Hindu Munnani demands legal action against Thirumavalavan




Hindu Munnani strongly condemns the communal triggering speech of Viduthalai Siruthai Katchi leader Thirumavalavan. Participating in a Dalit-Islamist Uprising meeting held on December 6, 2017 in Perambur, Chennai, he said that Buddha Vihar should be built demolishing Hindu temples in India citing Kanchi Kamakshi Amman Temple and Sri Rangam Temple, Trichy.


Questioning VCK leader on the state of more than 3000 temples demolished in Tamilnadu and other religious structures built over the Hindu temples, Hindu Munnani strongly condemns the minority appeasement and hurting the sentiments of Hindus by his hatred thought and speech. Hindu Munnani urges the Tamil Nadu government to take legal action against VCK leader for disturbing the general peace and the intention of religious conflicts and to threaten the security of Hindu temples.



திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..

6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
திருமாவளவன், தான் இந்துவா ? இல்லையா? என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.
இந்து கோயில்களை இடித்து புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா? அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா? அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன.   நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து,  அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா? ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன
இப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்நாட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா?
எப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச்சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்
திருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார்? என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே  அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்


(இராம கோபாலன்)
 


Post a Comment

0 Comments