நாம் தேசம் சார்ந்தவர்கள்,தேசியவாதிகள் அல்ல – டாக்டர் மன்மோஹன் வைத்யா

இன்று நம் தேசம் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் பாரத நாட்டில் ஒரு  உருமாற்றம் ஏற்படுவதை  காண முடிகிறது. இந்த நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் ஏற்படுதபட்டுள்ள அடிப்படை மாற்றங்களே இதற்கு காரணம். பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கையில் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் பாரதத்தின் பாதுகாப்பு படைக்கு ஒரு புத்துணர்வுடன் கூடிய வீரத்தை அளித்து உள்ளது. உலகம் நம் குறலை ஒரு நம்பிக்கைக்கு உரிய குரலாக பார்க்கிறது. இதன் விளைவாக அதிகமான நாடுகள் நம்மை ஆதரிக்கவும் நம்மோடு கைகோர்க்கவும் தயாராகிவிட்டன. சமீபத்தில் பாரதம் ஐ.நா வின் பாதுகாப்பு கவுனுசிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் பெருமை என்னவென்றால் மொத்தம் உள்ள 193 நாடுகளில் 184 நாடுகள் நம்மை ஓட்டளித்து ஆதரித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த மனித இனத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நாம் அறிவித்த சர்வதேச யோகா தினம் என்ற விஷயத்தை ஐக்கிய நாட்டுகள் பொது சபை ல் உள்ள அணைத்து உறுப்பினர் நாடுகளாலும் ஏற்றுகொள்ளபட்டது. நாம் சர்வதேச சூரிய கூட்டமைப்பு நோக்கி நகர ஆரம்பித்து விட்டோம். வளர்ச்சி, மற்றும் அதிகாரம் அடைதல் நோக்கி நம் தேசத்தின்  நகர்வு ஒட்டு மொத்த மனித இனத்திற்கு மட்டுமல்ல, இயற்கைக்கும் ஒரு வரமாகும். ஏனெனில் நம் உலகம் சார்ந்த பார்வை போட்டியையோ, ஒற்றுமையையோ, கருத்துக்களையோ சார்ந்து அல்லாமல்  அறைகூவல்களை மதிக்கிறது. மனித உயிர்களை மட்டுமல்ல , மனிதனின் நலன் மட்டுமல்லாது சிறிதோ பெரிதோ உலக வாழ் அணைத்து உயிரனங்களையும் பற்றும் நம் பண்டைய தத்துவார்த்த கட்டமைப்பு உள்ளடக்கி உள்ளது. “வசுதெய்வ குடும்பகம்” (உலகம் முழுவதும் என் குடும்பம்) மற்றும் “சர்வோபி சுகினா: சந்து” (அனைவரும் சுகமாக இருக்கட்டும் ) போன்ற வாசகங்களை கணக்கிட முடியா காலந்தொட்டு நமக்கு வழிகாட்டும் வாசகங்களாக அமைந்துள்ளன. சுய முன்னேற்றம் என்பதை நோக்கியே இருப்பது என்பது நம் மரபணுவிலேயே இல்லை என்ற உண்மை நம்ம மற்ற நாகரீகங்களிலிருந்து வேறுபடுத்தி காண்பிக்கின்றது .

நம் நாட்டின் பொருளாதார கொள்கை மேலும் பல சீர்திருத்தங்கள்  செய்யப்பட வேண்டியதாய் உள்ளது. ஆனாலும் உருண்டோடும் சக்கரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற விஷயம் இது ஆகையால் இது மிகவும் சுலபமானது அல்ல. இந்த உலகளாவிய பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதார சூழலில், பொருளாதார கொள்கையில் சீர்திருத்தம் என்ற பாரத நாட்டின் முயற்சிகள் தெளிவாக இருக்கின்றன. ஆனால் எழுபது வருட இயக்க முறையில் மாற்றங்கள் கொண்டு வர  அச்சமின்மையும், தீர்க்க தரிசனமும் தேவை. மேலும் இதற்கு மேற்பார்வை, பொறுமை மற்றும் சமூகமாக ஒட்டுமொத்தமாக எடுக்கும் முயற்சிகள் மீதான முடிவெடுக்கும் திறனும் தேவை. உலகளாவிய அனைவரும் ஒரே குடும்பம் போன்ற ஒற்றுமை சார்ந்த அணைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இந்த திட்டத்தில் தற்போதைய உலகமயமான எண்ணங்களை மனதில் கொண்டு இந்த நவீன யுகத்தின் முன்னேற்றங்களையும் உள்ளடக்க இயைந்தவாறு இந்த திட்டங்கள் அமைய வேண்டும். இந்த பாதியில் நம் தேசத்தின் பயணம் தொடங்கி விட்டது. பாரதம் இந்த எண்ண ஓட்டத்தின் சாராம்சம் என தன்னை வெளிபடுத்திக்கொள்கிறது ; இதை உலகமே உன்னிப்பாக உற்று நோக்குகிறது. நம்மை பொறுத்தவரை இது சர்வ சாதாரணாக உள்ளது ஆனால் உலகில் மற்றவர்களுக்கு இது மலைப்பாகவும், வியப்பாகவும் உள்ளது.

