நல்ல செய்தி -15

மழலையரின் மலர்ந்த முகங்கள் செய்த மாயம்!

சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ ஊழியராகப் பணியாற்றி வரும், 'டயாலிசிஸ் டெக்னீஷியன்' தம்பிதுரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் முழு அர்ப்பணிப்புடன், குழந்தைகள் டயாலிசிஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த மானியதல்லி கிராமத்தை சேர்ந்த தம்பிதுரை. பார்மா துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படித்தவர். இதோ, அவர் வார்த்தைகளாலேயே கேட்போம்..., "வேலையில சேர்ந்த புதுசுல, டயாலிசிஸ் வேலைகளைப் பாக்குறது மனசுக்குக் கஷ்டமா இருக்கும்.அதுலயும் குழந்தைகளுக்குச் செய்யும்போது, ரொம்ப பாரமா இருக்கும். குழந்தைகளுக்கு, டயாலிசிஸ் செய்யும்போது, குழந்தைங்க வலி தாங்காம அழுதா, அதைப் பார்க்க முடியாம, நான் கண்ணை மூடிக்குவேன். ஆனா, டயாலிசிஸ் செய்த பிறகு குழந்தைங்க முகத்துல சிரிப்பைப் பார்க்கும்போது, எனக்குள்ள ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்கும். அந்தச் சிரிப்புக்காக இந்த வேலையை இன்னும் அர்ப்பணிப்போடு பார்க்க ஆரம்பிச்சேன்.

Post a Comment

0 Comments