சுரேஷ் பையா ஜி ஜோஷி , அகிலபாரத செயலாளர், RSS அவர்களுடன் ஆர்கனைசர் -ன் ஆசிரியர் ஸ்ரீ பிரபுல்ல கேட்கர் உரையாடல்

.பாரத நாட்டு மக்கள் பாரம்பரியமாகவே சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள பழகியவர்கள் என்பது இந்த பெருந்தொற்று காலத்தில் உலகிற்கு தெரியபடுத்தப்பட்டு இருக்கிறது ..
                   …   சுரேஷ் பையா ஜி ஜோஷி , அகிலபாரத செயலாளர், RSS.
ஆர்கனைசர் -ன் ஆசிரியர் ஸ்ரீ பிரபுல்ல கேட்கர் அவர்களுடன், சுரேஷ் பையா ஜி ஜோஷி , அகிலபாரத செயலாளர், RSS. உரையாடுதல்,.
. : ஸ்ரீ சுரேஷ் பையா ஜி ஜோஷி , அகிலபாரத செயலாளர், RSS., வார பத்திரிக்கை ஆர்கனைசர் -ன் ஆசிரியர் ஸ்ரீ பிரபுல்ல கேட்கர் அவர்களுடன்,  இந்த முழு அடைப்பு காலங்களில் சங்கம் செய்த நிவாரணப் பணிகள் மற்றும் சுதேசி, இந்தியாவை ஆத்ம்நிர்பார் (சுயசார்பு) நிலைமைக்கு கொண்டு வருதல், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை பாரத சமூகம் எதிர்கொண்ட விதம், உள்நாட்டு பிரிவினை வாதம், மற்றும் அதை சமாளிக்க செய்ய வேண்டியவை போன்ற பல விஷயங்கள் குறித்து   உரையாடினார். அவற்றில் முக்கியமான சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அறிமுகம்
இந்த இக்கட்டான தருணத்தில் நாடு முழுவதிலும், பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் அளிக்க RSS-ன் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். ஸ்வயம்சேவகர்களால் தேசம் முழுவதும் நிவராண பொருள்களும், உதவியும் கிட்ட தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த தேசத்தினை பலமிழக்க செய்யும் முயற்சியில் தேச விரோத சக்திகள் முயற்சித்தால், RSS போன்ற இயக்கங்கள் கண்டிப்பாக சமுதாயத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, அதனால் விழிப்புணர்வு இல்லா  மக்கள் இது போன்ற சக்திகளின் வலையில் விழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்.
RSS இந்த கோரானா பெருந்தொற்றிற்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்து உள்ளது. பாரத சமூகமும் இந்த பெருந்தொற்றால் ஏற்பட்ட சவாலை மிக அருமையாக ஒரு தனித்தன்மையுடன் சமாளித்து உள்ளது. இந்த ஒட்டுமொத்த  COVID-19 நிலைமையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
இவ்வளவு பெரிய உலக பெருந்தொற்று என்பது இந்த காலகட்ட மக்களுக்கு மிகவும் புதியது. ஆனால் RSS ஸ்வயம்சேவகர்கள் இந்த நாட்டில் எந்த ஒரு பேரிடர் காலத்திலும் ஓடோடி வந்து உதவியும், சேவையும் செய்து மக்களின் துயரை துடைப்பவர்கள்.  . அதையேதான் இந்த கொரானா பெருந்தொற்று காலத்திலும் அவர்கள் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் லாக் டவுன் என்னும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்த உடன், தினக்கூலிகளும், அன்றாட வேலையை நம்பி இருந்த உழைப்பாளர்களும் வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை அறிந்த ஸ்வயம்சேவகர்கள் அவர்களுக்கு உடனடி அடிப்படை உணவு, மற்றும் சமையல் பொருட்களை அளித்தனர். மேலும் இந்த முழு ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள் என்பதை உணர்ந்து இவர்களுக்கு ஒரு மாதம் , அதற்கு மேலும் தேவை படும் சமையல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது. தேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பணி நடைபெற்றது. இதன் மூலம்   நாடு முழுவதும் இந்த பணியில் 2 லட்சம் ஸ்வயம்சேவகர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் பயனாக  ஸ்வயம்சேவகர்களால் தேசம் முழுவதும் நிவராண பொருள்களும், உதவியும் கிட்ட தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  இதுதான் ஆரம்பகட்ட நாட்களில் தேவையாக இருந்தது.
