நல்ல செய்தி-12

கடன் சுமையை இறக்கி வைக்க கைகொடுத்த அசரீரி

மிஜோரம் மா நிலத்தில் அய்ஜ்வால் பகுதி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை நிர்வாகம், அந்த மனிதர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டது. ஏன்? என்ன செய்தார் அவர்?

மூளையில் கட்டியால் அவதிப்பட்டுவரும் 52வயது பெண்மணி, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை கட்டமுடியாமல் தவித்த ஒருவர் இப்படி சிலருடைய, சில லட்சங்கள் பெறுமான, வங்கிக்கடன்களை, அவர்கள் சார்பாக, கடனை திரும்ப அடைத்து திருப்தி கண்டிருக்கிறார் அய்ஜ்வாலை சேர்ந்த பெரிய மனசுக்காரர் ஒருவர்..

மௌனா , பனாய் இருவரும் சேர்ந்து கோழிப்பண்ணை ஆரம்பிக்க,ரூ. 2. 5 லட்சத்திற்கு வங்கிக்கடன் வாங்கியிருந்தனர். தொழில் சரியாக செல்லாத காரணத்தால், கடனை கட்டமுடியாமல் தவித்தனர். ஒரு நாள், வங்கியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு, நல்லுள்ளம் படைத்த, பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர், கஷ்டப்படுபவர்களின் கடனை அடைக்க விரும்புவதாக சொல்லியிருக்கிறார், உங்கள் பெயர்களை நாங்கள் இறுதி செய்திருக்கிறோம் என்றார்கள்.

எஸ்.பி.ஐ வங்கி கிளையின் உதவி மேலாளர், சிறில் வஞ்ச்சாங் கூறுகையில், நாங்கள், கடனாளிகளின் பட்டியலை சரிபார்க்கும் வேலையை ஆரம்பித்தோம். அந்த் சமயத்தில், தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், சொத்துக்களை அடமானம் வைத்து பெற்ற‌ கடன் தொகையை திருப்பியளிக்க முடியாமல், மிகவும் கஷ்டப்படுபவர்களின் பட்டியலை கேட்டார். 10 லட்சம் வரை தன்னால் உதவியளிக்க முடியும் என்றார். நாங்களும் உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களின் பட்டியலை வழங்க சம்மதித்தோம். அதில் சிலருக்கு அவரால் உதவ முடிந்தது மகிழ்ச்சி தரும் செய்தி.
இப்படி ஏப்ரல் முதல் வாரத்தில், தங்களின் கடன்களை அடைக்க, கடவுள் போல முன்வந்த முகம், பெயர் தெரியாத அந்த பெரியமனசுக்காரரை மனதார வணங்கினார்கள் கடனிலிருந்து விடுதலையானவர்கள்.

Post a Comment

0 Comments