மும்பை மாநகருக்குள் ஆசியாவிலேயே பெரிய குடிசை பகுதி என்றும் தமிழர்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதி என்றும் அனைவருக்கும் தெரிந்த தாராவி இன்று கொரோனா கோரப் பிடியில் சிக்கியுள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பகுதியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கே தொற்று ஏற்பட்டு தவிக்கிறார்கள். இரண்டு முறை தொற்று தடுப்பு இயக்கம் நடந்துவிட்டது.
அண்மையில் மிகப்பெரிய அளவில் கொரோனாவுடன் மல்லுக்கு நிற்பதற்காக மூன்றாவது வெகுஜன இயக்கம் நடத்தப்பட்டது. இதற்காக மும்பை மாநகராட்சி அழைப்பின்பேரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமும் இன்னும் சில தன்னார்வ அமைப்புகளும் இதில் சேர்ந்தன. ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெருத்தெருவாக வீடு வீடாக தெர்மல் ஸ்கிரீனிங் முறையில் நோயறி இயக்கம் நடத்தப்பட்டது . இந்த நோயறி இயக்கத்தின் மூலம் சுமார் 10800 பேர் ஸ்கிரீனிங் செய்யப்பட்டனர். 200 பேர் கொண்ட இந்த குழுவில் மகளிர் பெரிய எண்ணிக்கையில் பங்கு கொண்டது ஒரு சிறப்பு அம்சமாகும்.
நாலு நாலு பேர் ( ஒருவர் டாக்டர்; மூவர் தன்னார்வலர்கள்) கொண்ட 50 அணிகள் தயாராயின. முதலில் மூன்று நாளைக்கு இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டார்கள். அதன் பிறகு இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முழு உடல் கவச உடையும் முக கவசமும் சானிடைசர்களும் வழங்கப்பட்டன. கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி என்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. ஸ்கிரீனிங் நடத்தும் பணிகளில் சேர மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நோயறி இயக்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முடிந்தது என்றால் காரணம் ஆர்எஸ்எஸ்ஸின் அழைப்பின் பேரில் ஊர்க்காரர்கள் மனமுவந்து ஒத்துழைத்தது தான்.
0 Comments