Information Technology Act மற்றும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய பணிவுடன் வேண்டுகிறேன்.
மேற்படி வீடியோவில் திருநெல்வேலி நகரத்தில் வெளியிடப்பட்டதாக சொல்லியுள்ள ஒரு சுவரொட்டியை காட்டி விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்துள்ளார். சாத்தான்குளம் காவல்நிலைய இருவர் மரணம் தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இல்லாத சூழலில் சம்பந்தம் இல்லாத செய்திகளை மேற்படி குற்றச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்புதல் குற்றம் என தெரிந்தே செய்துள்ளார். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இத்துடன் மேற்படி Youtube சேனல்களின் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோகளை இத்துடன் இணைத்துள்ளேன். சட்டப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
(B. ரபு மனோகர்)
0 Comments