தாய்நாட்டை விட்டுக்கொடுக்காத விளையாட்டு வீரர்கள் அன்றாட வாழ்வில் அவர்களின் தேசபக்தி


கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. பல மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களுக்கான கடமையில் உள்ளனர். அதே சமயத்தில், சில விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைத்த கௌரவ காவல்துறை பதவிகளை ஏற்றுக்கொண்டு மக்களுக்காக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். விளையாட்டு வீரர்களின் தேசபக்தியை முதன்மைப்படுத்தும், பழையதும் புதியதுமாய் கலந்த சில சம்பவங்களின் தொகுப்பு இதோ !

அஜய் டாகுர்கபடி




இந்திய கபடி அணியின் கேப்டன் அஜய் டாகுர், கொரோனா ஊரடங்கு சமயத்தில், ஹிமாச்சல பிரதேசத்தில் மாவட்ட துணை கண்காணிப்பாளராகபணியாற்றுகிறார். ஹிமாச்சல பிரதேசத்தின் தெருக்களில் ரோந்து செல்லும் அணிகளை வழிநடத்துகிறார். 2016 ஆம் ஆண்டில் கபடிப் போட்டியில், உலகக் கோப்பை வெற்றிக்கு இந்தியாவை வழிநடத்திய அவர், கொரோனா கிருமி தடுப்புப்பணிகளில், நாட்டை வழிநடத்தும் பொறுப்புகளில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார்.

ஜோகிந்தர் சர்மாகிரிக்கெட்


2007ல் நடந்த டி 20 உலகக் கோப்பையின் கடைசி ஓவரை வீசியவர் ஜோகிந்தர் சர்மா. அவரது பந்துவீச்சு இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்தியாவுக்கு உதவியது. அதற்காக அவருக்கு ஹரியானா காவல்துறையில் பதவி வழங்கப்பட்டது. இப்போது அவர் மாவட்ட துணை கண்காணிப்பாளராக ஹரியானாவில் கொரோனா கிருமிக்கு எதிரான பணிகளில் தலைமை தாங்குகிறார்.



அகில் குமார்குத்துச்சண்டை

இந்திய குத்துச்சண்டையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற ஆரம்பகால விளையாட்டு வீரர்களில் அகில் குமார் ஒருவர். அவர் கோதாவிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஹரியானா காவல்துறையில் பணியாற்றி வருகிறார். ஹரியானாவில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் என்ற வகையில், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் அகில் குமாரின் பங்களிப்பு மிகப்பெரியது.

ஜிதேந்தர் சிங்குத்துச்சண்டை

குத்துச்சண்டை சாம்பியன்கள். குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கும் மாவட்டமான ஹரியானாவில் உள்ள பிவானியைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங். வெற்றிகள் நிறைந்த வாழ்க்கைக்குப் பிறகு, அவர் ஹரியானாவில் மாவட்ட துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிராக மக்களைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளில் இவரும் ஒருவர். 

மகேந்திர சிங் தோனி - கிரிக்கெட் 

மகேந்திர சிங் தோனிக்கு தேசம்,தேசத்தின் ராணுவம் என்றால் உயிர். இவர் பெயர் தேசபக்தியுடன் இணைந்தே ஒலிக்கும். பல விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்புப் படைகளில் கௌரவ பதவிகள் வழங்கப்பட்டாலும், தோனி அதை காரியமாக  (சீரியஸாக) எடுத்துக் கொண்டார். 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு, தோனி, நமது  ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற சென்றார்.

தோனி கடைசியாக 2019 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார். தோனி 2016 ல் டி 20 உலகக் கோப்பையில் பங்களாதேஷை சேர்ந்த ஷபீரை ஸ்டம்பிங் செய்திருந்தார். தோனியின் அற்புதமான விக்கெட் கீப்பிங் தான் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது. 

இதை அனுபவித்த ஷபீர், 2019 உலகக் கோப்பை ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வந்தபோது கவனமாக இருந்தார். எதிர்பார்த்தபடி அவரை மீண்டும் ஸ்டம்பிங் செய்ய வாய்ப்பு இருந்தது, ஆனால் ஷபீர் இம்முறை விக்கெட்டை இழக்கவில்லை. அவர் தனது விக்கெட்டைக் காப்பாற்றிய பின்னர் "இப்ப் கதையே வேற" என்று நகைச்சுவையாக கூறினார். 

