ஆல் பாஸ்! ஆனால் ஆல் ஹேப்பி?

· ரேங்க் எடுத்து எதிர்கால படிப்பில் முன்னேற நினைத்த மாணவ-மாணவிகளுக்கு ஏமாற்றம். 

· காலாண்டு அரையாண்டு தேர்வுகளுக்கு பல மாணவர்கள் முழுமூச்சில் தயாரிப்பதில்லை, ஆண்டு தேர்வுக்காகத்தான் சிறப்பாக தயார் செய்வார்கள்; காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை ஆதாரமாகக் கொண்டு மார்க் போட்டால் என்ன ஆவது என்று பல மாணவர்களுக்கு கவலை. 

· தேர்வு எழுதாமல் தேர்ச்சிபெற்றமாணவன் என்று ஒரு முத்திரை பல மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. 

· தேர்வு கால கண்காணிப்பு பணி, விடைத்தாள் திருத்தும் பணி இவற்றுக்கான ஊதியம் கிடைக்காமல் போகிறது என்று சில ஆசிரியர்களுக்கு எண்ணம். 

· ஆனால் கொரோன்னா காலகட்டத்தில் தேர்வு நடத்தி மாணவர்களையும் பெற்றோர்களையும் தங்களையும் ஆபத்துக்கு உள்ளாகாமல் இருந்ததுகுறித்து பல ஆசிரியர்கள்நிம்மதி அடைகிறார்கள்ப 

· பள்ளி மாணவ மாணவிகளுக்கு மட்டும்தான் ஆல் பாஸ் என்பது அநியாயம், எங்களுக்கும் தான் உயிர் உள்ளது, எங்களுக்கும் ஆல் பாஸ் போட்டால் என்ன? இது சில கல்லூரி மாணவர்களின் கேள்வி. 

· எங்களுக்கு உயிர் மட்டுமல்ல வாக்குகளும் உண்டு என பல கல்லூரி மாணவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இது அரசுக்கும் தெரியும் என்று சொல்கிறார்கள்! 

Post a Comment

0 Comments