பத்திரிக்கையாளர்கள் பாரதீய சிந்தனையோடு பணியாற்ற வேண்டும் - ஸ்ரீ ஸ்தாணுமாலயன் ஜி

நாரத ஜெயந்தியை முன்னிட்டு வலை அலையில் உரையாற்றிய தக்ஷிண், தக்ஷிண் மத்ய கிராம விகாஸ் அமைப்பாளர் ஸ்ரீ ஸ்தாணுமாலயன் ஜி, நாரதரின் மேன்மைகளையும், இன்றைய பத்திரிக்கையாளர் நாரதரின் பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். 


நாரதர் புராண கால பத்திரிகையாளர். ஏனெனில் பத்திரிகையாளருக்குத் தேவையான குணங்கள் அவரிடம் நிறைந்துள்ளன. பாகவத புராணத்தில் நாரதரின் குணங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. நாரதர், பிரும்மாவின் புத்திரர்களில் ஒருவரான முனிவர். சனகாதி முனிவர்களின் சகோதரர். அறிவுத்திறனோடு கலைத்திறன்களும் பெற்றவர். அவர் திரிலோக சஞ்சாரி, திரிகால ஞானி. இகையால் அவர் எவ்விடத்திலும் எக்காலத்திலும் நடப்பதை அறிந்து கொண்டார். அதனைப் பிறருக்குத் தெரியப்படுத்தினார். நாரதர் கலகம் செய்பவர் என்று கூறப்பட்டாலும் நாரதர் கலகம் நன்மையில்தான் முடிந்திருக்கிறது. நாரதர்போல் பத்திரிகையாளர்களும் பல இடங்களில் எந்நேரமும் அலைந்து திரிந்து செய்தி சேகரிக்கிறார்கள். அவர்கள் தரும் இந்தச் செய்தி தீமை விளைவிக்காமல் நன்மை விளைவிக்கும் நோக்கத்தோடு இருக்க வேண்டும். நாரதரின் முக்கிய 6 குணங்களில் பலரையும் சந்தித்தல் முதன்மையானது. அதேபோல் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரையும் சந்திக்கும் பத்திரிகையாளர்கள் அதன்மூலம் சமுதாயத்துக்கு மயனளிக்க வேண்டும். நாரதருக்கு பக்தி அதிகம். அதேபோல் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியில் பக்தியோடு இருக்க வேண்டும். அத்துடன் மெக்கால பாடத்திட்டத்தின்படியான மேலைநாட்டு சித்தாந்தங்களை ஒதுக்கிவிட்டு பாரதீய - தேசிய சிந்தனையோடு பத்திரிகையாளர்கள் செய்திப் பணியாற்ற வேண்டும். அதற்காகத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாரதர் அவதரித்த வைகாசித்வீதீய தினத்தை ஆண்டுதோறும் நாரதர் ஜெயந்தி மற்றும் பத்திரிகையாளர் தினமாகக் கொண்டாடுகிறது.

வலை அலையில் சுமார் 25 பேர் பங்கு பெற்றனர்.

Post a Comment

0 Comments