மங்களூரில் நடைப்பெற்று வரும் இரண்டு தின (29, 30 நவம்பர்) இலக்கிய கருத்தரங்கில் தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் திரு முகமது பேசுகையில், "நான் மதராசாவில் அடிப்படை படிப்பை பெற்றேன். அது செமிடிக் மதங்களில் ஒன்று. நீங்கள் ஒரு முஸ்லீம் இல்லையென்றால், ஜன்னத் (சொர்க்கம்) செல்ல முடியாது; கிறிஸ்தவர் இல்லையென்றால், நீங்கள் மீண்டும் சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. செமிடிக் மதம் தங்கள் மதத்தைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் அப்படித்தான் நினைக்கிறது. ஆனால் ஹிந்து மதத்தில் நீங்கள் சிவனை வணங்குகிறீர்கள், விஷ்ணுவை வணங்குகிறீர்கள், கோவில்களுக்கு சென்றாலும், செல்லவில்லையென்றாலும், கடவுளை நம்பினாலும், நம்பாவிட்டாலும் நீங்கள் ஹிந்துவாக இருக்க முடியும். எனவே இது மிகவும் சகிப்புத்தன்மையுள்ள மதங்களில் ஒன்றாகும். இது காலத்தின் தேவையும் கூட. இன்றைய நவீன உலகத்திற்கு ஹிந்து மதம் போன்ற ஒரு மதம் தேவை. நான் உங்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால் - முஸ்லீம் சமூகத்தின் தீவிர மதக் குழுவுடன் பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நான் அவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், பாகிஸ்தான் போன்ற ஒரு தனி நாட்டை முஸ்லிம்களுக்குக் கொடுத்த பிறகும், இந்தியா மதச்சார்பற்றதாக நாடாக இருக்கிறதென்றால் ஹிந்துகள் பெரும்பான்மையாக இருப்பதால் மட்டுமே. முஸ்லீம் பெரும்பான்மை நாடாக இருந்திருந்தால், அதற்கு ஒருபோதும் மதச்சார்பற்ற நாடு இருக்காது. எனவே ஹிந்து மதத்தின் மகத்துவத்தை நாம் உணர வேண்டும்'. என்றார்.
0 Comments