தமிழன் அறிய வேண்டிய தலைவர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி

சேதுபதி: ராஜேந்திரா, பாண்டியா! இன்னிக்கு பேப்பர் பாத்தீங்களா?

பாண்டியன்: அப்படி என்ன புதுசா வந்திருக்கு பேப்பர்ல? 

ராஜேந்திரன்: நாளுக்கு நாள் மக்களுக்கு சீனாக்காரன் மேல கோபம் அதிகமாகிட்டே போகுதாம். 

சேதுபதி: நான் அத சொல்லல. இன்னிக்கு ’சியாமா பிரசாத் முகர்ஜி பலி தான நாள்’ அப்படின்னு போட்டுருக்கு. யாருப்பா இந்த முகர்ஜி? 

பாண்டியன்: அவரு கல்கத்தாவில பிறந்தாரு. 33 வயசிலேயே கல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆனார். அவ்வளவு நல்ல படிப்பாளி. 

சேதுபதி: அது சரி, பலிதான நாள் அப்டீன்னா? 

பாண்டியன்: அவர் உயிரை தியாகம் செய்த நாள்.

ராஜேந்திரன்: அவர் உயிர் பிரிந்தது எங்க? 

பாண்டியன்: காஷ்மீர் ஜெயில்ல.

ராஜேந்திரன்: இவரு ஏன் அங்க போனாரு? 

பாண்டியன்: நாட்டுக்கு சுதந்திரம் வந்த புதுசுல காஷ்மீரில் பிரிவினைவாத கொம்பன்கள் காஷ்மீருக்கு தனி கொடி, தனி பிரதமர், தனி அரசியல் சாசனம் எல்லாம் வச்சுக்கிட்டு ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க.

சேதுபதி: இவரு போனதால என்ன ஆச்சு?

பாண்டியன்: அப்பல்லாம் இந்தியனே காஷ்மீருக்குள் போகணும்னா கூட அனுமதி வேணும். அனுமதி வாங்காமல் முகர்ஜி காஷ்மீரில் நுழைந்து சத்தியாக்கிரகம் செஞ்சார்.

ராஜேந்திரன்: அவர ஜெயில்ல போட்டாங்களாக்கும். 

சேதுபதி: பாண்டியா! முகர்ஜி ஜெயில்லியே பலிதானம் ஆனார்னு சொன்னியே, அது என்ன விஷயம்? 

பாண்டியன்: அப்போ காஷ்மீர் முதலமைச்சர் ஷேக் அப்துல்லா. அதான், நம்ம பரூக் அப்துல்லாவின் அப்பா; உமர் அப்துல்லாவோட தாத்தா! ஷேக் அப்துல்லா தர்பார் ல தேசிய ஒருமைப்பாடு, தேசபக்தி இதுக்கெல்லாம் ஏது இடம்? முகர்ஜி 1953 ஜூன் 23 ந்தேதி காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கு முடிவு கட்ட தன் உயிரைக் கொடுத்தார். அது மர்மமான மரணம். இன்றுவரை அந்த மர்மம் நீடிக்கிறது. 

சேதுபதி: அது சரி, முகர்ஜி செஞ்ச சத்தியாகிரகத்துக்கு பலன் கிடைச்சுதா?

பாண்டியன்: கிடைச்சுது. 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி நம்ம நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை செல்லாத தாக்கி காஷ்மீரின் தனி அந்தஸ்தை ஒழித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு சட்டத்திருத்தம் நிறைவேற்றியதே, அன்னைக்கித்தான் முகர்ஜி போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.

சேதுபதி, ராஜேந்திரன் இருவரும்: கொசுறு உண்டா பாண்டியரே, காய்கறிக்கடைக்காரர் ஆயிற்றே நீங்க?

பாண்டியன்: கொசுறு இல்லாம காய் ருசிக்குமா? இதோ கேட்டுக்கோங்க!

** பிரதமர் ஜவகர்லால் நேருவைப் பார்த்து, “நீங்கள் ஹிந்துஸ்தானத்தைப் பிளந்தீர்கள். நான் பாகிஸ்தானைப் பிளந்தேன்” என்று கூறினார் முகர்ஜி. வங்காளத்தின் ஹிந்து பெரும்பான்மைப் பிரதேசங்களை கிழக்குப் பாகிஸ்தானில் சேர்த்துவிடாமல் தடுத்தவர் முகர்ஜி. அவர் தடுத்திருக்காவிட்டால் இன்று கல்கத்தா வங்கதேச நகரமாகியிருக்கும்.

** ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார் ’பாரத தேசத்தின் தன்மை ஹிந்துத்தன்மை’ என்பதை முகர்ஜியிடம் எடுத்துக் கூறிப் புரியவைத்தார். இதை அடுத்து முகர்ஜி ஶ்ரீகுருஜி கோல்வல்கர் ஆசி கூறி அரசியலுக்கு அனுப்பிய தீனதயாள் உபாத்யாய என்ற ஸ்வயம்சேவகருடன் இணைந்து பாரதிய ஜன சங்கம் தொடங்கினார். அது பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியாக (BJP) பரிணாம வளர்ச்சி பெற்றது.

சேதுபதி, ராஜேந்திரன் இருவரும்: அண்ணாச்சி, அதுதான் அர்த்தமுள்ள வளர்ச்சி! காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஒழிப்புதான் அர்த்தமுள்ள வெற்றி!! அது சரி, பாண்டியரே! கையில என்ன புத்தகம்?

பாண்டியன்: ’அர்த்தமுள்ள இந்துமதம்’. நாளைக்கு (ஜூன் 24) கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள். நம்ம மன்றத்தில பத்து நிமிஷம் பேசச் சொல்லியிருக்காங்க. அதுக்காகத்தான். வர்ட்டா?

Post a Comment

0 Comments