 தேசம் முழுவதிலும் இதற்கான விழிப்புணர்வு கடந்த பத்து வருடமாக ஏற்படுத்தி வரும் சூழலில் இதை தொடர்ச்சியாக தேசியவாதம் என, தன்னை தானே புத்திசாலிகள் என முன்னிருத்திகொள்ளும் அதி மேதாவிகளும், கம்யுனிச வாதிகளும், பத்திரிகையாளர்களும் முத்திரை குத்துகின்றனர். உள்ளார்ந்த அர்த்தம் என்ன வென்றால் இந்த செயல்பாடுகள் தேசம் என்கிற சொல்லை குறிக்கிறது தேசியவாதத்தை அல்ல. தேசியவாதம் என்பது பாரத நாட்டின் அகராதியிலோ, உயிரோட்டத்திலோ கிடையவே கிடையாது. இது மேற்கத்திய தாராளமய ஜனநாயகத்தின் தேசிய – அரசு என்பதில் இருந்து பிறந்ததாகும். அந்த நாடுகள் தேசியவாத நாடுகள். இவர்கள் உலகின் மீது இரண்டு உலகபோர்களை திணித்தவர்கள். இவர்களின் தேசியவாதம் என்பது பழங்காலத்தின் முதலாளித்துவ கொள்கையின் வேர்களாகும். இப்போது அடிக்கடி விவாதிக்கப்படும் சூப்பர் தேசியவாதம் கம்யுனிசத்தின் வெளிப்பாடாகும். ரஷ்யா , தான் அரைவேக்காட்டு கம்யூனிச பொருளாதார வடிவத்தை கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்தய ஆசிய நாடுகளின் மேல் திணிக்க முற்பட்டு தோல்வியடைந்து மக்களின் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. அதுபோல் தெற்காசிய நாடுகள் மற்றும் ஹாங்காங் மீது மூர்க்கமாக தன் படைகளை ஏவும் சீனா வின் சர்வாதிகார மனப்பான்மையும், தேச எல்லையை விரிவு படுத்தும் கோர திட்டம் அனைவரும் அறிந்ததே. ஆறு வெவ்வேறு நாடுகளின் 41 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா தனதாக்கி கொண்டது. சீனா உலகின் 27 நாடுகளுடன் சச்சரவில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் இந்த சூப்பர் தேசியவாத /  சர்வாதிகார போக்கை எதிர்கொள்ள உலகின் அதிகமான நாடுகள் தங்களை தயார் படுத்தி வருகின்றன.

