குடியுரிமை திருத்த மசோதா-2019 - பாரதத்தின் தார்மீக கடமை

அகில பாரத செயற்குழு தீர்மானம்.
குடியுரிமை திருத்த மசோதா-2019
ராஷ்ட்ரீய ஸ்வயமசேவக சங்கம்
அகில பாரத செயற்குழு கலந்தாய்வுக் கூட்டம்.
கலியுகாப்த 5121.பெங்களூரு
14 மார்ச் 2020.
தீர்மானம்:-
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத செயற்குழு, அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மதரீதியாக துன்புறுத்தப்பட்டு அதன் காரணமாக அந்த நாடுகளைவிட்டு பாரதத்திற்குப் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள்,சீக்கியர்கள்,பௌத்தர்கள், சமணர்கள்,பார்ஸிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான குடியுரிமையை வழங்குவதற்குள்ள பல குளறுபடிகளை நீக்கி எளிமையாக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 என்கிற மசோதாவை நிறைவேற்றியமைக்காக இந்திய பாராளுமன்றத்தை மனதாரப் பாராட்டுகிறது.
பாரதம் 1947ல் மதரீதியாகத் துண்டாடப்பட்டது.இரு நாடுகளும் பூகோளரீதியாகத் தங்கள் பகுதியிலுள்ள மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, மத உரிமை,மற்றும் சம உரிமைகளுக்கு உத்திரவாதம் அளித்திருந்தது.பாரத அரசும்,பாரத சமுதாயமும் தங்கள் நிலப்பரப்பில் வாழ்ந்த சிறுபான்மை மதத்தினரின் பாதுகாப்பிற்காகவும் வளர்ச்சிக்காகவும் அரசியலமைப்பின் உத்திரவாதத்துடன் கூடிய கொள்கைகளை வகுத்தது.ஆனால் பாரதத்தைத் தவிர மற்ற நாடுகளில் இதுபோன்ற சூழ்நிலை உருவாக்கப்படவில்லை.நேரு-லியாகத் அலி ஒப்பந்தத்திற்குப் பிறகும்கூட, அந்த நாடுகளில் பல ஆட்சியாளர் மாற்றத்தின் பிறகும்கூட நடைபெறவில்லை.அந்த நாடுகளில் வாழ்ந்த மத சிறுபான்மையினர் மத ரீதியாகப் துன்புறுத்தல்களுக்கு ஆட்பட்டு,ஒரு புதுவிதமான மத அடிமைகளாக ஆக்கப்பட்டனர். அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதுடன் பெண்கள் கொடுமைகளுக்கு பலியாவதும் தொடர்ந்தது. அந்நாட்டு அரசுகள் பாகுபாடுள்ள பல நீதிக்குப் புறம்பான சட்டங்களை இயற்றி இதுபோன்ற மதரீதியான துன்புருத்தல்களை ஆதரித்தே வந்துள்ளது.இதன் விளைவாக அங்குள்ள சிறுபான்மையினர் பெரிய எண்ணிக்கையில் புலம் பெயர நேரிட்டது.பிரிவினைக்குப் பின் ஏற்பட்ட சிறுபான்மையினர் எண்ணிக்கை சரிவினால் இந்த உண்மை புலப்பட்டது.

பாரம்பரியமாக அந்த நாடுகளில் வாழ்ந்த பாரத சமுதாயம்,அந்த நாடுகளில் பன்னெடுங்காலமாகவே முன்னேற்றத்திற்கும்,தேச விடுதலைக்கும் ஆற்றிய தொண்டுகள் நினைவு கூறத்தக்கவை.ஆகவே இந்த சிறுபான்மையினரைப் பாதுகாப்பது பாரத அரசு மற்றும் சமுதாயத்தின் தார்மீக மற்றும் அரசியலமைப்பின் கடமையாகும்.கடந்த எழுபது ஆண்டுகளாக இந்த சகோதரர்களின் பாதுகாப்பு பற்றி பல விவாதங்கள் பாராளுமன்றத்தில் பல தடவை பல்வேறு காலகட்டங்களில் நடந்தன. ஆனால் நடைமுறைக் குளறுபடியால் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு அவர்களின் பயத்தையும் நிலையில்லாத தன்மையையும் போக்க குடியுரிமை என்னும் உரிமை வழங்கப்படாமலே இருந்தது.ஆனால் இப்போது நிறைவேற்றப்பட்ட மசோதா அவர்கள் கண்ணியத்துடன் வாழும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

அரசாங்கம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களில்,இந்த மசோதாவினால் பாரதத்தின் குடிமக்களுக்கு எந்த விதமான பிரச்னைகளும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறது.வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களின் பயத்தைப் போக்க ஏற்படுத்தப்பட்ட நிலைப்பாட்டில் அகில இந்திய செயற்குழு திருப்தி தெரிவிக்கிறது.இந்த மசோதா அந்த மூன்று நாடுகளிலிருந்து மதரீதியாக துன்புறுத்தப்பட்டு புலம் பெயர்ந்த மக்களுக்காகத் தானே தவிர இந்தியக் குடிகளுக்கு குடியுரிமை கிடையாது என்பதற்காக அல்ல.இந்த மசோதாவின் உண்மையைப் புரிந்து கொள்ளாமல் மக்களின் மனதில் பயத்தைத் தூண்டுவதாக ஜிகாதி-இடதுசாரி கூட்டுறவு, பல சுயநல அரசியல் தலைவர்கள்,சில வெளிநாட்டு சத்திகளோடு இணைந்து நாட்டில் பல அராஜகங்களை நடத்தி மக்களை பீதிலாழ்த்திக்கொண்டு வருகிறது.

அகில இந்திய செயற்குழு இத்தகைய செயல்களைக் கண்டிப்பதுடன் சமுதாய நல்லிணக்கத்தையும் தேச ஒற்றுமையையும் சீர்குலைக்கும் சக்திகளைப்பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்கிறது.

விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் உள்ளவர்கள் நடக்கும் செயல்களைப் புரிந்து கொண்டு தேச விரோத சக்திகளை முறியடித்து அதன்மூலம் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த அகில இந்திய செயற்குழு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறது.

Post a Comment

0 Comments