கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, ஸ்ரீபெரும்புதூர்

சென்னை, ஜன சேவா ட்ரஸ்ட் மற்றும் திருவள்ளூர் கேசவம் அறக்கட்டளை சார்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு ரூ.1.08 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 




ஜன சேவா ட்ரஸ்ட் மற்றும் கேசவம் அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஸ்ரீபெரும்புதூர் வன்னியர் மண்டபத்தில் 18.08.2019 ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் ரூ.1.08 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. 8 கல்லூரி மாணவர்களும் 8 பள்ளி மாணவர்களும் பயனடைந்தனர். திரு.கார்த்திகேயன், அறங்காவலர், FASS அறக்கட்டளை அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் காஞ்சி கோட்டத்தலைவர் திரு.இராமா.ஏழுமலை அவர்களும், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் திருவள்ளூர் நகர தலைவர் திரு.P.சுகுமார் அவர்களும் முன்னிலை வகித்தனர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மாநில சேவா ப்ரமுக் திரு.ஸ்ரீநிவாஸன் அவர்கள் உதவி பெற்ற மாணவ-மாணவியருக்கு வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.

Post a Comment

0 Comments