130 கோடி பேரும் நம் சொந்தம் எனும் உணர்வுடன் சேவை செய்வோம் - ஆர்.எஸ் .எஸ். தலைவர்

இன்று நாம் அனைவரும் ஒரு புதிய சூழ்நிலையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். கொரோனா நோய் பற்றி இன்று உலக அளவில் கவலையோடு பேசப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நாம் அரசங்க உத்தரவின் படி நடப்பது அவசியம். இதில் முக்கியமானது அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது தான். வீட்டில் இருந்தபடியே எந்த வேலை செய்ய முடியோமோ அந்த வேலையை செய்ய வேண்டும். ஸ்வயம்சேவகர்கள் அவரவர் வீட்டிலேயே ஷாகா நடத்தி பிரார்த்தனா பாடுகிறார்கள், உறுதிமொழி எடுக்கிறார்கள். 

சங்க ஸ்வயம்சேவகர்கள் தொடர்ந்து பல சேவையும் செய்து வருகிறார்கள், உலகம் சங்கத்தின் இந்த பணியை கூர்ந்து கவனித்து வருகிறது. ஊரடங்கு நேரத்தில் சேவைக்காக நாம் வெளியே வரவேண்டி இருக்கிறது. உரிய அனுமதியுடன் வெளியே வருவோம். தனிநபர் இடைவெளி விட்டு எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு சேவை செய்து, நாம் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குவோம்.

யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்களோ, அவர்களுக்கு தொடர்ந்து நாம் உதவ வேண்டும். அனைவரையும் இணைத்துக் கொண்டு, அன்புடன் சேவை செய்வோம். இதன் மூலம் சமுதாயத்திலும் அன்பு பெருகும். பாதிக்கப்பட்டுள்ள அனைவருமே நம்மவர்கள் தான். பாரதத்தில் உள்ள 130 கோடி பேரும் நம் சொந்தம் என்கிற உணர்வுடன் சேவை செய்வோம். இன்னும் எத்தனை நாளோ என்று ஏங்காமல், நம்பிக்கையுடன், பேதமில்லாமல் சேவையில் ஈடுபடுவோம். ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிவது, தூய்மையாக இருத்தல், கைகளை அவ்வப்போது சுத்தப்படுத்துதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல் போன்றவைகளை கடைப்பிடிக்க வேண்டும். சோம்பேறித்தனம், வெறுப்பு. பயம் இவற்றை விடுத்து நம் பணியை தொடர வேண்டும். 

இன்று உலக நாடுகள் இந்த கொரோனா நோய்க்கு மருந்தை நம்மிடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் நாம் வியாபார நோக்கோடு அல்லாமல் அனைவருக்கும் இந்த மருந்தைக் கொடுத்தோம். பாரதம் இந்த நெருக்கடியான நேரத்தில் நல்ல விதமாக செயல்பட்டு உலக நாடுகள் மத்தியில் நற்பெயர் பெற்றுள்ளதற்கான காரணம், ஆட்சியாளர்கள் விவேகத்துடன் திட்டங்களை அமல்படுத்துகிறார்கள் என்பதுடன், தேசத்தில் பெரும்பான்மையானோர் அவற்றை மனப்பூர்வமாக கடைப்பிடித்து வருகிறார்கள் என்பதாலும் தான்.

ஊரடங்கினால் பல தொழில்கள் அடைபட்டுள்ளது, தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு போய்விட்டார்கள். அவர்கள் திரும்பி வரும்போது, அந்த தொழில்கள் தொடரவில்லை என்றால், அவர்களின் மனநிலை என்னவாகும்? அவர்களுக்கு மன தயாரிப்பு செய்வதும் நமது பணி தான்.

நம் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகள், கடைகள், அலுவலகங்களை மீண்டும் எவ்வாறு இயக்குவது என்பதை சிந்திக்க வேண்டும். வகுப்பறைகளை சிறிதாக்கலாமா, இணைய வழி கல்வி கொண்டு வரலாமா, அதே போல கடைகளில், அலுவலகங்களில் எவ்வாறு நடத்த வேண்டும் போன்றவற்ற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். நமது சுற்றுசூழல் குறித்தும் சிந்திக்க வேண்டும். தண்ணீர் சிக்கனம், காற்று மாசு தவிர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை, பசு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். 

இந்த நெருக்கடி காலத்தில் நம் தேவை என்ன என்று நமக்கு புரிந்துவிட்டது . நம் வாழ்க்கைக்கு தேவையானவற்றை நம் நாட்டிலேயே உற்பத்தி ஆகிற பொருட்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்வோம். அதாவது சுதேசியை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம். இனி தொழில் தொடங்குவது சுதேசி பாணியில்தான் அமைய வேண்டும். 

குறைந்தபட்ச ஆற்றலை பயன்படுத்தி அதிகபட்ச வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் நடக்கக்கூடிய தொழில்களை தொடங்க வேண்டும் அதில் தொழில்துறையின் சுதேசி. தற்சார்பு, சுதேசி ஆகியவைகளை நமது முன்னேற்றத்தின் லட்சியமாக கொள்வோம். இந்த நெருக்கடி நிலவரத்தை பயன்படுத்தி புதியதோர் பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் நாட்டு மக்களை நாம் ஈடுபடுத்துவோம். நாமும் பணிபுரிவோம், தொடர்ந்து பணிபுரிவோம், வெற்றி பெறும்வரை பணிபுரிவோம்!

Post a Comment

0 Comments