விஜயதசமி அன்று ஆயுதங்களின் வந்தனத்தின் முக்கியம்.

ஆயுத பூஜை: ஆயதங்களை பூஜிப்பது. 

ஆயுத பூஜை அல்லது ஷஸ்த்ர பூஜை என்பது, நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள், உபயோகிக்கும் ஆயுதங்களை வைத்து வணங்குவது ஆகும். [பத்தாம் நாளான விஜயதசமி அன்று, தேவியின் அருளுடன் உபயோகிக்கத் திருப்பி எடுக்கப்படும். இந்த ஆயுத பூஜா என்பது, இந்தியாவின் பழங்காலத்திய வழக்கத்தை ஒட்டி, நடைமுறையில், வழக்கமாக ஆயுதங்களுடன் தொடர்பு கொண்டவர்களும், அவைகளை பொறுப்பில் வைத்திருப்பவர்களும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்காப்பு கலைகளான களரிப்பயட்டு போன்றவற்றை பரப்புபவர்களும், மட்டுமே இதை செய்தனர். இன்றைய நாட்களிலோ, காவல், பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களும், படை வீரர்களும் முக்கியமாகக் கொண்டாடுகின்றனர். அநேகமாக இந்தியன் படையின் எல்லா பகுதிகளிலும் ஆயுத பூஜா என்பது நீண்ட காலமாக நடைப்படுத்தப் படுகிறது, 

ஆயுத புஜையில் மேற்கொள்ளப்படும் பலவிதமான நடைமுறைகள். 

பலவிதமான ஹிந்து மரபுகள் விஜயதசமியை சூழ்ந்து உள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவை, துர்கை மஹிஷாசுரனை வதைத்தது, இராமன் இராவணனைக் கொன்றது ஆகும். வன வாசத்தில், பதின்மூன்று வருடங்கள் பாண்டவர்கள் 'வன்னி; மரத்தில் ஒளித்து வைத்திருந்த தங்கள் ஆயுதங்களை விஜய தசமி அன்று வெளியே எடுத்தது, குறைந்த அளவிலேயே ஆயுத பூஜையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த சம்பவத்தின் நினைவாக, மைசூரின் மஹாராஜா, அலங்கரிக்கப் பட்ட யானையில் அமர்ந்து, வன்னி மர மண்டபத்தில் பத்தாம் நாள் சென்று, வன்னி மரத்திற்கு மரியாதை செய்விக்கிறார். இது ஒரு விமரிசையான ஊர்வலம். மைசூரின் முக்கியமான சாலை வழியாக ஊர்வலம் வருவது என்பது 'தசரா' என்ற புகழ் வாய்ந்த கொண்டாட்டம் ஆகும். 

சீக்கியர்களுக்கு நடுவிலும், இந்த ஷஸ்திரை பூஜை அமைந்துள்ளது. குரு கோவிந்த் சிங்க், 'ஷஸ்திர பூஜா" அல்லது கத்திகலின் வழிபாட்டோடு, "சண்டி தி வார்" என்ற முழக்கத்தையம் அமைத்தார். [அதை வார் ஸ்ரீ பகவதி ஜி கி என்றும் கூறுவார்கள்]. அது, ஐந்தாவது பகுதியாக 'பத்தாவது கிரந்தத்'தில் அமைந்துள்ளது. 'வார் அதாவது தாக்குதல், சம்ஸ்க்ருதத்தில் உள்ள 'மார்க்கண்டேய புராணம்' என்பதிலிருந்து, வரும் ஒரு கிளைக்கதையின் அடிப்படையில் வருகிறது. இந்திரனின் தலைமையில் தேவர்களுக்கும், ஸும்பா, நிஷும்பாவின் தலைமையில் அசுரர்களுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தை வருணிக்கிறது. அங்கு, மேலான தேவியின் சக்தியானது, விடுதலை அளிக்கும் தெய்வீக சக்தி கொண்ட கத்தியாக மாற்றப்பட்டது. 'சண்டி தி வார்' ஒரு சக்தி வாய்ந்த போரின் உணர்ச்சியை வரவழைப்பதோடு, சக்தி மிகுந்த மொழியும், சொல்திறமிக்க, உவமைகளும், முக்கியமாக, தற்காப்புக்கு கலையில் மிகவும் தேர்ந்த ’நிஹங்' சீக்கியர்களுக்கு, பிடித்த விதத்தில் அமைந்துள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் உள்ள, 'தேவி மஹாத்மியம்' என்னும் பகுதியில் வரும் சண்டி, பகவதி என்ற பெயர்கள், ஹிந்துத்துவத்திற்கும், சீக்கியத்திற்கும் இடையே இருந்த, நெருங்கிய தொடர்பை நன்கு வெளிப்படுத்துகிறது. 