நாட்கள் நகர நகர புதிய சவால்கள் எழுந்தன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த நகரம், கிராமம் நோக்கி தங்கள் வயதான தாய் தந்தையர், குழந்தைகளுடன் நடக்க ஆரம்பித்தனர். இவர்களுக்கு RSS இன் ஸ்வயம்சேவகர்கள் பல இடங்களில் உணவளித்தனர். இது அல்லாமல் பல வழிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஸ்வயம்சேவகர்கள் உதவ தொடங்கினர். அவர்களுக்கு பாதணி ஏற்பாடு செய்வது, வழிப்பயணத்தில் நோயுற்றோருக்கு மருத்துவர் மூலம் மருத்துவ வசதி ஏற்பாடு செய்வது, மருந்துகள் கிடைக்க செய்வது போன்ற பணிகளை செய்தனர். இது போன்ற பணிகள் அடுத்த 40 நாட்கள் நடந்தன. மேலும் நாட்டின் பல பகுதிகளில் சங்க ஸ்வயம்சேவகர்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் ஆலோசித்து இந்த புலம் பெயர் தொழிலார்களுக்கென  தனி பதிவு ஏற்படுத்தும் பணியினையும் ஒருங்கிணைத்தனர்.
ஸ்வயம்சேவகர்கள் தற்போதைய சூழ்நிலைக்கு என்ன செய்யவேண்டும் என்பது போன்ற விஷயங்களில் உள்ளூர் அரசு நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்தனர் , மேலும் தாங்கள் இந்த சூழ்நிலையில் இதில் எவ்வாறு தன்னார்வலர்களாக இருக்க முடியும் என்பதை கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் செயல் பட்டனர். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்ன வென்றால் சில இடங்களில் தங்கள் உயிருக்கும், உடல்நிலைக்கும் அச்சம் தரும் செயல்களில் கூட ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த பகுதிகளில் பணியாற்றி உள்ளனர், அங்கு பணி புரியும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு உதவி புரிந்துள்ளனர். மேலும் பல நகரங்களில் , போதுமான பயிற்சி பெற்று, தொற்று அறியும் பரிசோதனை பணியிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.
டெல்லி யில் பல்வேறு காரணங்களுக்கான உதவி மையங்கள் திறக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றான  வடகிழக்கு மாகான மக்கள் மற்றும் மாணவர்களுக்கான குறைகேட்பு மையம் திறக்கப்பட்டது.  துயரத்தில் வாடும் மக்களுக்கு அத்தியாவசிய பொருள் மற்றும்  உணவு வழங்கும் உதவி மையம் ஒன்றும் திறக்கப்பட்டது. இந்த விஷயத்தில் பல தர்ம ஸ்தாபனங்கள் தங்களின் உதவி கரங்களை நீட்டி உள்ளனர். கோவில்கள், \குருதுவாராக்கள், ஜைன மந்திர்கள் இந்த பணியில் தங்களை நாடெங்கும் இணைத்து கொண்டனர்.  பல இடங்களில் சுழற் சங்கமும், அரிமாசங்கமும் கூட தங்களை முழுமையாக இந்த பணியில் ஈடுபடுத்திக்கொண்டனர். இந்த இக்கட்டான கால கட்டத்தில், தேசமெங்கும். சிறு குறு, பெரும் நிறுவனங்கள் பலவும் அவர்களுக்கே உரித்தான பாணியில் தங்கள் தொண்டினை ஆற்றி உள்ளனர்.
சங்க ஸ்வயம்சேவகர்களுக்கு இது போன்ற தொண்டாற்றும் எண்ணம் எவ்வாறு தோன்றுகிறது? இதற்கென அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதா?
நாங்கள் ஒன்றும் பேரிடர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல. ஆகையால் நாங்கள் எதுவும் பிரத்யேக பயிற்சி ஒன்றும் இது சம்பந்தமாக அளிப்பது இல்லை. ஆனால் சங்க பாவத்திலேயே துயருற்றோருக்கு உதவ வேண்டும் என்பது ஸ்வயம்சேவகர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆகையால் எங்கெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஸ்வயம்சேவகர்கள் தன்னிச்சையாக  தொண்டில் ஈடுபடுகின்றனர். நாங்கள் பயிற்சியெல்லாம் கொடுப்பது இல்லை; இன்னும் சொல்லப்போனால் இது போன்ற சூழ்நிலைக்கு தேவையான உபகரணங்களை கூட நாங்கள் கொடுப்பது இல்லை. ஸ்வயம்சேவகர்கள் தன்னிச்சையாக சமூக மக்களை தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்கின்றனர்.
