சீனாவை தெரிஞ்சிக்கோ, கம்யூனிசத்தை புரிஞ்சிக்கோடா தம்பி

சீனாவின் டியனன்மென் சதுக்கப் போராட்டம் & படுகொலைகள் 

தம்பி: அண்ணே நல்லாருக்கீங்களா? 

அண்ணன்: கரோனா பாதிக்காம நல்லாதான் இருக்கேன் தம்பீ. 

தம்பி: அதான் வெசாரிக்கலாம்னு..ஆமா, புதுசா ஏதாவது செய்தியுண்டா அண்ணே? 

அண்ணன்: சுடச்சுடச்செய்தி சீனா தான். சீனாவ நெனச்சாத்தான் மனசு பொறுக்க மாட்டேங்குது. எல்லைல அத்துமீறறாங்க, படை, ஆயுதக்குவிப்புன்னு ஒரே பதற்றம் தான். 

தம்பி: எப்பிடி அந்த சீன அதிபரால இப்பிடி செய்ய முடியுது? சமீபத்தில தான மஹாபலிபுரம் வந்து மோடிஜீயும் அவரும் சந்திச்சு பேசினாங்க. அதுக்குள்ள இப்படி ஒரு நாட்டு அதிபரால மாற முடியுமா? 

அண்ணன்: சீனா யாரப்பத்தியுமே எதப்பத்தியுமே கவலப்படாம, அவங்களோட அரசியலுக்காக எத்த வேணும்னாலும் செய்வாங்க தம்பீ. ஒருதடவ, பீகிங்லயே டியனன்மன் சதுக்கத்துல சீன மாணவர்கள் அரசுக்கு எதிராக சேர்ந்தாங்கன்னு, சின்னப்பசங்கன்னும் பார்க்காம பல்லாயிரக்கணக்கில சுட்டுத்தள்ளினவங்க தானே? 

தம்பி: அவங்க நாட்டு மாணவர்களையேவா? எப்ப நடந்தது இது? 

அண்ணன்: நீ பொறக்கறதுக்கு முன்ன நடந்த சமாச்சாரம் தம்பீ, அதான் ஒனக்கு தெரியல. விவரமெல்லாம் சொல்லுறேன்... கேட்டுக்க. 

ஹூ யோபங்க், ஒரு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். அரசியல் சுதந்திரத்திற்கும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கும் பாடுபட்டவர் ஏப்ரல் 15, 1989ல இறந்துட்டாரு. அவரது கருத்துகளால ஈர்க்கப்பட்ட மாணவர்கள், சீனாவின் தலைநகரான பீகிங்கின் மையத்திலுள்ள, டியனன்மென் சதுக்கத்தில் கூடி ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அரசு வேண்டுன்னும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராகவும் ஆர்பாட்டம் செய்சாங்க.. 

மே 15, 1989ல் 100 மாணவர்கள் பட்டினிப்போராட்டம் ஆரம்பிச்சாங்க. அதற்கு ஆதரவு கூடிக்கூடி மே 19, 1989 அன்னிக்கி ஒரு லட்சத்துக்கும் மேல மக்கள் பேரணியாக கூடிட்டாங்க. சீன கம்யூனிஸ்டு கட்சியோட தலைவரு ஷோஸியாங் அங்கே வந்து ஆர்ப்பாட்டத்தை முடிச்சுக்கச் சொல்லி கோரிக்கை வெச்சாரு.ஆனா, அன்னிக்கே ஜனாதிபதி லீபெங் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி புகுத்திட்டாரு. அதேசமயம், அதை மீறி ஜூன்2, 1989 அன்னிக்கி போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக 1லட்சம் ஜனங்க டியனன்மென் சதுக்கத்தில் ஹூ தேஜியன் என்ற பாடகரோட கச்சேரியில கலந்துகிட்டாங்க.. அதற்குமுன்னால ஜூன் 1, 1989 அன்னிக்கே சீனா , அமெரிக்க செய்தி ஒளிபரப்பு மற்றும் CNNஐ முடக்கிடுச்சு. போராட்டத்தையோ, சீன ராணுவத்தையோ போட்டோவோ வீடியோவோ எடுக்கறதுக்கு தடைவிதிச்சது. 

தம்பி: அப்படியா, இத்தன நாள் தெரியாம போச்சே 

அண்ணன்: ஜூன் 4, 1989 அதிகாலை ஒரு மணிக்கு சீன ராணுவம் டியனன்மென் சதுக்கத்தை வளைச்சுவச்சு, அன்னிக்கு முழுக்க அங்குவந்த மாணவர்கள் மற்றும் பொதுஜனங்க மேல துப்பாக்கிச்சூடு நடத்தி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிச்சது. அதுக்கு அப்பறமும் போராட்டத்தில சம்பந்தப்பட்டதாக ஏகப்பட்ட பேரை கைது செஞ்சு, ஜெயில அடைச்சு கொலைதண்டனை கொடுத்துச்சு. அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் எண்ணிக்கையும் இன்றுவரை வெளியிடல. இன்னிக்கிவரை டியனன்மென் சம்பவம் குறித்த எந்தவொரு பேச்சிற்கும் ஆய்விற்கும் இடம் கொடுக்காம வெச்சிருக்கு பாஸிச சீன கம்யூனிச அரசு. 

சீனாவில் எந்தவித போராட்டத்துக்கும்துளிகூட இடம்கொடுக்காம ஜனநாயகப்படுகொலைகளை அரங்கேற்றிய கம்யூனிஸ்டுகள் தான் ,நம்ம பாரத தேசத்தில மட்டும் எந்தவொரு நல்ல விஷயமும் நடக்கவிடாம தொடர்ச்சியா போராட்டங்களைத் தூண்டிவிட்டுக்கிட்டு வற்றாங்க. 

அண்ணே! ஒரு சந்தேகம். 

சொல்லு தம்பி

நம்ம ஊர்ல செங்கொடி பிடிச்சுக்கிட்டு ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் அப்படீன்னு தெருத்தெருவா அலையுராங்களே, இவங்க எல்லாம் அந்த தியானன்மென் மாணவர்களின் ஜனநாயக கோரிக்கைக்கு ஆதரவா? 

தம்பி, நம்பி மோசம் போயிடாதே. இவங்களெல்லாம் அந்த பாசிச பூதம், அதான், அந்த சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எடுபிடிகள். நல்லா புரிஞ்சிக்கோ! வர்ட்டா?

Post a Comment

0 Comments