இடதுசாரியைச் சார்ந்த சிலர், தேவையில்லாமல், விஜயதசமி, நவராத்திரி பற்றிய ஒரு சர்ச்சயை உற்பத்தி செய்திருக்கிறார்கள். அதாவது, துர்கா ஆரியர்களை சேர்ந்த ஒரு பெண் தெய்வம் என்றும், திராவிடர்களை சேர்ந்த மகிஷாசுரனை கொல்வதாகவும், மேலும் 'ஆயுத பூஜா என்பது ஒரு "ஆரியக்கேடு" என்றும் கிளப்பி விட்டிருக்கிறார்கள். எப்படியிருந்தாலும், தமிழ் நாட்டிலே, மிகவும் பழைமையான தேவியைப் பற்றின பாரம்பரியமும், ஆயுதங்களை வழிபாடு செய்யும் வழக்கமும் இருந்திருக்கின்றன. சங்க இலக்கியத்தில், 'கொற்றவை' என்ற பெண் தெய்வத்தைப் பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில், தேவி மஹாத்மியத்தில் வரும், ஷும்ப, நிஷும்பாவைக் கொன்ற அதே பெண் தெய்வமும் புகழைப் பட்டுள்ளது, மேலும், 'சண்டி தி வாரு'ம், தமிழ் நாட்டில், நிஷும்பா சூடினி [நிஷும்பனைக் கொன்றவர்] என்றும் வழிபாடு செய்யப்படுகிறது. அப்பெண் தெய்வம் வீரத்தின் ஆளுமை ஆவாள். அத்தோடு, ஏகாதிபத்திய சோழர்களின் போரின் தெய்வமுமாவாள். நிறுவனரான விஜயாலய சோழர், கும்பகோணத்தில், 'நிஷும்பா சூடினி' கோவிலை நிர்மாணித்தார். 

மற்றுமொரு பிரசித்தி பெற்ற தமிழ் கடவுள் முருகனும், ஒரு போரின் தெய்வமே ஆவார். தை பூசம் விழா, தமிழ் நாட்டிலே மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். [என்றாலும், வட இந்தியாவில் அத்துணை தெரியப்பட வில்லை]. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும், மிக்க ஆர்வத்துடன் கொண்டாடுகிறார்கள். இந்த விழா ஜனவரி/பெப்ரவரி மாதங்களின் இடையில் அமைகிறது. பெண் தெய்வமான பார்வதி, முருகனுக்கு பலமளிக்க தனது சக்தியை இணைத்து சூலத்தை, அந்த நாளில், அசுரர்களுக்கு எதிராக தேவர்கள் வெற்றி பெற அளிக்கிறார், ஆயுதங்களின் வழிபாடு, கொண்டாட்டம் சம்பந்தமான மற்றொரு வழக்கு கிடைக்கிறது. முருகனின் சூலம், விஷ்ணுவின் சுதர்ஸன சக்கிரம் என்ற இந்த ஆயுதங்கள், அவைகளுடைய தகுதிக்காகவே வழிபாடு செய்யப் படுவது ஒரு தனித்தன்மை ஆகும். அந்த தெய்வங்கள், அவைகளை உபயோகப்படுத்துவதை பற்றி பேச்சே கிடையாது. 

ஆயுதங்கள் வழிபாடு, ஹிந்து அல்லது தர்மவழியில் செல்லும் ஆன்மிகம், தர்மமில்லாத கலாச்சாரம் பற்றிய அடிப்படையான வித்தியாசம் பற்றி, குறிக்கிறது. அதேபோன்று, இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹிந்துவின் வன்முறை பற்றிய மனக்கோட்பாடையும், அதன் பொதி பொருளான அகிம்சை பற்றியும் கூறுகிறது. 