என்ன செய்யவேண்டும் என்பதற்கான உத்தரவுகளை கூட நாங்கள் பிறப்பிப்பது இல்லை. இதற்கான மேலிட பொது தயாரிப்புகளும் எங்களிடம் இல்லை. ஆனால் ஸ்வயம்சேவகர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தங்களுடையதாக பார்ப்பதால்; இக்கட்டான சூழ்நிலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிராமல், சூழ்நிலைக்கேற்ப தங்களை தாங்களே தயார் படுத்தி கொள்கிறார்கள்.
பல ஆர்.எஸ்.எஸ் – ஆல் உந்தப்பட்ட நிறுவனங்கள் பொருளாதார துயர் காலத்தில் அதில் இருந்து மீள பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். RSS இந்த பொருளாதார நிலைமையை எவ்வாறு பார்க்கிறது ?
பொருளாதார துயர் என்பது பலவிதமானது. புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்தல் பல பிரச்சினைகளை உருவாக்கி உள்ளது. இதற்கு தொலைநோக்கு தீர்வு என்பது அவர்கள் அவ்வாறு இடம்பெயராமல் பார்த்து கொள்வதே. இதற்கு உடனடி தீர்வானது அவர்களுக்கான வேலையை வழங்குவதே. இவர்களை பணிக்கு அமர்த்துவோர் தங்களுக்கு பணியாளர்கள் கிடைத்து விட்டார்கள் என்று மட்டும் நினைக்காமல் அவர்களுக்கான அடிப்படை தேவைகள் கிடைக்க பெற செய்ய வேண்டும். இதில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே பணி வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர். ஆகையால் அந்த மாநில அரசுகள் இவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைக்க ஒரு திட்டம் வகுக்க வேண்டும். பல அரசுகள் இதை செயல்படுத்துவதை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர்.
நாம் இப்போது திறன் முன்னேற்றம் நோக்கி செல்ல வேண்டும். உள்ளூரில் எந்த எந்த திறமைக்கு வேலை உள்ளதோ அது சார்ந்த பயிற்சி அளிப்பதன் மூலம் தொழிலாளர்கள் புலம்பெயர்தல் தடுக்கப்படும். மேலும் இதனால் வெளியில் இருந்து ஆட்களை தேட வேண்டிய அவசியமும் இல்லாமல் போகும். ஆகையால் இதற்கான சோதனையும் , நடைமுறைப் படுத்துதலையும் செய்ய நமக்கு இந்த பெரும்தொற்று வாய்ப்பை அளித்து உள்ளது. அதை நாம் உபயோகபடுத்திக்கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி அவர்கள் “ ஆத்மநிர்பார் பாரதம் “ ( சுயசார்பு பாரதம் ) உருவாக அழைப்பு விடுத்துள்ளார், இதனை ஆர்.எஸ்.எஸ் ஆல் ஈர்க்கப்பட்ட பல நிறுவனங்களும் இதனை ஆதரிக்கிறார்கள். உலகமயமாக்கல் உள்ள இந்த காலகட்டத்தில் பல நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன.  இவ்வாறு இருக்க எப்படி நம் நாடு ஆத்மநிர்பார் ஆக முடியும் ?
நாம் உற்று நோக்கினால் நம் கிராம, நகர பகுதிகளிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்கள் பல இருக்கின்றன. இதனை உணர்த்தவே பிரதமரே Be Vocal about Local  அதாவது உள்ளூர் விஷயங்களை பறைசாற்றுங்கள் என்று சரியான  பதத்தை சொல்லி உள்ளார். உள்ளூர் தேவைகளை அருகாமையில் இருந்தே அளிக்க முடியுமா என்பது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பெரிய ஆலைகளில், தொழிற்கூடங்களில் உருவாகும் எல்லா பொருட்களையும் உள்ளூரிலேயே தயாரிப்பது என்பது இயலாத காரியம் என்பது எனக்கும் புரிகிறது. ஆனால்சிறு, குறு நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு மாவட்டமும் சிறு வணிகத்தின் மையமாக கருதப்படவேண்டும்.  பெரும் வணிகத்திற்கு மாநிலம் மையமாக கருத படலாம். இதையும் தாண்டி நாம் ஒட்டுமொத்தமாக தேசம் சார்ந்தும், உலகம் சார்ந்தும்  சிந்திக்க வேண்டி இருக்கும் இருந்தாலும்  ஆத்மநிர்பார் பாரதம் ஆக வேண்டும் என்றால், மாவட்டங்கள் மையமாக்கப்பட்டு, மாவட்டம் சுயசார்புடன் சுயநிறைவு அடைவதை நோக்கி நாம் பணியாற்ற வேண்டும்.
