நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு


ஒருமனதான தீர்ப்பு • உச்சநீதிமன்றம் ஒரு உச்சபட்ச சமநிலையை பாதுகாக்க வேண்டும் • வரலாறு, மதம், சட்டம் இதைத் தாண்டி இந்த வழக்கில் உண்மை பயணித்துள்ளது • ஷியா வாரியத்தின் மனு நிராகரிப்பு • நிர்மோஹி அகாடாவின் மனு கால வரம்பு கடந்துவிட்டது. அதனால் நிராகரிக்கப்படுகிறது. • மசூதி பாபரின் ஆணையின் பேரில் மீர்பாஹியால் கட்டப்பட்டது. • கடவுள் சிலைகள் 1949இல் மசூதிக்குள் வைக்கப்பட்டது. • ராம ஜென்மபூமி ஒரு சட்டப்படியான மனிதர் அல்ல. • மசூதி காலி மனையில் கட்டப்படவில்லை என்பது தொல்லியல் துறை ஆராய்ச்சியிலிருந்து தெரிகிறது. • மண்ணுக்கு அடியில் உள்ள கட்டிடம் இஸ்லாமிய கட்டிடம் இல்லை • 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்தது என்று தொல்லியல் துறை கூறியுள்ளது. • ஹிந்துக்கள் மைய பகுதியில் இருக்கும் ஒரு கூம்பு ராமர் பிறந்தார் என்று நம்புகின்றனர். • ஹிந்து மற்றும் முஸ்லிம் இருவரும் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு செய்து வந்துள்ளனர். • ராமர் அயோத்தியில் பிறந்தார் என்று ஹிந்துக்களின் நம்பிக்கை, விவாதம் மற்றும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது. அதை சர்ச்சை/சந்தேகத்திற்கு உட்படுத்த முடியாது. • சன்னி வக்பு போர்டின் வழக்கு ஏற்கப்பட்டது நேரம் வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது. • தொல்லியல் துறையின் அறிக்கையை முழுமையாக நிராகரிக்க முடியாது. • நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்தின் உரிமையை யார் என முடிவு செய்ய முடியாது. • ராமர் குழந்தை சிலை ஒரு சட்டப்படியான மனிதர். • 1857 முன் ஹிந்துக்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு செய்து வந்தார்கள் என்று ஆதாரங்கள் உள்ளன. • இஸ்லாமியர்கள் சொத்து அவர்களுடையது என்பதற்கான உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை. • உள் முற்றம் சர்ச்சைக்குரிய இடம். • சர்ச்சைக்குரிய இடம் ராமலல்லாவிற்கு மட்டுமே சொந்தம். • அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு செல்லாது. • முஸ்லிம்கள் மசூதி கட்ட மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும். • மத்திய அரசு 3 மாதத்திற்குள் ஓர் அறக்கட்டளை அமைத்து உள் மற்றும் வெளி முற்றம் இடத்தை ஒப்படைக்க திட்டம் தீட்டப்பட வேண்டும். • 5 ஏக்கர் ஏற்புடைய இடம் சன்னி வக்போடுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுக்க வேண்டும். • அறக்கட்டளை கோயில் கட்ட திட்டமிட வேண்டும்.

Post a Comment

0 Comments