முதலாக, அரசர்களும் போரின் தெய்வங்களையும், அவர்களின் ஆயுதங்களையும் வழிபாடு செய்தார்கள். அவைகளிலிருந்து போருக்கான ஊக்கத்தையும் பெற்றார்கள். பயிற்சி செய்பவர்களுக்கு, ஹிந்துத்துவம், உருவகக் கதைகளையும், ஆன்மீக அர்த்தங்களையும், இந்தக் கதைகள் மூலம் சொல்கிறது. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடை பெறும் போரை உள்ளார்ந்த ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். மஹிஷாசுரனைக் கொல்வது என்பது நம்முள்ளே இருக்கும் 'தாமச' குணங்களைக் குறிக்கும். பார்வதியிடம் சூலத்தைப் பெற்ற உடனேயே, முருகனின் இக்கதையின் படி, மிக உயர்ந்த அத்வைத உண்மையின் மறு பக்கம் ஆகி, இறைவனான சிவனுக்கே, 'ஓம்' என்கிற பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லிக் கொடுக்கிறார். இந்தக் கதை முருகன் ஸ்வாமிநாதனாக ஆனதற்கு, பின்னணி ஆகிறது. [ 'குரு, நாதனுக்கு அதாவது இறைவன் சிவனிற்கு கற்றுக் கொடுக்கிறார்]. 

இரண்டாவதாக,பிரம்மத்தை ஏற்காத கலாச்சாரம் போலில்லாமல், ஹிந்துத்துவம் தெய்வீகத்தை, இறைவனிடமும் அவர் படைப்புகளிலும், உள்ளும், வெளியும் காண்கிறது. அப்படிப்பட்ட அணுகுமுறை, வாழ்க்கையின் எல்லா செயல்களிலும் தெய்வீகத்தை அமைக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்றும், கர்ம யோகா என்னும் தத்துவம், ஆயுதங்களுக்கு பெரு மதிப்பைக் கொடுப்பது மற்றொரு விஷயம் ஆகும். "ஆயுதங்கள்" என்று சொன்னாலும்,"ஆயுதம்" என்பதற்கு, பொதுவாக'கருவி'என்றும், அமலாக்கப் பட உதவுபவைகள் என்றும் அர்த்தம் உண்டு. 'நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் ஒவ்வொருவரும், தனது வாழ்க்கைக்கு தேவைப்படும், தான் உபயோகப்படுத்தும் கருவிகளை தெய்வீகத்தின் வெளிப்பாடாகக் கண்டு வழிபாடு செய்கிறார்கள். பாடகர்கள், அவர்களுடைய வாத்தியங்கள், உழவன், கலப்பை, கல்வி பயிலும் மாணவன், அவனுடைய புத்தகங்கள், தொழிற்சாலை, அங்கு பயன்படும் இயந்திரங்கள் எல்லாவற்றிற்குமே இது பொருந்தும். கட்டாயமாக, போர்வீரர்கள், அவர்களுடைய ஆயுதங்களுக்கும் இது பொருந்தும். 

ஆயுதங்களை வழிபடும் பாரம்பரியம் கொண்ட ஒரு கலாச்சாரம், போரினைப் பற்றிய, வன்முறை, அகிம்சை போன்றவற்றைப் பற்றிய கேள்விகளை எப்படிக் கூர்ந்து கவனிக்கிறது என்பது ஒரு சுவையான விஷயம். ஹிந்துத்துவத்தில், தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு குறிக்கோள்கள் உள்ளன,. தர்மத்தின் வழி நடந்து தான் மற்ற எல்லா குறிக்கோள்களை அடைய வேண்டும் என்பது ஒரு அடிப்படையான விஷயம். தனிப்பட்டமுற யில் கண்டால், ஒரு போர் வீரன், அவசியம் இருந்தால், சண்டையிட வேண்டும். சமூக அளவில், அரசாள்பவன், தர்மத்தை நிலைநாட்டி, சமூகத்தைக் காக்க வேண்டும். ஆயுதங்களை உபயோகப்படுத்துவது, தர்மத்தைக் காக்க ஒரு புனிதமான கடமையாகக் கருதப் படுகிறது.இப்படியாக தெய்வீகத்தையும், தர்மத்தையும் ஆயுதங்கள் உபயோகப்படுத்துவதில் இந்தியாவில், ஏன் இவ்வாறு செயல் பாடுகளில் க ண்டிப்பான வரையறைகள் ஏற்பட்டு உள்ளன என்பதற்கு நம் மனதில் தெளிவு உண்டாகிறது... இதில் முக்கியமான கோட்பாடு என்னவென்றால், போர் வீரர்களுக்கியே தான் சண்டை புரிய படும். மற்ற பகுதி சார்ந்த குடிமக்கள் அதில் ஈடு படுத்தப் படவில்லை. 