இந்திய சீன போர் நிர்பந்தத்தால் மக்களிடையே சுதேசி எண்ணம் அதிகரித்து உள்ளது. கோடானு கோடி மக்கள்… உள்ளூர் பொருட்களையே உபயோகபடுத்துவது என்று முடிவெடுத்தால் நாடு ஆத்மநிர்பார் தேசமாக மாறவதற்கான பாதை முக சுலபமாகி விடும். இதற்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தினோமேயானால் ஆத்மநிர்பார் பாரதம் என்பது சொல்லோடு நில்லாமல் செயலாகவும் மாறும்.
நீங்கள் இந்த ஒட்டுமொத்த சூழலை பற்றிய மிக நல்ல நேர்மறை விஷயங்களை கூறி உள்ளீர்கள். ஆனால் இந்த விவாதத்திற்கான எதிர்மறை எண்ணங்களும் விதைக்கப்படுகிறது . எல்லையில் நிலவும் பிரச்சினை காரணமாக இந்த முழு விவாதமும் சீனாவை மட்டுமே  புறக்கணிக்க உலவுகிறது என்று கூறப்படுகிறது. இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
பொதுவாக இப்படிதான் பதில் இருக்கும். இப்போது ஒட்டுமொத்த உலகமும் சீனாவை நிராகரிக்க சொல்கிறது. ஆகையால், அதுதான் பாரதத்திலும் நடைபெறும். எந்த ஒரு திட்டமிட்ட பிரசாரமும் இன்றி ஒரு சாமானியன் கூட நான் சீன பொருட்களை வாங்க மாட்டேன் என்று உறுதி கொள்கிறான். ஆனால் இதை ஒரு நாட்டிற்கு எதிரான வினையாக மட்டும் கருதாமல் ஆத்மநிர்பார் க்கான பாதை என்று கொள்ளவேண்டும். ஆரம்பத்தில் இது ஒரு நாட்டிற்கு எதிரான ஒரு செயலாக தோன்றும் ஆனால் சிறுக சிறுக அந்த பொருட்களுக்கு மாற்று என்று தேவைபடும், அதனால் நாம் வேறு வழியில் நம்மிடமே மாற்று இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்க, அது நம்மை சுயநிறைவை நோக்கி அழைத்து செல்லும். இன்னும் சொல்லப்போனால் இது நம் தேசத்திற்கு மட்டுமல்ல , உலகின் அனைத்து நாடுகளுக்குமான வாய்ப்பு. இதன் மூலம் அவர்கள் தங்கள் தேவைகளை முழுவதுமாக தாங்களே பூர்த்தி செய்து கொள்ளவும் மற்றோரை சார்ந்து இராமல் சுயகாலில் நிற்க ஒரு அருமையான சந்தர்ப்பம் ஆகும்.
எல்லையில் சீனாவுடனான போர் உரசல் பல வருடங்களாக நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. இம்முறை இந்தியா இதற்கு பதிலடி கொடுத்த விதத்தில் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்? தேசம் எல்லை பாதுகாப்பு மற்றும் எல்லை உட்கட்டமைப்பு  உருவாக்கல் சார்ந்து பல விஷயங்களை சாதித்து உள்ளது . RSS இந்த நிலைமையை எவ்வாறு பார்க்கிறது?
எந்த நாடும் எல்லையில் அச்சுறுத்தல்களை தவிர்க்க எல்லை பாதுகாப்பை சீராக வைத்திருக்க தான் வேண்டும். எந்த நாடும் அண்டை நாடுடனான சச்சரவை விரும்புவதில்லை தற்போதைய சூழ்நிலையை தக்கபடி கையாள நம் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், நம் இராணுவம், பாதுகாப்பு நிபுணர்கள் உள்ளனர். இது அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படைகளின் பணிகள் ஆதலால் இதில் நாம் கருத்துக்கூறுவது என்பது சரியானதாக இருக்காது. நம் நாட்டின் ஒவ்வொரு சாமானியனுக்கும் நம் இராணுவம் இதை முறையாக கையாளும் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி முழு நம்பிக்கை உள்ளது.
