உலகம் கைகூப்பி வணங்க துவங்கியுள்ளது – கொரோனா ஏற்படுத்திய பீதி

புதிய புதிய இடங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த வைரஸ் பரவலைத் தடுக்க இந்த உலகம் தீர்வை எதிர்நோக்குகிறது. இந்தக் கொடூர வைரஸ் பரவுவதற்கு, தொடுதலே பிரதான காரணமாகும். ஒருவரை ஒருவர் வாழ்த்தும் விதமாக கை குலுக்குவது, காலம் கடந்த ஒன்றாக தற்போது கருதப்படுகிறது. காலங்காலமாக இரு கைகளையும் இணைத்து “நமஸ்தே" என்று சொல்லும் பாரதிய வழக்கம் வேகமாக உலகெங்கும் பரவி வருகிறது.

சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் நாட்டு பிரதமர், பெஞ்சமின் நெதன்யாஹு தனது நாட்டு மக்களை, கொடூர "கோவிட் 19" நோய் பரவுவதைத் தடுக்கும் விதமாக, கை குலுக்குவதற்கு பதில் நமஸ்தே என்று சொல்லும் பழக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினார். இந்த தொற்று நோயைப் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பின் பொது இவ்வாறு பேசினார். இந்த நோயைத் தடுக்க சில எளிய வழிகளாக, வாழ்த்துவதற்கு கை குலுக்குவதற்குப் பதிலாக இதர வழிகளான - அதாவது இந்தியர்கள் போல நமஸ்தே என்று சொல்லலாம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் எவ்வாறு இந்தியர்கள் நமஸ்தே என்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தும் காட்டினார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோதியும், ஒருவருக்கொருவர் கை குலுக்குவதற்குப் பதிலாக, பாரதீய வழக்கமான, நமஸ்தே என்று குறிப்பிடுமாறும், இதன் மூலம் கொடிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்றார். ஜன் அவுஷதி மூலம் பயனடைந்தவர்கள் மத்தியில் விடியோ கான்ஃபரன்சிங் முறையில் சனிக்கிழமை கலந்துரையாடிய போது, இதைக் கூறினார்.


ஐக்கிய நாடுகள் சபையின் தூதரும், நிரந்தர பிரதிநிதியுமான சையது அக்பருத்தின், டிவிட்டரில், "நமஸ்தே"என்கிற நமது ஆரோக்கியமான இந்திய பாரம்பரியம் ஐநாவில் தூதர்களிடையே காலத்திற்கேற்ப புதிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இத்தாலி தேசத்து தூதர் வின்சென்சொ டீ லுகா இந்திய வெளியுரவு செயலாளர் விகாஸ் ஸ்வரூப் அவர்களை சந்தித்தபொழுது கைகூப்பி வணங்குகிறார்

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களும் கூப்பிய கைகளுடன் நாம் வாழ்த்த வேண்டும் என்று கூறி உள்ளார். நமஸ்தே என்று வாழ்த்த வேண்டும் என்று சொன்னாலும், கூட்டமான பகுதிகளுக்கு செல்லும் போது கவனமாக இருப்பதும் கைகளைத் தூய்மைப்படுத்திக் கொள்வதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று,மேலும் சொன்னார் பிரகாஷ் ஜவடேகர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், நான்காயிரத்துக்கும் மேலானவர்கள் இறந்து போனார்கள் என்று செய்திகள் வருகின்றன. பெரும்பாலும் சைனாவில் தான் பாதிப்பு.







Source: Organiser
தமிழில் – திரு அருள்

Post a Comment

0 Comments