விளையாட்டு மைதானத்திலிருந்து வெளியேறும் சிக்ஸர்களை சளைக்காமல்அடிக்கும் தோனியின் திறனைக் கண்டு ஷபீருக்கு பிரமிப்பு.. அவர் சொல்கிறார்: "உங்க மட்டையின் ரகசியம் என்ன என்று கேட்டேன். பெளன்ட்ரி எல்லையை கடக்க நாங்கள் திண்றுரோம், நீங்க எதை அடித்தாலும் அது சிக்ஸர். அது எப்படி?’ எனக் கேட்ட போது, ’மனசு வச்சா போதும்’ என்று தோனி கூறினார்". 

"இந்தியாவிற்க்கு எதிரான போட்டியில் தோனியின் கிரிக்கெட் மட்டையை கொடுக்குமாறு ஷபீர் கேட்க, கொடுப்பதாகவும், ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஷபீர் அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியிருந்தார்., ஷபீர், "நான் மற்ற அணிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறென்,” என்று கூறினார். 

எந்த ஒரு உரையாடலிலும், தனது தேசபக்தியை விட்டுக்கொடுக்காத தோனியின் பண்பு, நாட்டை முதலிடத்தில் வைத்திருக்கும் அவரது சிந்தனையின் பிரதிபலிப்பு !
குற்றாலீஸ்வரன் - நீச்சல்

அது 1994 ஏப்ரல். தமிழகத்தை சேர்ந்த குற்றாலீஸ்வரன், பாக் ஜலசந்தி [ராம சேது] நீர் வழியை. இலங்கையின் தலைமன்னார் முதல் இந்தியாவின் தனுஷ்கோடி வரை 10மணி நேரம் 30 நிமிஷத்தில் கடந்து சாதனை புரிந்த போது வயது 12 தான். பாரத அரசின் அர்ஜுனா விருதை [1996] இளம் வயதிலேயே பெற்றவர் இந்த சென்னை சிறுவர். நம் குற்றாலீஸ்வரன் 2004 ல் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்த விதம் இது: “மரத்தான் நீச்சல் ஆஸ்திரேலியாவிலும் இத்தாலியிலும் அமெரிக்காவிலும் பிரசித்தம். ஒரு போட்டியில் கலந்து கொள்ள இத்தாலி சென்றிருந்தேன். என்னை இத்தாலி அணிக்காக நீச்சலடிக்கும்படி இத்தாலி அரசு கேட்ட்போது, மறுத்தேன்; ஏனென்றால் சொந்த தேசத்திற்காக ஆடுவது தான் பெருமிதம், திருப்தி எல்லாம். அந்த உணர்ச்சிக்கு ஈடுமில்லை இணையும் இல்லை என்பேன் (And let me tell you, the feeling is unparalleled)”.

விஸ்வநாதன் ஆனந்த் – சதுரங்கம் (செஸ்)

ஏப்ரல் முதல் வாரம். அது ஊரடங்கு மட்டுமல்ல, உலக அடங்கு. முன்னாள் உலக சதுரங்க (செஸ்) சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் ஊரடங்கால் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. போக்குவரத்து மீண்டால்தான் பாரதம் திரும்ப முடியும். ஆனந்த் அங்கிருந்தபடி இணைய தளத்தில் ஒரு போட்டி நடத்தினார்.

ஒரே நேரத்தில் ஆறு கிராண்ட்மாஸ்டர்கள் உள்பட 19 பேர் செஸ் போட்டியில் கலந்து கொண்டார்கள். இதைப் பார்க்க கட்டணம் விதிக்கப்பட்டது. சில மணி நேரத்தில் நாலரை லட்ச ரூபாய் சேர்ந்த்து. அது பிரதமர் நிதிக்கு (PM CARES) அனுப்பப்பட்டது. எங்கிருந்தாலும் மனசு தேசத்தில்தான். இது தானே தேசபக்தி?

Post a Comment

0 Comments