இப்போது பரவலாக கணணிமயமாக்கபட்ட கல்வி பற்றி பேச்சு அடிபடுகிறது.. இது அனைவருக்கும் சாத்தியப்படாது .. RSS எப்போதும் சமுதாய நோக்கு உள்ள கல்வியே முன்னேற்றத்தின் பாதை என்று கூறி வருகிறது. இது சார்பாக சங்கமும் அதன் மற்ற இயக்கங்களும் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இந்த விஷயத்தில் நமக்கு இருக்கும் சவால் வித்தியாசமானது. இதில் இரு அம்சங்கள் உள்ளன.
ஒன்று அரசு கல்வி நிறுவனங்கள் தவிர மக்களை மட்டுமே நம்பி உள்ள பல தனியார் நிறுவனங்களும் உள்ளன. இந்த சூழ்நிலையில் இவர்கள் இயங்குவது என்பதே ஒரு சவால் தான்.  அதுமட்டுமல்லாமல் அவர்களின் முழு வருமானமும் மக்களை சார்ந்தே இருப்பதால் அவர்களுக்கு நிகழ்காலமும் வருங்காலமும் சவாலான சூழலே.
மற்றொன்று, வாழ்வில்  பின்தங்கியவர்களுக்கு கல்வி அளிப்பது. கணணிமயமாக்கபட்ட கல்வியின் புதிய சாதனங்கள் உபயோகபடுதுவதில் பல சிரமங்கள் உள்ளன. தற்போது, பழங்குடியினர் வாழும் தேசத்தின் 8% பகுதி இது போன்ற புதிய சாதனங்களை உபயோகபடுத்த முடியா பகுதிகளாக அறியப்படுகிறது. வறுமை கோட்டின் கீழ் உள்ள பெரும் பகுதியினரும் இது போன்ற நவீன கருவி உபயோக படுத்த பொருளாதார சூழல் அற்றவர்களாக உள்ளனர். ஆகையால் டிஜிட்டல் கல்விமுறைக்கென  சவால்கள் உள்ளது , ஆனாலும் இந்த சவால்களுக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும். சுய உதவி குழுக்கள் மாணவர்களுக்கு அவர்கள் இல்லங்களிலேயே கற்பிப்பதில் தங்களை ஈடுபடுதிக்கொள்வதன் மூலம் அரசின் இந்த சுமையை குறைக்கலாம். குறைந்த செலவில், தரமான கல்வி என்பதையே நாம் கொள்கையாக கொண்டுள்ளோம், இக்கால கட்டயத்தில் அதை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதற்கான வழிமுறைகளை சிந்திக்க வேண்டும். நமக்கு உடனடயாக உள்ள மிகப்பெரும் சவால் என்னவென்றால் இந்த கல்வி ஆண்டில் ஒரு மாணவன் கூட பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதே. நமக்கு இருக்கும் எல்லா திறமைகளையும் வெளிகொணர்வதன் மூலம் நாம் இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் வெற்றி பெறுவோம் என்பதில் நான் திண்ணமாக இருக்கிறேன்.
தர்ம கூடுதல், மேளா, யாத்திரை போன்றவை காலங்காலமாக பாரத மக்கள் தங்கள் கலாசாரத்தின் ஒரு அங்கமாக மேற்கொண்டு பெரும் அளவில் கூடி மகிழக்கூடிய நிகழ்வுகள் ஆகும். ஆனால் கொரோனா சூழலில்  அவ்வாறு கூட முடியவில்லை . இந்த சவாலை மக்கள் எவ்வாறு பார்க்கவேண்டும் ?
இந்த விஷயத்தில் நான் மக்களுக்கு என் மரியாதையை உரித்தாக்குகிறேன்.
இது போன்ற கூடுதல்கள் காலங்காலமான உணர்வு பூர்வமானவைகளாக இருந்தும், தங்கள் உணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டு நம் மக்கள் உடனடியாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொண்டு உள்ளார்கள். இது நம் சமுதாய மக்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்வதில் மக்கள் எவ்வளவு புரிதலும் பெருந்தன்மையும் உள்ளவர்கள் என்பது தெரிகிறது. பெரும் அளவில் கூடும் விழாக்களான பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை அல்லது சூரிய கிரகண சமய குருஷேத்திர விழாவாகட்டும்.. இவை இரண்டும் மிக பெரிய அளவில் மக்கள் கூடுதல் இல்லாமலேயே நடந்தேறி உள்ளது. இது எதை காட்டுகிறது என்றால் மக்கள் தங்கள் நம்பிக்கையை கட்டுக்குள் வைத்து தங்கள் பூஜை புனஸ்காரங்களை தங்கள் இல்லங்களிலேயே செய்து கால சூழ்நிலைகேற்ப தங்களை மாற்றி கொண்டுள்ளதை காட்டுகிறது. சவால்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும்  பாரத நாட்டின் நெறிமுறைகளின் தனித்தன்மை இதுதான். இந்த பாரத சமூகத்தின்  பாரம்பரிய வளைந்து கொடுக்கும் தன்மை இதன்மூலம் உலகிற்கு பறைசாற்றபடுகிறது.