கி.மு.நான்காம் நூற்றாண்டில், வந்த கிரேக்கிய தேசத்துத் தூதுவர், மெகஸ்தனீஸ், சங்திர குப்தா மௌரியனின் படையைப் பற்றிக் குறிப்பிடும் போது, அது நிரந்தரமான, தொழிற்பண்பட்ட முறையில் இருந்ததாகவும், அரசாங்கத்தின் செலவிலேயே அவர்களை வேலையில் அமர்த்தியும், தேர்ச்சி அளித்தும், அவர்களை நன்கு கவனித்துக்கொண்டும், விவசாயம் செய்த மக்களிடையில் எந்த விதமான தொந்திரவு செய்யாமலும் செயல் பட்டார்கள் என்றும் வருணித்தார்" 

9ம் நூற்றாண்டில், முதல் பகுதியில், சுலேமான் என்னும், அரேபியா வியாபாரி இந்தியாவிற்கு நிறைய முறைகள் வந்து, கூறுகிறார்,"இந்தியர்கள் சில நேரங்களில் படையெடுப்பு எடுத்துக் போருக்கு சென்றார்கள். ஆனால் மிகவும் அபூர்வமாகவே சென்றார்கள். நான், எந்த நாட்டு மக்களும் வேறு எந்த நாட்டின் அதிகாரத்திற்கும் தலை பணிந்து பார்க்கவில்லை....ஒரு அரசன் தனது பக்க நாட்டை அடி பணிய வைத்தால், தோல்வி அடைந்த அந்த நாட்டின் இளவரசனின் குடும்பத்தை சேர்ந்த ஒருவன், வெற்றிபெற்றவரின் கீழே அரசாங்க வேலைகளை கவனிக்க அமர்த்தப் படுகிறார்.அந்த நாட்டில் வாழும் மக்கள் எந்த விதத்திலும் துன்பப்படவில்லை" 

1000 வருடங்களின் இடைவெளியில் எழுதப்பட்ட, இரு வெளிநாட்டை சேர்ந்தவர்கள், தனித்தனியாக எழுதியது ஒரே மாதிரியாக இருப்பது மிகவும் குறிப்பிடத் தக்கது. இந்த எண்ணத்தில் எதோ ஒரு உண்மை இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதோடு, நவீன காலத்திய கண்ணோட்டத்தில் இந்த கருத்து முதற்கோட்பாடு மிகவும் வியப்பிற்கு உரியதே.20 வது நூற்றாண்டில், ஜெனீவா மாநாட்டில், படைகள், பொதுமக்களை போரின் சமயத்தில், குறிவைக்கக் கூடாது என்ற எதிர்பார்ப்பு மிகவும் மதிக்கத் தக்கது. இது 'முழுமையான போர்' என்று இஸ்லாமியர்களால் கூறப்பட்டு, இந்தியாவைப் படை எடுத்தபோது, கொள்ளை, நகரங்களின் அழிவு, மேலும் பெரும்பாலான அளவில், கற்பழிப்பு, கொலை, மேலும் கட்டாய படுத்தி பொது மக்களை மதம் மாற வைத்தது எல்லாமே மேலே சொன்ன கொள்கைக்கு மிகவும் புறம்பாகவே இருக்கிறது. 

முடிவாக, ஆயுதங்களில் தெய்வீகத்த தன்மையைக் கண்ட கலாச்சாரம், அஹிம்சையையும் மதித்தது. ஹிந்துக்களின், இந்த அஹிம்சை கொள்கைதான், மஹாத்மா காந்தியின் சத்யாகிரஹத்தை ஊக்குவித்து, உலக சரித்திரத்தின் பதிவேட்டில் தனிப்பட்ட இடத்தைப் பிடித்தது. ஆனால், ஹிந்துக்களின் எண்ணங்கள், காந்தியை ஊக்குவித்தாலும், ஹிந்துத்த்வத்திற்கு எல்லா சூழ்நிலைகளிலும் வன்முறையில் வெறுப்பு உண்டு என்றும் சொல்லிவிட முடியாது. மொத்தமான அஹிம்சை என்பது சந்நியாசிகளுக்கே பொருந்தும். ஒரு அரசியல் சூழ்நிலையின் தேவைகளுக்கு, தனது சந்நியாசி மாதிரியான அஹிம்சையை ஏற்றுக்கொண்டதில், காந்தியின் புத்தி கூர்மை வெளிப்படுகிறது. தற்காப்புக் கலைகளிலோ அல்லது பகவத் கீதையின் உத்திரவுகளிலோ, அஹிம்சை என்று சொல்லி போரிட மறுத்தால், அது அதர்மமாகவே கணிக்கப் படுகிறது. 'ருக்' வேதத்தின், 6வது மண்டலத்தில், 75வது பாடல், 'ரதா' என்கிற உயர்ந்த வீரனை, தனது தேரில், தர்மத்தைக் காத்ததிற்கு புகழ்கிறது. 

