Chennai - Sandesh (SETHU)

சேது
--------------------------------------------------------------------
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன 15 சித்திரை ( 2012, ஏப்ரல் 27)

ஈரோடு ஹிந்துக்களுக்கு அமோக வெற்றி 

பல ஆண்டுகளாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தின் பெரும் பகுதியை, சட்டவிரோதமாக பிடித்து வைத்திருக்கும் சர்ச் ஆப் சவுத் இந்திய (சி எஸ் ஐ) அமைப்பிடமிருந்து நிலத்தை மீட்க மாநகராட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. பல ஆண்டுகளாக போராடி வரும் இந்து மக்களின் உணர்வை மதித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஸியாக இயங்கும் கமர்சியல் நகரமான ஈரோடுல், மே 28 , 2010 அன்று 'பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு குழு' சார்பில் நடந்த 'பந்த்' எந்த வித அசம்பாவித சம்பவம் இல்லாமல் 100 % கடையடைப்புடன் நடந்தது. 12 .56 ஏக்கர் கோவில் நிலத்தின் பெரும் பகுதியை சட்டவிரோதமாக வைத்திருக்கும் சி எஸ் ஐவிடமிருந்து நிலத்தை மீட்க குழு கோரிக்கை விடுத்துள்ளது. கோவில் நிலத்தை ஹிந்துக்களிடமிருந்து பறித்து லண்டன் மிஷனுக்கு பிரிடிஷார் கொடுத்தனர். மேலும் சமீபத்தில் கோவிலின் மேலே மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. 'பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு குழு' ஈரோடு மேயரிடம் கோவிலின் மேலே மேம்பாலத்துக்கு அனுமதி மறுக்க கோரி ஒரு மனு சமர்ப்பித்தனர். பல்வேறு கட்சிகளுடைய 30 வார்டு கவுன்சிலர்கள் (நான்கில் மூன்று பங்கு)மனுவில் கையெழுத்திட்டனர். இந்த மனுவின் அடிப்படையில் அரசின் மேம்பால திட்டம் கைவிடப்பட்டது. இந்த முறை கடந்த மார்ச் மாதம் கோவில் திருவிழாவில் சுமார் 5 ,000 பெண்கள் பால் குடம் எடுத்தனர். 300 -400 பேர் கலந்து கொள்ளும் விழாவில் 5 ,000 பெண்கள் கலந்து கொண்டது அங்குள்ள மக்களின் எழுச்சியை காட்டியது. அந்த சமயத்தில் மீட்பு குழுவின் மனுவும் பரிசீலனைக்கு வந்தது. ஆர் டி ஐ மூலம் பெற்ற சான்றுகளின் நகல்கள் அந்த மாவட்டத்தின் 60 கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டது. ஹிந்துகளின் இந்த எழுச்சியை கண்ட ஈரோடு மாநகராட்சி இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. மேலும் அங்குள்ள போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்த 80 அடி சாலை போடுவதற்கும் தீர்மானம் இயற்றப்பட்டது. இது சி எஸ் ஐ வளாகத்தின் குறுக்கே வரும். 

சேவையில் இது ஒரு அற்புத வழி முறை 

சென்னை ராஜஸ்தானி இளைஞர் நடத்தும் சென்னை உணவு வங்கி அமைப்பு அண்மையில் தனி ரயில் ஏற்பாடு செய்து மன வளர்ச்சி குன்றிய 1008 குழந்தைகளை திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க அழைத்து வந்தது. இந்த அமைப்பின் புண்ணியத்தில் அன்பிற்குரிய அந்த குழந்தைகள் திருப்பதி யாத்திரை செய்ய முடிந்தது. உணவு வங்கி அமைப்பு மாதந்தோறும் 200 அன்பு இல்லங்களுக்கு 26 ,000 உணவு தானியம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசமே பெருமைப்படும் தமிழக பெண் விஞ்ஞானி சாதனை 

கோயம்பதூரை சேர்ந்த என்.வளர்மதி. இவர் ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள் திட்டம் ஒன்றின் இயக்குநராக செயல்பட்ட முதல் பெண் விஞ்ஞானி. இஸ்ரோ உருவாக்கிய, இந்தியாவின் முதல் சுயேச்சையான உளவு செயற்கைக் கோளான ரிசாட்-1 , 26 -4 -2012 அன்று வெற்றிகரமாக சுற்றுப் பாதையில் விடப்பட்டது. ரிசாட்-1 முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதாகும். இந்த ரிசாட்-1 திட்ட இயக்குநராக செயல்பட்டவர் தான், வளர்மதி. இந்த அதி முக்கிய பொறுப்பு வகித்த முதல் பெண் இவர். செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை கொண்ட (1858 கிலோ) செயற்கைக் கோள் ரிசாட்-1 ஆகும். முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளையும், எல்லை பகுதிகள், மற்றும் மேகத்தை ஊடுருவி படம் பிடிக்கும் செயல்திறன் கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் துவக்க ஒரு கோரிக்கையை லோக் சபாவில் சமர்பிக்கப்பட்டது. 











Post a Comment

1 Comments

  1. sippiyil oru muthu.............. jai bharat mathaki jai......

    ReplyDelete