சவால்கள் நிறைந்த சூழ்நிலைகளில் அதை RSS பல நற்காரியங்களை செய்து வருகிறது. ஆனால் எதோ ஒரு அற்ப விஷயங்களுக்காக மக்களை பிளவு படுத்தும் பல சக்திகள்  இருக்கின்றன. இவர்களை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளவேண்டும் ? இது சார்பாக RSS ஏதேனும் முயற்சிகள் எடுத்துள்ளனவா?
மக்களை பிளவு படுத்தவும் அதனால் வலிமை இழக்க செய்யவும் இது போன்ற பல தீய சக்திகள் இருப்பதை எங்களின் பல ஆண்டு அனுபவங்களில் அறிந்து உள்ளோம். இது போன்ற சக்திகள் இவ்வாறான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் அதே நேரத்தில், RSS தன் பலத்தை கூட்டி கொண்டே வருவதால்  இந்த சக்திகளை எதிர்கொள்ளும் போதுமான பலம் RSS இடம் உள்ளது. RSS இதுகாறும் ஆற்றிய நற்பணிகள் , நம் சாதுக்கள் சந்நியாசிகளின் பலம், மேலும் நம் சமுதாயங்களின் கட்டமைப்பு போன்றவைகளின் உதவி கொண்டு இது போன்ற தீய சக்திகள் அழிக்கப்படுவது திண்ணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
வாழ்வில் பின்தங்கியவர்களுக்கான சவால்களும் அதன் மீது அவர்களுக்கு இருக்கும் நெடுநாள் கவலைகளையும்  நாம் போக்க வேண்டி உள்ளது.  இவர்களை போன்றோர் தூண்டிவிடபடுவர் என்பதும் உண்மைதான். ஆனால் தீய சக்திகள் இவர்களை தேச விரோத செயல்கள் நோக்கி தூண்டிவிடுவார்களேயானால், Rss போன்ற இயக்கம் பார்த்து கொண்டு சும்மா இராது. உடனடியாக அந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்கள் தீய சக்திகளின்  பிடிக்குள் விழாமல் இருப்பதற்கான எல்லா வேலையையும் RSS செய்யும்.
இக்காலத்தில் நம் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் பாரதம் சார்ந்த ஒரு தீர்வை அளிக்க முடியும் என்று சங்கம் எப்போதும் நம்பிக்கை கொண்டு உள்ளது. இன்றைய சூழலில் அது மிகவும் உசிதமானதாகவும் தோன்றுகிறது. உங்கள் அபிப்ராயம்.
ஒவ்வொரு நாட்டின் மனோ நிலை மற்றும் சமூக கட்டமைப்பும் வெவ்வேறானது என்பது நாம் அறிந்ததே. ஆகையால் நமக்கும் இருக்கும் ஒரு பிரச்சினைக்கு இன்னொரு நாட்டை போன்று அணுகி தீர்வு காண முடியாது. ஆகையால் பாரதம் எதிர்கொள்ளும் சவாலை இன்னொரு தேசத்தின் கோணத்திலோ ,அவர்கள் உபயோக படுத்தும் சாதனம் வழியாகவோ பார்க்கவோ தீர்க்கவோ முடியாது. இது சார்ந்து சங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளது. மக்களின் மனோ நிலை இது சார்ந்து தீர்க்கமாக இருக்கும் பட்சத்தில், ஒரு குறிப்பிட்ட நிலைக்குமேல்  அவர்கள் நெஞ்சில் நஞ்சு  கலந்து யாராலும் வெற்றி பெற்று விட முடியாது. ஆகையால் தேசிய சக்திகள் இது சார்ந்து மிகவும் உழைக்க வேண்டி உள்ளது. இதற்காக சங்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்.

Post a Comment

0 Comments