Ganesh Utsav in Tamilnadu - Press release by Hindu Munnani

Ganesh Utsav is gaining momentum encompassing entire society.  In Tamilnadu, Hindu Munnani this year too, has planned to install huge 50,000 Ganesha statues in public and worship for some days.  Then, it will be immersed in the nearest sea, lake or river.  In 250 places, Ganesha immersion procession will take place stated Shri Bakthavatsalam, Organiser, Hindu Munnani in a press meet. Further he stated that an appeal has been made to the society and Government to make primary education in mother tongue as compulsory; appealing the society not to purchase any goods/items in the shops who support terrorism and who destroy peace in the state. 

பத்திரிகை அறிக்கை.

முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் இந்து ஒற்றுமையை வலிறுத்தி, இந்து முன்னணியால் ஒரே ஒரு விநாயகரை வைத்து துவக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது இன்று தமிழக முழுவதும் பட்டித் தொட்டி எங்கும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்து முன்னணி மட்டுமல்ல, பல அமைப்புகளாலும், குழுக்களாலும், அரசியல்வாதிகளாலும், அரசியல் கட்சிகளாலும் கூட விநாயகர் சதுர்த்தி விழாவானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இந்து முன்னணி பேரியக்கம் நடத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழா தமிழகம் முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. விநாயகர் விசர்ஜன இந்து எழுச்சி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்கள் 250க்கும் அதிகமான ஊர்களில் ஏற்பாடாகி உள்ளன.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட குறைவான நாட்களே இருப்பதால் முக்கிய மூன்று தினங்களை எல்லா குழுக்களிலும் நடத்தி சமுதாய விழிப்புணர்வை, ஒற்றுமையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமுதாய நல்லிணக்க நாள், குழந்தைகள் தினம், மகளிர் தினம் என்ற மூன்றை மையமாக கொண்டு விழா நடைபெறும்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் எடுத்துச் சொல்லப்படப்போகிற விஷயம் தமிழ் வழி கல்வியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாக்க அரசை வலியுறுத்தவும், பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க, பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்போர் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் என்பதையும் மைய பொருளாக்கி பிரச்சாரம் செய்யப்படும்.
மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை செம்மைப்படுத்த, வெற்றி விழாவாக்க இந்து முன்னணி மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் திட்டமிட்டு வருகிறது.
தமிழகம் முழவதிலும் இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
விழா சிறப்பாக நடைபெற, சமுதாயத்தில் தீண்டாமை, ஜாதிய ஏற்றத் தாழ்வு முதலிய கேடுகளைக் களைய சமுதாய நல்லிணக்க விழா மூலம் சமுதாய ஒருங்கிணைப்பை, நம்பிக்கையை ஏற்படுத்த இருக்கிறது.
அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சி பாகுபாடிற்கு அப்பாற்பட்டு இந்த சமுதாய விழாவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
எனவே, இந்து சமுதாய எழுச்சி விழாவானது வெற்றிகரமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக அரசும், காவல்துறையும், அரசாங்க அதிகாரிகளும் இந்து முன்னணியின் பெரு முயற்சி வெற்றிபெற முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
நன்றி,


என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்


(க. பக்தன்)
மாநில அமைப்பாளர்

Post a Comment

0 Comments