நல்ல செய்தி - 13

கடைக்காரர்களின் கண்ணீர் துடைத்த பட்டுக்கோட்டை டாக்டர்

பட்டுகோட்டை நகரப் பகுதியில் 'பத்து ரூபாய் மருத்துவர்' என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் டி.ஏ. கனகரத்தினம் அல்லது டி.ஏ.கே.ரத்தினம் (83), நகரத்தின் நடுவில் அமைந்துள்ள தனது நர்சிங் ஹோமில் ஆலோசனைக் கட்டணமாக வெறும் ரூ .10 மட்டுமே வசூலிக்கிறார், இந்த நர்சிங் ஹோம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவை செய்கிறது..

அவர் ஏற்கனவே தனது பரோபகார நடவடிக்கைகளுக்காகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், டாக்டர் ரத்தினம், கொரோனா தொற்றுநோய் ஊரடங்கு காலத்தில், தனது மனிதாபிமானத்தை மீண்டும் வெளிபடுத்தியுள்ளார், பட்டுக்கோட்டையில் உள்ள பெரிய தெருவில் உள்ள மருத்துவமனைக்கு அருகிலுள்ள வணிக வளாகத்தில் தனது குத்தகைதாரர்களிடமிருந்து, மூன்று மாத வாடகையைத் தள்ளுபடி செய்தார்.
ஊரடங்கு காலத்தில் சிரமங்களை எதிர்கொண்ட கடைக்காரர்களுக்கு மிகுந்த நிம்மதி.

மருத்துவரின் நெருங்கிய நபர்களின் கூற்றுப்படி, அவர், சேவை அடிப்படையில் மருத்துவமனையை நடத்தி வருகிறார், மேலும் அவர் ஏழைகளுக்கு, மருந்துகளை இலவசமாகவும் வழங்குகிறார். ஆலோசனைக் கட்டணமாக வெறும் ரூ .10 வசூலிப்பதால், கர்ப்பிணிப் பெண்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் அவர், பொதுவாக, சுகப்பிரசவங்கள் மூலமாகவே குழந்தை பேறு கிடைக்கும் வகையில் மருத்துவம் பார்ப்பதால், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் திரளுகிறார்கள், புதிய தாய்மார்கள், ஒருபோதும் அவரிடம் ஆசிபெறுவதைத் தவறவிட மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

Post a Comment

0 Comments