பாரதியத்தின் உயிரோட்டம் தேச சிந்தனையை வளர்கிறது தேசியவாத சிந்தனையை அல்ல. நாம் தேசம் சார்ந்தவர்க்கள் (Rashtriya) தேசியவாதிகள் (rashtriyawadi) அல்ல. அதானால் தான்  சங்கம் (RSS) ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம், ராஷ்டிரவாதி ஸ்வயம்சேவக சங்கம் அல்ல. தேசியவாதத்தை முன்னெடுப்பது நம் கொள்கை அல்ல. தேசியம் என்ற பாரதிய கரு வாழ்கையின் கண்ணோட்டத்தில் இருக்கிறது. இங்கு  ராஷ்ட்ரம்  மக்களை தான் குறிக்கிறது அரசை அல்ல. இந்த நாட்டின் மக்கள் பலவேறு மொழி பேசுபவர்கள், பல சமுதாய அடையாளங்களை தங்கள் அடைமொழியாக கொண்டவர்கள், ஆன்மிக அடிப்படையில் உள்ளவர்கள், வெவ்வேறு கடவுளை வணங்குபவர்கள், ஆகியோர் பங்கு கொண்டு ஒற்றுமையோடு கூடிய  வாழ்க்கை கண்ணோட்டம் கொண்டவரகள். இப்படியான வாழ்க்கை கண்ணோட்டம் நம் ஆன்மாவில் இருப்பதால் இது நாம் வாழும் இந்த பெரும் நிலபரப்பில் சமூகத்தின் அணைத்து உறுப்பினர்களோடும் ஒரு பாச பிணைப்பை ஏற்படுத்த்கிறது. இந்த எண்ண ஓட்டத்தை ஏற்றும், அதற்கேற்றவாறு நம்மை மாற்றியும் கொள்வதாலும், அதனை இக்கால நடைமுறைக்கு ஏற்ப அமைத்து கொள்வதாலும் சமூக, தேசத்தின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இந்த கண்ணோட்டத்தில் நம், நமது என்று வெளிக்கொணர்வதுமே  பாரதம் கூறும் தேசம். பாரதத்தின் தேசிய கண்ணோட்டத்தை விழிப்படைய செய்யும் முக்கிய காரணி யாதெனில், நம் தேசத்தின் மேற்கூறிய பாரம்பரிய எண்ணத்தை தூண்டி;  அதன் படி நடக்க வைத்து; சகோதரத்துவ பந்தம் ஏற்படுத்தி - தன்னலமற்ற சேவையை சமுதாயத்திற்கு செய்ய தூண்டுவதே ஆகும்.  சமுதாயத்தின் எல்லா பிரிவுகளிலும் இந்த தூய்மையான தேசிய சிந்தனையை வெளிபடுத்துவது...தேசத்தினை மாற்றி ஒருங்கினைபதற்கு சமமானதாகும். தேசத்தின் நாம் நமது என்ற சிந்தனையை உணர்வதும் அதன் வெளிப்பாட்டைமேம்படுத்துவதும் தேசியவாதம் என்று தவறாக எண்ணக்கூடாது. 

சமீபத்தில் எல்லையில் பாரதத்திற்கும் சீனா விருக்கும் எல்லையில் நடைபெற்ற சண்டையில் நம் நிலப்பரப்பில் வரவிடாமல் துரத்திய இந்திய ராணுவத்தின் பராக்ரமத்தை கம்யுனிஸ்டுகள் சூப்பர் தேசியவாதம் என்று பெயர் சூட்டுகிறார்கள். இதில் அறியப்படுவது யாதெனில் கம்யுனிஸ்டுகள் பாரதத்தின் இருதயதுடிப்பான  நாம் நமது என்பதன் பொருள் புரியாதவர்களாக தான் எப்போதும் உள்ளனர்.வெகு காலமாக இந்த எண்ண ஓட்டம் மேலெழவே வாய்ப்பளிக்க படாமல் இருந்தது, இந்த தருணத்தில் அது வெளிப்படையாகவே வெளிப்பட்டது. “வசுதெய்வ குடும்பகம்” (உலகம் முழுவதும் என் குடும்பம்) மற்றும் “சர்வோபி சுகினா: சந்து” (அனைவரும் சுகமாக இருக்கட்டும் ) போன்ற வாசகங்களை நம் நாகரீகத்தின் அடித்தளமாக கொண்டது இந்த நாடு ஆகையால், போர் என்பது நம் எண்ணத்தில் இல்லை ஆனால் நம் அடையாளத்தை மீட்டெடுப்பதையும், தன்னிறைவையும், தற்சார்பையும் வலியுறுத்துவதையும்  போருக்கான அறைகூவல் என கொள்ளக்கொடாது. அது உணர்வை தட்டி எழுப்பும் செயல் அவ்வளவே. 

