ஆகஸ்ட் 17 சனிக்கிழமை அன்று சூளை பகுதியில் தட்டான்குளம் என்ற இடத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கான ரக்ஷாபந்தன் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வடதமிழகத்தில் குடும்ப பிரபோதன் பிரமுக் திரு எம்கே ஆர் மோகன்ஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பெரம்பூர் மாவட்டத்தின் தர்ம ஜாக்ரன் பிரமுக் திரு சத்தியன் ஜி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் 80 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சௌகார்பேட் பகுதியில் கூலி தொழிலாளர்கள் கலந்துகொண்ட ரக்ஷாபந்தன் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆர்.எஸ்.எஸின் வடதமிழக இணைச் செயலாளர் திரு. ராமகிருஷ்ண பிரசாத் ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நாம் ஒற்றுமையோடும் அன்போடும் அனைவரிடமும் பழகி ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார் .குலதெய்வ வழிபாடு அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து இங்கு தங்கி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இவ்விழா நடைபெற்றது. சென்னை மாநகரின் இணைச்செயலாளர் திரு. கரன் ராஜ் அவர்களும், சென்னை மகாநகர் தர்ம ஜாக்ரன் பிரமுக் திரு. சீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் 75 ஆண்களும் ,2 பெண்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதி மாதம் அமாவாசை நன்னாளில் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
0 Comments