ஜேஷ்ட சுக்ல த்ரயோதசி எனும் வைகாசி வளர்பிறை பதின்மூன்றாம் நாள் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முடிசூட்டி கொண்ட நாள் .. அதுவே ஹிந்து சாம்ராஜ்ய தினமாகும்.
-சத்திரபதி சிவாஜிமஹராஜ் முடி சூட்டி கொண்டது என்பது சிவாஜி மகாராஜ் அவர்களின் வெற்றியை மட்டும் குறிப்பது அல்ல, மாறாக அது ஹிந்து ராஷ்டிரத்தின் வெற்றியாகும்.
-சிவாஜி மகராஜின் பதவிஏற்பு ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது. அது அதிகாரம் பெற்று கொள்ளையடிக்க எண்ணம் கொள்ளவில்லை மாறாக இருக்கும் இழிநிலையை மாற்றிகொள்ளாதோரை ஒழித்து, சகிப்புத்தன்மை உடையோரையும், அமைதி விரும்போவோரையும், அஹிம்சாவதிகளையும், எல்லாரையும் அரவனைப்போரையும், காத்து, மனிதகுலத்தின் மாற்றதினை முன்னெடுத்தது. அது இந்தியாவின் தத்துவங்களை அழிக்கவும், மத எதிர்ப்பை உருவாக்கவும், பிறவினை நோக்கம் கொண்ட படையெடுப்பை ஏற்படுத்தவும் இருக்கும் மதத்தையும், தத்துவத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றது. சிவாஜி மகராஜ் அரியணை ஏறியது மேற்கூறிய 500 வருட பிரச்சினைகளை தீர்த்தது .
- ஹிந்து சமுதாயத்தினை ஒருங்கிணைக்கும் எல்லா முயற்சி மற்றும் பரிசோதனைகளின் ஒட்டுமொத்த தீர்வு சிவாஜி மகாராஜ் அறியேனை ஏரிய விஷயமேயாகும்.
- மகாராஷ்டிரா மக்கள் சிவாஜி மகராஜ் அரசாள வேண்டும் என்று நினைத்தது என்பதென்னவோ உண்மைதான். ஆனாலும் இந்த எண்ணம் அவர்களிடம் மட்டுமல்ல , இந்த நாட்டில் இருந்த சந்நியாசிகள் அனைவரும் கூட இதையே தான் நினைத்தனர். ஆம் சிவாஜி மகராஜ் பதவி ஏற்பதால் தர்மம் நிலைநாட்டப்படும் என்று அவர்கள் நம்பினர். ஜிஜா அன்னை தன் மகன் ஹிந்து மக்களை அனைவரையும் வழிநடத்தி செல்ல தகுதியானவன் என்று நம்பினார். கோயில்கள் சூறையாட படுவதையும் , அவை அழிக்க படுவதையும் கண்டு காசி விச்வேச்வரர் கோயில் பரம்பரை பூசாரிகளின் வாரிசான காகாபட் , வருத்தமுற்று...இதை யாரால் தடுக்க முடியும் என்று விசாரிக்க ஆரம்பித்து , சிவாஜி மகராஜ் பற்றி கேள்விப்பட்டு மகாராஷ்டிரா வந்தடைந்தார். நாசிக்கில் இருந்து சிவாஜி மகராஜின் அரசவை வரும் வழியில் மகாராஜ் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்ததொடல்லாமல், அவர்தம் அரசாட்சின் நிதர்சனங்களை நேரடி அனுபவம் மூலமாகவும் அறிந்தார். இதன் காரணமாக அவர் சிவாஜி மகராஜை சந்தித்த நிமிடத்தில் சொன்னார் “நீங்கள்தான் அரியணை ஏறவேண்டும் “ என்று. ஆகையால் சிவாஜி மகராஜின் முடி சூட்டுதல் என்பது மகாராஷ்டிரா அளவில் மட்டும் சமந்த பட்டது அல்ல.
-சிவாஜி மகராஜ் அவர்களின் அறியனையேற்றம் , அவர் முயற்சிகளின் நோக்கமாகும். அது ஒட்டுமொத்த ஹிந்து ராஷ்டிரத்தின் அறைகூவலாகும். சிவாஜி மகராஜின் முடி சூடுதல் என்பதே வெற்றியின் பாதை , அதையே அனைவரும் ஏற்போம் என்பதே இதன் நோக்கமாகவும் உள்ளது.
-சிவாஜி மஹாராஜா ஒரு முறை தெற்கே குத்துப்ஷா வை சந்தித்து விட்டு வரும்போது ஸ்ரீசைல மல்லிகார்ஜுன கோவிலுக்கு வந்தார் . அங்கு சிவா பெருமானை தரிசித்த மகாராஜ் புளகாங்கிதம் அடைந்து தன்னையே மறந்தார். உடனடியாக தன் வாளை எடுத்து தன் தலையை கொய்து தன்னையே சிவனுக்கு காணிக்கையாக்க நினைத்தார். அங்கிருந்த அவரின் மெய்காப்பாளர்களும், அமைச்சர்களும் அவரை தடுத்து அவரை காத்தனர். இதில் இருந்து நாம் அறிவது... சிவாஜி அவர்கள் எதையும் தன்னலமற்று செய்வார் என்பதே. அவர் என்றும் தன் புகழுக்காகவோ, தன்மீது மற்றோருக்கு இருக்கும் மதிப்பு கூடவேண்டும் என்றோ அதிகாரம் பெறவேண்டும் என்றோ போரிட்டதில்லை. அது அவர் சுபாவத்திலேயே இல்லை. தன்னலம் இல்லாதது மட்டுமல்ல, அவர் தன்னை தன் சொந்த வாழ்க்கையோடு இணைத்து கொள்ளவே இல்லை எனவும் கூறலாம்.
- சிவாஜி அவர்களின் நிர்வாகம் கண்டிப்பானது ஆனால் அது பொதுமக்கள் நலனுக்காகவும், அறிவு சார்ந்தும், மக்களுக்கானதாகவும், கருணை அடிப்படை கொண்டதாகவும் இருந்தது. சிவாஜி மஹாராஜா ஒரு தலைசிறந்த, உற்ற தலைவர். அவர் எதிரிகளால் கூட நிந்தை செய்ய முடியாததும், குற்றம்காண முடியாததுமான குணம் கொண்டு இருந்தார்.
0 Comments