ஐந்து ப்ராந்தீயங்களிலும், 29 மாநிலத்திலும், 5 யூனியன் பிரதேசம் அல்லது ஒன்றிய பகுதிகள், மேலும் 465 மாவட்டங்களிலும் 2017 - 18ல் ஆய்வு நடத்தப பட்டது. 17 மாநிலங்கள், சர்வதேச எல்லையை தொட்டவண்ணம் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில், 106 மாவட்டங்கள், இந்த சர்வதேச எல்லையை தொட்டவண்ணம் உள்ளன, அதில், 70 மாகாணங்கள் [66.04%] இந்த ஆய்வில் மேற்கொள்ளப் பட்டது.18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் எடுத்துக்கொள்ளப் பட்டார்கள். மொத்தமாக, 43255 பெண்கள் பேட்டியில் ஏற்றுக்கொள்ளப் பட்டார்கள்.
தனியாக இதே போன்ற ஆய்வில், 18 வயதிற்கு கீழே உள்ள பெண்கள் பேட்டி எடுக்கப் பட்டார்கள். 5 பிராந்தீயங்களிலிருந்தும், 25 மாநிலங்களிலிருந்தும், இரு ஒன்றிய பகுதிகளிலிருந்தும், 283 மாகாணங்களிலிருந்தும் 7675 பெண்கள் பேட்டி எடுக்கப் பட்டனர்.
ஆய்வில் இருந்த பெண்களில், அநேகமாக எல்லோரும் திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகாதவர்களில் [21.96%] பெரும்பாலோனோர் 18-25 வயதுடையவர்களாக இருந்தனர்.
எல்லா பெரும்பான்மையான மதத்தினரும் சேர்க்கப்பட்டனர். அவர்கள், ஹிந்து, முஸ்லீம், புத்தர்கள், கிறிஸ்துவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆவார்கள்.
படிப்பு
2011 ஆண்டின் மக்கள் தொகைக்கு கணக்கெடுப்புப்படி, 64.63% பேர்கள் படித்தவர்களாக இருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பின் படி, படித்த பெண்கள் 79.63% ஆக இருக்கின்றனர். படித்தவர்களின் எண்ணிக்கை முன்னேறி இருந்தால் கூட, சில பெண்கள் மட்டுமே பட்டப் படிப்புக்கு மேல் நிலைக்கு சென்றிருந்தனர்.
திட்டமிட்ட பழங்குடியினரில், படிக்காதவர்கள் நிறைய இருந்ததாகக் கணிக்கப்பட்டது. ஆய்வில், திட்டமிடப்பட்ட சாதியினரும், பின் தங்கிய வகுப்பினரும் அவர்களுக்கு அடுத்து வந்தார்கள். ஆன்மீக பகுதியில் இருந்தவர்களில், படிக்காதவர்கள் விகிதாசாரம் குறைவாகவே இருந்தது.
ஆய்வின் படி, பெண்கள் படிப்பை நிறுத்துவதற்கு, திருமணமும், பண தட்டுப்பாடும் மிக முக்கியமான காரணங்களாக இருந்தன.
ஒதுக்கீடு கொள்கையும், படிக்க உதவும் முறைகளும், திட்டமிடப்பட்ட ஜாதி, திட்டமிடப்பட்ட பழங்குடியினர், விசேஷ பின்படுத்தப்பட்ட குழு, மற்றும் பின்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும், பெண்கள் மேற்படிப்பு படிக்க மிகவும் உதவியாக இருந்தன என்பது கவனிக்கப் பட்டது.
இந்த ஆய்வில் இருந்த இரண்டில் மூன்று பங்கு பெண்களுக்கு, தங்களின் ஆர்வம் எதில் இருந்தது என்று சொல்லத் தெரியவில்லை. அந்த நிலைமை, வீட்டு வேலை பளு,பரம்பரை வழக்கப் படி ஏற்பட்ட பல்வேறு வேலைகள் போன்றவைகளினால், பெண்களுக்குத் தங்களுக்கு எதில் ஆர்வம் என்று நினைக்ககூட முடியவில்லை என்று தெரிய வந்தது. இந்த கேள்விக்கு பதில் சொல்லிய பெரும்பான்மையோர் தங்களது ஆர்வம் எதில் உள்ளது என்று நினைத்துக் கூடப் பார்பதில்லை என்றும் கூறினார்கள்.
பங்கேற்றவர்களில் 1/4 பங்கு பெண்களுக்கு ஓய்வு நேரம் என்பதே இல்லை என்பதும் கண்காணிக்கப் பட்டது.
வேலை வாய்ப்பு.
பெண்கள் வேலை வாய்ப்பு, திட்டமிடப்பட்ட பழங்குடியினர் வகுப்பில், மிகவும் நிறைய இருந்தது. வேலையில்லாத பெண்கள் பங்கு திறந்த வகையினத்தில் மிகவும் அதிகமாக இருந்தது.
