ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீரின் தால் ஏரியை இரண்டு ஆண்டுகளாக சுத்தம் செய்து வரும் ஜன்னத் என்ற ஏழு வயது சிறுமியைப் பற்றி, ஹைதராபாத்தின் பள்ளி ஒன்றின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறுமி தற்போது மூன்றாம் வகுப்பில் படிக்கிறாள்.
"ஏரியை சுத்தம் செய்ய என் தந்தையால் நான் ஈர்க்கப்பட்டேன். எனக்கு கிடைக்கும் அங்கீகாரம் அனைத்தும் என் தந்தை தான்" என்று ஸ்ரீநகரில் ஜன்னத் கூறினார்.
ஜன்னத்தின் தந்தை தாரிக் அஹ்மத், "ஹைதராபாத்தில் உள்ள எனது நண்பரிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, அவர் எனது மகளின் பெயர் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதை என்னிடம் அனுப்பும்படி கேட்டேன். இது எனக்கு ஒரு பெருமையான தருணம்" என்று கூறினார்.
புகழ்பெற்ற இந்த தால் ஏரி, மிகவும் மாசடைந்திருக்கிறது. அதை சுத்தம் செய்யவேண்டும். அதற்கு என்னால் முடிந்ததை செய்கிறேன் என்கிறாள் இந்த சிறுமி ஜன்னத்.
0 Comments