இதுபோன்று பாரதத்தின் சுயதன்மையை வெளிப்படையாக  எதிர்ப்பது ஒன்றும் புதிது அல்ல . சுதந்திர இந்தியாவுடன் ஜுனாகத் சமஸ்தானத்தை இணைத்தபின் அன்றைய உள்துறை அமைச்சர் ஸ்ரீ வல்லபபாய் படேல் அவர்கள் அங்குள்ள சோம்நாத கோவிலுக்கு சென்றார். 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான சோம்நாத் ஆலயம் சீரழிந்து காணபட்டதை எண்ணி மிகவும் கவலையுற்றார். அந்நியர்களின் பிடியில் இருந்து மீண்ட பாரதத்தின் இந்த அவல நிலையை போக்க எண்ணினார். இதை செயல்படுத்த நேரு தலைமையில் உள்ள அரசின் ஒரு அமைச்சரான கன்னையா லால் முன்ஷி அவர்களை பணித்தார். இதை காந்தி அவர்களிடம் சொன்னதும் இதற்கு ஒப்புக்கொண்டார் ஆனால் இதற்க்கான பணம் அரசு தரக்கூடாது பொதுமக்களிடம் இருந்தே பெற வேண்டும் என்றார். அவ்வண்ணமே மக்களிடம் இருந்து பணம் பெற்று இந்த திட்டம் நிறைவடைந்து அன்றைய குடியரசு தலைவர் திரு டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்கள் தலைமையில் பிராண பிரதிஷ்டை பூஜை நடந்தது. அவ்வமயம் அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது.  

ஆனால் பண்டித நேரு அவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்பாகவே செயல்பட்டார்.   சர்தார் படேல், மகாத்மா  காந்தி, கண்ணையா லால் முன்ஷி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற நாட்டின் பெரும் தலைவர்களால் பெருமை என்று கருத பட்ட இந்த தருணத்தை நேரு ஹிந்து மத புதிப்பித்தால் என்று கொச்சை படுத்தி வெறுத்தார். இது நாட்டின் உண்மை அடையாளங்களை கூட மறுக்கவும், குறைத்து கூறவும் வெகுநாட்களுக்கு முன்பே செய்திருக்கிறார்கள் என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஆனாலும் அக்காலத்தில் காங்கிரசில் தேசிய எண்ணம் கொண்ட பல தலைவர்கள் இருந்தனர்.   அதனால் தான் இந்த புனரமைப்பு பணி நிறைவேற்ற முடிந்தது.  ஆனால் இவர்கள் சிறுது சிறுதாக  அரசியல் தலைமையின் விளிம்பு நிலைக்கு தள்ள படவேண்டும் என்ற ஒரு செயல்பாட்டை கடைபிடித்து காங்கிரஸ் கம்யுனிசத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. ஆன்மிகம் என்ற அடிப்படியையே எதிர்க்க கூடியது கம்யூனிசம். ஆன்மிகம் மட்டுமல்ல ஒரு நாட்டை நிர்மாணிப்பதை கூட கம்யுனிசம் எதிர்த்து. தோன்றிய நாள் முதல் அது காலினிய எண்ணமான முதலாளித்துவ என்னத்தை ஆதரித்து வந்தது. முன்பு இருந்த சோவியத் யூனியன், மற்றும் இப்போது இருக்கும் சீனா அரசு கூட இதையே தான் எண்ணமாக கொண்டு தங்கள் எதேச்சதிகார உள்ளுணர்வோடு நாட்டின் பரப்பை விரிவு படுத்தும் நிலை கொண்டு உள்ளது. ஆகையால் அவர்களால் பாரதத்தின் சுய தன்மையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகையால் நாட்டை ஒருங்கிணைக்கும் எந்த ஒரு செயலையும் எதிர்க்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து மக்களை சிறு குழுக்களாகும் எண்ணத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இதனால் தேச ஒற்றுமை சீர் குலையும் என நினைக்கிறார்கள்.   
இந்த தருணத்தில் நாம் நம் தார்மீக கடமையை நாட்டுக்காக நாம் எப்படி ஆற்ற போகிறோம்? . இதற்கு 1904 குருதேவர் ரபிந்த்ரநாத் தாகூர் அவர்கள் எழுதிய ஸ்வதேஷி சமாஜ் என்ற கட்டுரை ஒரு தீர்வாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது. இது தேசியவாதத்தை எதிர்த்து எழுதப்படவில்லை என்றாலும். இது காலனியலிசத்தையும், இரண்டு உலக போர்களை உருவாக்கிய மேலை நாடுகளையும் சாடி இருந்தது. மேலும் பாரதம் சுய சிந்தனையோடு ஒரு நாடாக உருவாக வென்றும் என்ற அவரின் எண்ணம் அவரின் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகிறது . 
“சும்மா கீழே படுத்துக்கொண்டு நாம் நம்மை பாதுகாத்து கொள்ள முடியாது என்பது நம்மால் இப்பொழுது முழுவதுமாக புரிந்து கொள்ளமுடிகிறது. தற்காப்பிற்கு ஒரே வழி நாம் நம் பிரத்யேக பலத்தினை எல்லா வழிகளிலும் காட்டுவதே ஆகும். இதுவே படைப்பின் சட்டமும் ஆகும். நம் தேக்கநிலையில் இருந்து நாம் விடுபட்டு நமக்காக நாமே உழைக்க முற்படும் வரை ஆங்கிலேயர்கள் நம் எண்ண ஓட்டங்களை கட்டுபடுத்த முயன்று கொண்டே தான் இருப்பார்கள். விளிம்பில் நின்று கொண்டு உடனடி அழிவை எப்படி அழிக்கலாம் என்றிருப்பது எந்த பலனையும் தராது.
நம் ஜீவாதாரதிரற்காக வேஷம் போட்டு கொண்டு ,ஆங்கிலேயர்கள் வழியையே பின்பற்றி கொண்டு இருப்பது கிட்டதட்ட சுய துரோகமாகும். ஆங்கிலேயர்களை போல் இருந்து நாம் ஆங்கிலேயர் ஆகவும் முடியாது அவர்களின் அங்கீகரிக்கபடாத கோமாளியாக மாறி அவர்களை நாம் தடுக்கவும் முடியாது. அவ்வாறு அவர்கள் ஆதிக்கம் நடக்காமல் இருக்க ஒரே வழி மனப்பூர்வமாக, உறுதியாக, முழுமையாக மற்றும் செயல்பாட்டுடன் நாம் யார் என்று அறிந்து அதன் வழி நடந்தாலே முடியும். “ என்கிறார் தாகூர்.

