"தேசத்திற்குத் தொண்டாற்ற கலை ஒரு கருவி": மோகன் பாகவத்

"தேசத்திற்குத் தொண்டாற்ற
கலை ஒரு கருவி": மோகன் பாகவத்


தீனாநாத் மங்கேஷ்கர் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற போது ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத்கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். திரைக்கதை ஆசிரியர் சலீம் கானும் நடிகை ஹெலனும் பரிசு பெறுவதை காணலாம். நிகழ்ச்சியில் உரையாற்றிய .மோகன் பாகவத் ”கலை என்பது அலாதி விஷயம் அல்ல, தேசத்திற்கு தொண்டாற்ற கலை ஒரு கருவி என்றார் சி.ஆர்.பி.எப் டைரக்டர் ஜெனரல் விஜயகுமார் தலைமைவகித்தார். மோகன் பாகவத் மேலும் பேசுகையில் ”நாம் நல்லவர்களாக இருந்தால் போதாது. நமது நல்ல தன்மை வாயிலாக தேசத்தை நல்ல தேசம் ஆக்க வேண்டும்” என்று கூறினார். புல்வாமாவில் பலிதானம் ஆன சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக லதா மங்கேஷ்கர் ஒரு கோடி ரூபாய் நன்கொடைஅனுப்பிஇருந்தார். விஜயகுமார் அதைப் பெற்றுக் கொண்டார். மற்ற கலைஞர்களும் 18 லட்ச ரூபாய் நன்கொடை அளித்தார்கள்.

Post a Comment

0 Comments