ஆர்.எஸ்.எஸ் பற்றிய அவதூறுகளுக்குக் கண்டனம்



எஸ்சி – எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றிய உச்சநீதி மன்றத் தீர்ப்பு விவகாரம்:
ஆர்.எஸ்.எஸ் பற்றிய அவதூறுகளுக்குக் கண்டனம்
                                            ஆர்.எஸ்.எஸ் அகில பாரதப் பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி
உச்சநீதி மன்றம் எஸ்சி – எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாகக் கூறி அதை எதிர்த்து பல்வேறு தலித் அமைப்புகள் நடத்திய நாடு தழுவிய பந்தின் போது பல மாநிலங்களில் வன்முறையுடன் கூடிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இந்த வன்முறை துரதிருஷ்டவசமானது என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதப் பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி கூறினார். நீதிமன்றத் தீர்ப்பை சாக்காக வைத்து ஆர்.எஸ்.எஸ் பற்றி விஷம் கக்கும் பொய்ப்பிரச்சாரம் செய்ய முயற்சி நடக்கிறது. இது ஆதாரமற்றது, கண்டனத்திற்குரியது என்றார் அவர். உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை என்றும் அவர் கூறினார்.

“சாதி அடிப்படையில் நடக்கும் பாரபட்சத்தையும் கொடுமையையும் சங்கம் எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. அந்தக் கொடுமைகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்களை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். உச்சநீதி மன்றம் தந்துள்ள இந்தத் தீர்ர்ப்பு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு முற்றிலும் பொருத்தமானது” என்று கூறினார் சுரேஷ் ஜோஷி.

“விவரமான மக்கள், சமுதாயத்தில் சுமுக சூழல் நிலவச் செய்வதில் தோள் கொடுக்க வேண்டும் என்றும் சமுதாயமும் திசைதிருப்பும் முயற்சிகளுக்கு இரையாகிவிடாமல் பரஸ்பர அன்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் கேட்டுக் கொள்கிறது” என்கிறது ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலர் அறிக்கை.

Post a Comment

0 Comments