சுதேசி சுயசார்பு இயக்கம் (சுதேசி ஸ்வாலம்பன் அபியான்) பற்றி ஆர்.எஸ்.எஸ்

“சுதேசி”ஒரு முழக்கமோ அல்லது வெறும் பிரச்சாரமோ அல்ல, இது அமைதி, செழிப்பு, பாதுகாப்பு இவற்றை ஊக்குவிக்கும் ஒட்டுமொத்த சூழலின் அடிப்படை.. தற்போதைய பொருளாதார வளர்ச்சி மாதிரி (model), மனிதர்களின் நுகர்வுக்காக இயற்கையை கண்மூடித்தனமாக சுரண்டுவதற்கான கட்டமைப்புகளை உருவாகியுள்ளது, இதன் காரணமாக அமைதியின்மை, அவநம்பிக்கை, அராஜகம், அதிருப்தி ஆகியவற்றை உலகம் அனுபவித்து வருகிறது. இந்த பொருளாதார மாதிரியால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, சமூகங்கள் இந்த அமைப்பிலிருந்து முற்றிலுமாக எதிர் திசையில் செல்ல (u turn) துடிக்கின்றன. 

இந்த நாசகரமான வளர்ச்சி மாதிரியை மாற்றுவதற்காக சுதேசி ஜாகரண் மஞ்ச் இயக்கம் சார்பாக சுதேசி ஸ்வாலம்பன் அபியான் (சுதேசி சுயசார்பு இயக்கம்) தொடங்கப்பட்டுள்ளது. சங்க சித்தாந்த அமைப்புகளைத் தவிர, காயத்ரி பரிவார், ஜக்கி வாசுதேவ் அமைப்பு உள்ளிட்ட பல சங்கங்கள் ஏற்கனவே இந்த பிரச்சாரத்தை தங்கள் பணியாக ஏற்றெடுத்துள்ளன. ஏப்ரல் 26 ஆம் தேதி, மரியாதைக்குரிய சர்சங்சாலக் அவர்களும் சுதேசி குறித்து அறைகூவல் விடுத்துள்ளார். 

கடந்த 250 ஆண்டுகளைத் தவிர்த்து, பாரதம் எப்போதும் சுபிட்சமான கிராமங்களின் நாடாகவே இருந்து வந்திருக்கிறது. முன்பு, தெலுங்கானாவில் கிராமங்களிலிருந்து எஃகும் வங்க, தமிழக கிராமங்களிலிருந்து துணியும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில், விஜயவாடாவில் உள்ள ஒரு அமைப்பு 5 கோடி ரூபாய் மதிப்பிலான கோமாதா சார்ந்த பண்டங்களை தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது. சுதேசி பிரச்சாரத்தின் நோக்கம் கிராமம் சார்ந்த, விவசாயத்தை மையமிட்ட வளர்ச்சி காண்பதே., சுதேசி மீதான இன்றைய அரசின் மனநிலையிலான மாற்றம் அரசின் கொள்கைகளிலும் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்பதே அபியானின் குறிக்கோள். 

சுதேசி ஸ்வாவலம்பன் அபியான் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் எழுதிய ‘சுதேசி ஸ்வாவலம்பன் கீ ஓர் பாரத்’ (ஹிந்தி), ‘இந்தியா மார்ச்சிங் டுவர்ட்ஸ் சுதேசி அண்ட் ஸெல்ப் ரிலையன்ஸ்’ (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகங்களை ஆன்லைனில் வெளியிட்டுப் பேசுகையில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத இணை பொதுச் செயலர் (சஹ சர்கார்யாவாஹ) வி.பாகையா அவர்கள் இக்கருத்துக்களை தெரிவிவித்தார்.

Post a Comment

0 Comments