 “ வெளிநாட்டு அதிரடி சக்தியின் முகத்தினை நோக்கி நம் தேக்கி வாய்த்த வீரம் வெளிப்படும் நேரம் வந்து விட்டது. ஆம் உலகத்தில் நம் வீரத்தின் தேவை என்ன என்று நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவே. நம் முன்னோர்கள் நம்மில் விதத்தை தீரம் விலைமதிப்பற்றது. அது உபயோகமின்றி வீணாக்க விதிக்கப்பட்டது அல்ல நம் ஆற்றல் வெளிபட்டே ஆக வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே இறைவன்  பாரதத்திற்கு சொல்லொணா துயரங்களை அளிக்கிறார். “ 
 “வேற்றுமையில் ஒற்றுமையை நிறுவ வேண்டும் , மாறுபாட்டில் உள்ள ஒற்றுமையை  உணரவும்வேண்டும், பாரதத்தின் (உணர்வு) வழிவழியாய் வந்த தர்மமாகும். பாரதவர்ஷம் என்றும் வெளியில் வந்தோரை எதிராக பார்த்ததும் இல்லை, வேற்றுமையை  விரோதம் என விவரித்தும் இல்லை . எந்த சமூகத்தையும் எதிராக பார்த்து பயப்படாத பண்பினை பாரதவர்ஷம் கொண்டு உள்ளது. ஒவ்வொரு புது கருத்து வேறுபாட்டோடும் உண்மையில் நாங்கள் வளர்கிறோம். பாரதத்தில்  ஹிந்து, முஸ்லிம், கிருஸ்துவர் மற்றும் பெளதர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு இறக்க மாட்டார்கள். மாறாக ஒரு கூடுதல் புள்ளியை காண்பார்கள், அதனால் ஒரு நிலையான தன்மையை உருவாக்குவார்கள். இந்த நிலையான தன்மை குறிப்பாக  ஹிந்துத்துவமானதாக இருக்கும். வேற்றுமையின் அங்கங்கள் உடலளவில் அன்னியமாக இருந்தாலும் அதன் வாழ்வும், உணர்வும் பாரதிய தன்மை வாய்ந்ததாக இருக்கும். “
பாரதத்திற்கான இந்த அமைப்பு இறைவானால் உருவாக்கப்பட்டது என்பதை நம்ப வேண்டும். அப்போதுதான் நம் வருங்காலம் பற்றிய நம் கண்ணோட்டத்தில் கவனம் செலுத்த முடியும் ; சங்கடங்களில் இருந்து மீண்டு, பாரதத்தின் அழியா சக்தியை அடையாளம் காண முடியும். ஐரோப்பிய அறிவாற்றலையும், அறிவியலையும் மட்டுமே அறிந்து அதற்கு அடிபணிந்து கொண்டே நாம் இருக்க வேண்டியதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாரதத்தில் உள்ள அறிவாற்றல் சக்தி அறிவு அல்லது ஞானத்தின் வெவ்வேறு பிரிவுகளாக ஒன்றை ஒன்று முரண்பட்டு, போட்டி போட்டு கொண்டு இருப்பவைகளை நூறு இதழ்களை கொண்ட ஒரே தாமரை போல் ஒன்றிணைக்க   வல்லது.   பாரதத்தின் மிக பிரபலமான அறிஞர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் , விஞ்ஞானத்தின் வெவ்வேறு பரிமாணம் என நினைத்து இருந்த பெளதீகம், உயிரியல் மற்றும் தாவரவியல் ஆகிய அனைத்தையும் ஒரு பரிமாணத்தில் கொண்டுவந்து சாதனை புரிந்தார். இதே அறிவியல் பரிணாமத்தில் உள்ளவியல்  மற்றும் உளவியலையும் இணைக்க அவர் அதிக நாள் எடுத்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட தக்கது. பாரதத்தின் அடிப்படை லட்சியமே இது போன்ற ஒருங்கினைத்தலே. யாரையும் ஒதுக்குதல் என்ற கொள்கையே பாரதத்தில் கிடையாது. சண்டைஇடுதலும், விலகி செல்லுதலுமாகவே பழகிய உலகிற்கு ; , அனைவரையும் ஏற்றுக்கொள்வது எப்படி,  அனைவரையும் ஆமோதிப்பது எப்படி, மேலும் தனித்தனி அத்த்யாவசியங்களை ஏற்று , பாதுகாத்து  அதை முழுமையாக ஒருங்கிணைப்பது எப்படி என்பதை பாரதம் உலகிற்கு வெளுபடுத்தும் நாள் தொலைவில் இல்லை.

