பெங்களூரில் நடைப்பெற்ற கூட்டத்தில், சேவா சங்கமம் ஏற்பாடுகள் குறித்தும் அங்கு (ஜெய்பூரில்) கொரோனோ வைரஸ் அதிகரிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. விவாததின் முடிவில் சேவா சங்கமம் நிகழ்ச்சி ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராஷ்ட்ரிய சேவா சங்கமம் சங்கமம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது அதற்கான பூமி பூஜை பிப்ரவரி 21 அன்று நடைபெற்றது ஆர்எஸ்எஸ் அகில பாரத பௌதிக் பிரமுக் ஸ்வாந்த ரஞ்சன், சேவா சங்கமத்தை நடத்தும் ராஷ்ட்ரீய சேவா பாரதி அமைப்பின் அகில பாரத தலைவர் பன்னாலால் பன்ஸாலி உள்ளிட்டோர் பூமி பூஜையில் பங்கேற்றார்கள். சங்கத்தின் ஜெய்ப்பூர் 1200 சேவா காரியங்கள் பற்றிய விவரங்கள் காட்சிப்படுத்தப்படும். சேவா சங்கமத்தில் ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்கிறார். சமுதாயத்தின் நலிந்தோருக்கான ஏராளமான நலப் பணிகளை சேவாபாரதி மற்ற அமைப்புகளும் செய்து வருகின்றன. சேவா பாரதி மட்டுமே நடத்தி வரும் சேவா காரியங்கள்: கல்வி - 93,000; மருத்துவம் - 13,000; சமுதாய நலன் - 15,000; சுய சார்பு - 8,000. இவை அனைத்தின் பயனாளிகள் பழங்குடியினர் குடிசை வாசிகள், சமுதாயத்தில் தாழ்த்தப் பட்டோர் ஆகியோர்.
0 Comments