வேலை செய்யும் பெண்களில் பெரும்பான்மையோர் தங்களுக்கு குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் குழந்தைகள் காப்பகம் போன்ற வசதிகள் இல்லை என்றும், சிற்றுண்டி சாலைகள் இல்லை என்றும், வேலை செய்யுமிடங்க்ளில் தங்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை என்றும் குறிப்பிட்டார்கள். அவர்களில், 60% க்கும் மேற்பட்டோருக்கு, கடன் வசதிகள் இல்லை.
இந்த ஆய்வின் மாதிரியில், வேலைவாய்ப்பு, கிறிஸ்துவர்களுக்கு நிறைய இருப்பதாக கவனிக்கப் பட்டது. அவர்களுக்குப் பின்னால், ஹிந்து, புத்தர்கள், முஸ்லீம், ஜெயின், சீக்கியர்கள் என்று இறங்கு வரிசையில் இருக்கிறார்கள்.
ஆரோக்கியமும், உணவும்.
கிட்டத்தட்ட பாதி பங்கு பெண்கள் ஒரு நாளில் இரு முறை உணவு உண்கிறார்கள். ஆனால், ஆனால், 3.73% பெண்கள், ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உண்கிறார்கள். ஆன்மீகத்தில் இருக்கும் பெண்கள் 1/10 பங்கேஉண்கிறார்கள்.
18 வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கு மாதாந்திர விலக்கு ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.. 64%க்கு மேலே, மிகவும் துன்பப படுகிறார்கள். கீல்வாதம் இரண்டாவதாக உள்ளது. 15%க்கு மேல துன்பப்படுகிறார்கள். அவர்களில் சிலர், ஆஸ்ச்சர்யப்படும் படி ரத்த அழுத்தத்தில் துன்பப படுகிறார்கள். [5.28%] இதய சம்பந்த பிரச்சினைகள் [3.07%], சர்க்கரை வியாதி [1.62%]. மேலும் கான்செர் [0.51%]
கிட்டத்தட்ட 40% பெண்கள் இந்த ஆய்வின் படி, கடந்த இருவருடங்களில் ஆஸ்பத்திரியில் விடப்பட்டிருக்கிறார்கள். ஆன்மீக வழியில் இருப்பவர்கள் தான் மிக நிறைய இருந்தார்கள். 18லிருந்து 20 வயதுக்காரர்களிடையே அடிக்கடி ஆஸ்பத்திரி செல்வது நிறைய உள்ளது.
உடல் நிலை சரியில்லாத நிலை, பெரும்பாலும், பழங்குடியினருக்கு இடையே நிறைய இருப்பதாகக் கணிக்கப் பட்டது.
கிட்டத்தட்ட, 80% பெண்களுக்கு சந்தோஷமும், ஆரோக்கியமும் நிறைய உள்ளது. ஆன்மீக பகுதியில் உள்ள பெண்களுக்கு, பேட்டி அளிக்கப்பட்டவர்களுக்குள் மிகவும் அதிக ஆனந்தமும், ஆரோக்கியமும் உள்ளது.
திருமணமான பெண்களுக்கிடையே ஸந்தோஷமும் மிக நிறைய, அத்தோடு எண்ணிக்கையிலும் நிறைய உள்ளார்கள். திருமணம் செய்யாமல், ஒன்றாக வாழ்பவர்க்கிடையே, மிகக் குறைந்த அளவான பெண்கள் இன்பமாக இருக்கிறார்கள்.
குடும்பமும், வருவாயும் இல்லாது இருப்பவர்களில், 90% ஆனந்தமும், ஆரோக்கியமும் கொண்டுள்ளார்கள். 10,000த்துக்கும் கீழே வருவாய் உள்ளவர்களில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். இதிலிருந்து, ஆனந்தமும் ஆரோக்கியமும், குடும்ப வருவாயை சார்ந்து இல்லை என்று தெரிய வருகிறது.
பரிந்துரைகள்.
1. வாக்களிப்பு அட்டையைப் பற்றிய அறிவு பெண்களுக்கிடையே வர வேண்டும்.
வடகிழக்குப் பகுதியில் உள்ள பெண்களை ஆதார் அட்டையைப் பெற ஊக்கமளிக்க வேண்டும்.
3. வட பகுதியில் உள்ள பெண்களுக்கு தனிப்பட்ட வங்கி கணக்கு வைத்துக்கொள்ள விசேஷ முயற்சிகள் செய்ய வேண்டும். அதே திட்டங்கள், பழங்குடி இனத்தை சார்ந்த பெண்களுக்கும், நகரத்தில் உள்ள குடிசை வாழ் பெண்களுக்கும் கிட்ட வேண்டும். அதனால் அரசாங்கத்தின் பலதரப்பட்ட வசதிகள் அவர்களுக்கு கிடைக்கும்.
4. விசேஷமான நிகழ்ச்சி நிரல்களும், மூலோபாயங்களும், பழங்குடியினப் பெண்களுக்கு, படிப்பு அறிவை வளர்க்க, விசேஷ உதவிகளாகத் தேவைபி படுகின்றன. .