இந்த பெருமைமிகு நாளின் விடியலுக்கு முன் நம் தேசத்தை அம்மா என்று அழைக்க பழகுங்கள். ஆம்  அவள் எப்போதும் நம்  தேச மக்களை அவர்தம் வேற்றுமைகளை மறந்து, நெருக்கமாக்கி, காத்து வளர்க்கிறாள். மேலும் அவள், வெகுநாட்களாக  அடிமை பட்டதால் இழப்பை சந்தித்திருக்கும் நம் ஆன்மாவிற்கு  தன்னுள் இருக்கும் ஞான பொக்கிஷத்தை  ஊட்டி நம்மை ஓய்வின்றி காத்து வருகிறாள்.”  (ஸ்வதேசி சமாஜ்)

பாரதத்தின் இந்த ஆன்ம உணர்வின் சாரங்களை  தூண்டி மீண்டும் அது பூத்துக்குலுங்க வைக்கும் நேரம் வந்து விட்டது. இறைவனால் விதிக்கப்பட்ட இந்த நடைமுறை ஆண்டவனின் அருளால் தொடங்கி விட்டது. இதன் எதிர்பாளர்கள் இதை எப்படி எதிர்க்கப்போகிரார்கள் என்பதோ, பாரத எதிர்ப்பு அந்நிய சக்திகள் இதற்காக என்ன முயற்சிக்கிறார்கள் என்பதோ இப்போது ஒரு பொருட்டே இல்லை. ஆம் சில வருடங்களுக்கு முன்னரே பாரத மக்கள் தங்களின் உறுதியான முடிவினை தெரிவித்து விட்டார்கள். புகழ்ச்சியினை நோக்கிய உணர்வுகளை புறந்தள்ளி நம் பாரதத்தின் உணர்வை மீண்டும் தூண்டுட  அடுத்தடுத்த தலைமுறை சேவகர்கள் வித்திட்டது “நாங்கள் ஒட்டுமொத்த நலன் என்ற எண்ண ஓட்டத்தின்  அமைதியான பக்தர்கள்  “ என்று சொல்வதில் இருந்து புலப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களின் முயற்சி வெற்றி பெரும். அரசியல், மற்றும் வேறெந்த விருப்பங்களையும் புறந்தள்ளி, தேசத்தின் உண்மையான அடையாளங்களின்  மறு எழுச்சி, மற்றும் மறு புனரமைப்பிற்க்கான நம் பங்கை அளிப்பதையே , இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் , தேசம் நம்மிடம் எதிர்பார்க்கிறது

Post a Comment

0 Comments