தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை தூக்கிப்பிடிப்பவர்கள் இப்பொழுது அடக்கி வாசிப்பதேன்?

கொரோனா விழிப்புணர்வுக்காக தினத்தந்தியில் பிரபல கார்டூன் ஒவியர் மதி , ஏப்ரல் 19 இதழில் வரைந்த கார்டூன், தங்கள் தலைவரை அவமதிப்பதாக கருதி திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் தலைவர் திரு ஸ்டாலின் தினத்தந்தி ஆசிரியருக்கு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். சோஷியல் மீடியாவில் அக்கட்சியினர் கொதித்து எழந்துள்ளனர். #தினத்தந்தியே_மன்னிப்பு_கேள் என்று சமூக ஊடகத்தில் பதிவுகள் குவிந்தன.
கண்டனங்களும் மிரட்டலகளும் குவிந்ததால் தினத்தந்தி வருத்தம் தெரிவித்ததோடு , அந்த மூத்த ஒவியரின் ஒவியத்தை இனி வெளியிடுவதில்லை என்றும் கூறியுள்ளது.

நம் நாடு, நம் கலாச்சாரம், நம் தெய்வங்கள் பற்றி விமர்சனம் செய்யும் பொழுது அது ‘கருத்து சுதந்திரம்’ என்று கூறும் தமிழக முற்போக்கு சிந்தனையாளர்கள் , சினிமா கலைஞர்கள் , பகுத்தறிவு கழக கண்மணிகள் ஏன் இப்பபொழுது அடக்கி வாசிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. 

எல்லாவற்றிர்க்கும் மேதாவி போல கருத்து சொல்லும் தொலைகாட்சி விவாத நெறியாளர்களோ, பத்திரிகை சங்கமோ ஏன் மௌனம் காக்கின்றனர்.?

அந்த ஒவியரை எதிர்த்து நிற்பது பலமான அரசியல் சக்திகள் என்பது காரணமா?

தவறினை சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் ஊடக சுதந்திரம் என்பது பிறருக்குத் தான் என்ற போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

Post a Comment

0 Comments