வீரப்பன் துதிபாடிய வீணர்கள் கவனத்திற்கு


வெற்றி பெற்ற 303 பாஜக எம்பிக்களில் ஒருவர் வி ஸ்ரீனிவாசப் பிரசாத். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர். துருவநாரயனாவை விட வெறும் 1816 அதிகம் பெற்று ஜெயித்தார். பாராட்டு அதற்கல்ல. வீரப்பன் எண்கவுண்டரில் தீர்க்கட்டப்பட்ட பிறகு 12 பெண்கள் உட்பட 140 பேர் மீது பல்வேறு குற்றங்களுக்காக வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் வீடு இருப்பது எம்.எம்.ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹானூர். அவர்கள் தினந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய இடம் மைசூரு. அவர்கள் ஊரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் அவ்வளவு தூரம் பயணம் செய்வது அவர்களால் முடியாத காரியம். எனவே அவர்கள் தங்கள் தொகுதி மக்கள் பிரதிநிதியாக ஸ்ரீவாசப் பிரசாத்தை அணுகிறார்கள். அவர் அப்போது மத்திய அமைச்சராக இருந்தார். அந்த ஏழை மக்களின் சோகக் கதையைக் கேட்ட ஸ்ரீனிவாச பிரசாத் மைசூரில் அவர்கள் தங்குவதற்கு ஒரு பண்ணை வீட்டை ஏற்பாடு செய்துகொடுக்க ஆறுமாத காலத்திற்கு அவர்களுக்கு அங்கே உணவு கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார். இவர்கள் வீரப்பன் ஆட்கள் என்பதால் வேறு யாரும் இவர்களுக்கு உதவ பயந்தார்கள். அந்த வழக்கில் 14 பேர் தண்டனை பெற்று சிறைக்கு அனுப்பப் பட்டார்கள். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இது நடந்தது 1999ல். மனதில் நன்றியோடு ஊர்திரும்பிய அந்த மக்கள் 2019 லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர் ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு ஓட்டுப்போட்டு நன்றிக்கடனை தீர்க்க முடிவு செய்தார்கள். அவர்களுடைய முயற்சியால் ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு 1500 வாக்குகள் கிடைத்தன. அதுவே அவருடைய வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது. கற்பனைக்கதையைவிட பல திருப்பங்களைக் கொண்ட மனித மனங்களின் நல்லெண்ணங்களை பிரதிபலிக்கிறது அல்லவா இந்த சம்பவம்? அது ஒருபுறம். மறுபுறம் வீரப்பனைத் தாங்கிப் பிடித்த நக்சலைட்டுகள் யாரும் இந்த மக்களை அறவே மறந்துபோய்விட்டார்கள். 

Post a Comment

0 Comments