ஆட்சிக்கலையின் மகத்தான படைப்பான, 'அர்த்த சாஸ்திரம்' , தற்காப்பையும், வெளிப்புற உறவுமுறைகளை பற்றி விரிவாகப் பேசி, சாம, தான, பேத, தண்டம் [சமரசம், பரிசுகள், கருத்து வேறுபாடுகள், கட்டாய படுத்துதல்] என்ற வரைமுறைகளை மற்ற நாட்டுடன் செயல் புரிய, எழுதியுள்ளது.போர் என்பது கடைசியாக மேற்கொள்ளவேண்டிய முறை. ஆனால், மற்ற முறைகள் தோல்வி அடைந்தாள் அது மிக முக்கியமான ஒன்று.. சாணக்கியன், மேற்கொண்டு, ஒரு நாடு அடிமைப் பட்டால், அப்பொழுது ஒரு அரசன் எப்படி செயல் புரியவேண்டும் என்பதையும் சொல்லிப் போகிறார்: 'புதிய நாட்டைப் பெற்ற அரசன், தனது எதிரியிடம் கெட்ட நடத்தை இருந்தால், அதை தனது நற்குணங்களால் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், எதிரி நல்ல தன்மை கொண்டவனாக இருந்தால், தான் இரு மடங்கு நன்மை பயப்பவனாக இருக்க வேண்டும் என்கிறார். தனது தர்மத்திற்கு ஏற்றாற்போல், இனிமையான, நன்மை பயக்கக் கூடிய கொள்கைகளை தொடர வேண்டும். உதவிகள், விதி விலக்குகள், பரிசுகள் தருவது, மதிப்புக்களை அளிப்பது போன்றவைகளையும் அளிக்க வேண்டும்'. 

அஹிம்சை ஒரு உயர்வான தர்மம்; அஹிம்சை உயர்ந்த சுயகட்டுப்பாடு ஆகும் 
அஹிம்சை உயர்ந்த தானம். அஹிம்சை மிக உயர்ந்த தவம். 
அஹிம்சை என்பது உயர்ந்த யக்யம். அஹிம்சை என்பது உயர்ந்த பலம். 
அஹிம்ஸை என்பது உயர்ந்த நண்பன். அஹிம்சை ஒரு உயர்ந்த மகிழ்வு. 
அஹிம்சை ஒரு உயர்ந்த உண்மை. அஹிம்சை ஒரு உயர்ந்த 'சுருதீ'. 
எல்லா யாகங்களிலும் கிடைத்த பரிசு; புனித நீருள் மிகவும் புனிதமானது. 
எல்லா இலக்கியங்களிலும் சொல்லப்பட்ட அறிவுரைகளின், மொத்தப் பரிசுகள்; இவை எல்லாம் சேர்த்தாலும் அஹிம்சைக்கு ஈடு கிடையாது. 
மனிதனின் அஹிம்சை என்னும் தவம் முடிவில்லாதது; அஹிம்சையை மேற்கொள்ளும் மனிதன் எப்பொழுதும் யாகம் செய்து கொண்டிருக்கிறான். 
அஹிம்சையை மேற்கொண்டிருக்கும் மனிதன் எல்லா படைப்புகளுக்கும் தந்தையும் தாயும் ஆவான். 
ஓ! 'குரு' வம்சத்தின் தலைவனே! இவையெல்லாம் அஹிம்சையின் சில போற்றத்தக்க நன்மைகள். 
நூறு வருடங்கள் பேசினாலும் கூட, அஹிம்சையின் நன்மைகளை பற்றி பட்டியல் இட முடியாது. 

மஹாபாரதத்தில், 'அனுஷாசன' பர்வத்தில் பீஷ்மர் கூறியது. 






Post a Comment

0 Comments