“ஸமரஸதா” எண்ணத்தின் மகத்துவம், ABPS 2016

“அகில பாரதீய பிரதிநிதி சபா”வின் வேண்டுகோள்
தீர்மானம் 3
“ஸமரஸதா” எண்ணத்தின் மகத்துவம்
நம் பாரத நாடு மிகத்தொன்மையான நாடு. எண்ணம் மற்றும் சிந்தனை பற்றிய வளமான கருத்துக்கள் தோன்றிய ஒரு பெருமையான தேசம் நம் பாரதம். இந்தப்பிரபஞ்சத்தில் வசிக்கின்ற அனைத்து உயிர்களும், ஏன் இந்த பிரபஞ்சமே கூட, ஒரே மூலத்திலிருந்துதான் தோன்றியது என்னும் சிந்தனை தான் நமது பாரதத்தின் கோட்பாடு

ஒரே ஆதி சக்தியிலிருந்துதான் அனைத்தும் பிறந்தன என்னும் கருத்து எத்தனை சத்தியமானது, எத்தனை மேன்மையானது.

இந்தக்கருத்து நம் நாட்டின் பண்டைய ரிஷி முனிவர்கள் நமக்கு அளித்த ஒரு மிகப்பெரும் பொக்கிஷம். 

அவர்கள் அனைவருமே இந்த உயர்ந்த சிந்தனையை வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமல், தங்களின் நேரடியான அனுபவத்திலிருந்து உணர்ந்து கூறியிருக்கிறார்கள்., எப்போது நாம் நம் முன்னோர்கள் வகுத்த இந்த மேன்மையான உண்மையிலிருந்து தடம் புரண்டு தவறான பாதையில் செல்ல ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்துதான், நம் சமுதாயம் சீர்கேடான நிலைக்கு தள்ளப்பட்டது. நம் தேசத்தில், சாதீய அமைப்புகள் தோன்றி, தீண்டாமை என்னும் கொடிய நோய் நம்மைப்பீடிக்க ஆரம்பித்தது. 

எனவேதான் அகில பாரதீய பிரதிநிதி சபா மீண்டும் ஒரு சமுதாய மலர்ச்சிக்காக, தேசத்தின் மேன்மைக்காக களம் இறங்கியுள்ளது.. “ஒளி ஒன்று- தீபங்கள் பல” 

“ஆத்மவாத் சர்வபூதேஷு”; (அனைத்து உயிர்களும் ஒன்றே); “சர்வேஷ்டா சர்வ பூதேஷு”. (எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமை) இதில் உயர்ந்தவர் யார்- கீழானவர் யார் என்னும் பாகுபாடு இல்லாமல் ஸமரஸதா எண்ணம் பரவ வேண்டும். ஒரு தீபத்திலிருந்துதான் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட வேண்டும் 

ஸ்வயம்சேவகர்களாகிய நாம் அனைவரும், ஸமரஸதா (சமுதாய ஒற்றுமை) எண்ணத்துடன் இணைந்து செயலாற்றவேண்டும். இந்த எண்ணம் நம் இதயத்திலிருந்து வெளிப்பட வேண்டும். நம் சொந்த வாழ்விலும், சமூக அமைப்பிலும் ‘ஸமரஸதா’ வை நிலை நாட்ட நாம் அனைவரும் பாடுபட வேண்டும் தீண்டாமை எனும் அரக்கனை நம் சமுதாயத்திலிருந்து கண்டிப்பாக வெளியேற்ற வேண்டும். அப்போதுதான், மீண்டும் பாரதம் எவராலும் வெல்ல முடியாத, ஒரு மேன்மையான நிலைக்கு வந்து, மீண்டும் ஒரு சக்தி மிகுந்த தேசமாக மாற முடியும். .

Post a Comment

0 Comments