இனி கச்சேரிகளிலும் தேச பக்திப் பாடல்கள்?

           


சென்னை ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் குழுவினர் நடத்திய தனிப்பாடல் போட்டியில் 64 நகர் கிளைகளில் இருந்து 240 ஸ்வயம்சேவகர்கள் 268 பாடல்களை ஆடியோ/வீடியோ மூலம் பதிவுசெய்து கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிப் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டி, கர்னாடக இசை வல்லுநர்கள் எஸ்.சௌம்யா, ஆர். கணேஷ் முன்னிலையில் காணொளி வாயிலாக நடந்தது. 10 பேரைத் தேர்ந்தெடுத்தனர்.ஆர். கணேஷ் வாழ்த்திப் பேசும்போது அனைவரது முயற்சியையும் பாராட்டினார். தவிர காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதத்தால் 40 வீரர்களை இழந்த CRPF 39வது பட்டாலியன் முன்பு தனது குழுவினரின் நாம சங்கீர்த்தனத்தால் அவர்கள் சோகத்திலிருந்து மீள உதவிய சம்பவத்தைக் குறிப்பிட்டார். வாழ்த்தியதோடு "பாருக்குள்ளே நல்ல நாடு" என்ற பாரதியார் பாடலையும் பாடினார் எஸ் சௌம்யா. ஆர்எஸ்எஸ் வட தமிழக செயற்குழு உறுப்பினர் எஸ் சாம்பமூர்த்தி நிறைவுரையில் ஸ்வயம்சேவகர்களின் முயற்சியைப் பாராட்டியதோடு எஸ். சௌம்யா, ஆர்.கணேஷ் போன்றோர் தங்கள் கச்சேரிகளில் இம்மாதிரி தேசபக்திப் பாடல்களையும் பாடி இசைத்துறையில் ஒரு புதிய டிரெண்ட் ஏற்படுத்தவேண்டிய தேவை பற்றிக் குறிப்பிட்டபோது அதை அவர்கள் இருவரும் ஏற்றனர்.

Post a Comment

0 Comments