"கோயில் கட்டும் கட்சி ஆள வேண்டும்”: ஆர்.எஸ்.எஸ்
”தேச பக்தர்களின் அரசு தான் ராமர் கோயிலை கட்ட முடியும். இன்றைய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இதைத்தான். மற்றகட்சிகளுக்கு ஹிந்து விரோத எண்ணம் உள்ளது. இன்று தேசத்திற்கு பல சவால்கள். தற்போது பொதுத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேச நலன் பற்றிசிந்திக்கின்ற, பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற, வளர்ச்சியை தடுக்காத கட்சிகள் ஆட்சியில் அமர வேண்டும்; அதாவது வலிமையான அரசு அமைய வேண்டும்என்று அண்மையில் ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி கூறினார் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றமோடி அரசு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ”இந்த அரசு பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறது. சர்வதேச அரங்கில் பாரதத்தின் கௌரவம் ஓங்கியிருக்கிறது.பாதுகாப்பு விஷயத்தில் குறிப்பிடத்தக்க பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் சுபிட்சத்தை நோக்கி பாரதம்முன்னேறியுள்ளது” என்றார் அவர்.
0 Comments