5. பாடத்திட்டங்கள், அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவைகளாக மாற்றி வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
6. பாட அட்டவணைகள், வாழ்க்கையின் திறனுக்கும், உடல் திறத்துக்கேற்றவாறும், மதிப்பு நோக்கு நிலை, திறமை வளர்க்க திட்டங்கள் எல்லாமே, எல்லா கல்வி நிலைகளிலும் அமைக்க வேண்டும்.
7. மத்திய, மாநில அரசாங்கமும், பொதுநல சேவை மையங்களும், பொதுவாகவே உயர்நிலைப் பள்ளியிலிருந்து, பெண்கள் விலகுவதையும், திட்டமிடப்பட்ட பழங்குடியினரும் [ஆரம்ப நிலையிலும்] மேலும், திட்டமிடப்பட்ட ஜாதி [பள்ளியின் நடு நிலையிலும்] விலகுவதையும் குறைக்க குறிப்பாகக் கூர்ந்து நோக்கி திட்டங்கள் செயல் படுத்த வேண்டும்.
8. குடும்ப சூழ்நிலையிலும், சமூகத்திலும் பால் வேற்றுமையை தவிர்க்க, விழிப்புணர்வு வளர்க்கும் நிகழ்ச்சி நிரல்களை பொது நல சேவை மையங்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
9. பெண்களுக்கு கம்ப்யூட்டர் கிடைப்பதில்லை. அவர்களுக்கு PMKVY திட்டங்களை பற்றித் தெரிவதில்லை. மேலும் கம்ப்யூட்டரில் இந்த நிரல்களுக்கு நேர்முகமாக பதிவு செய்து கொள்ள வேண்டி இருப்பதால், இந்தத் திட்டங்களின் பயன் அவர்களை போய் சேர்வதில்லை.. அதனால், பெண்களுக்கு என்று விசேஷமான பயிற்சி முகாம் தேவைப்படுகிறது. அதில் நேர்முகமில்லாத பயிற்சி முகாம்கள் செயல் பட வேண்டும்.
10. பெண்களுக்குத் திறமைகளை வளர்ப்பதற்கு தேவையான நிகழ்ச்சி நிரல்களை அமைக்க வேண்டும். இவை பெண்கள் வேலைக்கு சேர்வதை விரைவுபடுத்த ஆதரவாக இருக்கும்.
11. வேலைக்குத் தேவைப்பட்ட, வேலை வாய்ப்புகள் அளிக்கக்கூடிய திறமை பயிற்சி திட்டங்கள் தேவை. வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுடன், திறமை பயிற்சி நிரல்கள் இணைய வேண்டும்.
12. வேலை வாய்ப்பை வளர்க்கும் எல்லா திட்டங்களும், அடிமட்ட நிலையில் செல்ல, முயற்சிகளை விரைவு படுத்த வேண்டிய தேவை உள்ளது. பெண்களுக்கு இதை பற்றிய விவரங்கள் தெரிய முயற்சிகள் தேவை.
13. பெண்களுக்க, கம்ப்யூட்டரில் நேர்முகமில்லாது கற்க திட்டங்கள் அமைக்கப் பட வேண்டியது அவசியம்.
14. ஜாதி, திருமண நிலை, வயது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாது எல்லாப் பெண்களுக்கும் வேலை வாய்ப்பு திட்டங்கள் அமைக்க வேண்டும். நிறைய பெண்கள் வேலை செய்வதில்லை. அதற்கு பெரிய காரணம், திருமணத்திற்குப் பின் இடம் மாற்றம், திருமணமான புதிய நிலையில் ஏற்படும் பொறுப்புகள் ஆகும்.
15 நன்கு வகுக்கப் படாத பகுதிகளில், பெண்களின் நிலையைப் பற்றி கவனிக்க நிறுவனங்கள் தேவை. நன்கு வகுக்கப்படாத பகுதிகளில் வேலை செய்பவர்களும், திறைமையற்ற வேலையாட்களும் மிகவும் சாதகமாகப் பயன் படுத்தப் படுகிறார்கள்.
16. உள்ளார்ந்த, குறைகளை விசாரிக்கும் குழுமங்கள் எல்லா நிலைகளிலும் அமைக்கப் பட வேண்டியது அவசியம்.
17. பள்ளிகளில் வேலைத் திறமையை வளர்க்க பயிற்சி அளிக்க வேண்டும். படிக்காதவர்கள், பட்டப் படிப்பு படிக்காதவர்கள் நடுவே, அரசாங்கம் திறமை வளர்க்கும் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
18. முழுமையான உணவு, தேவைப்பட்ட இடைவெளிகளில் உணவின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை, எல்லாவிதமான பெண்களுக்கும் ஏற்படுத்த நிகழ்ச்சி நிரல்கள் அமைக்க வேண்டும்.
19. இளமைப் பருவத்து பெண்களுக்கு விழிப்புணர்வு அளிக்கக்கூடிய, தலையீட்டுத் திட்டங்களும் ஊக்கப்பட வேண்டும். 60% க்கும் மேலான இளம்பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட தொல்லைகளில் துன்பபபடுகிறார்கள்.
20. கீல்வாதம், இரத்த அழுத்த சம்பந்த நோய்களைத் தவிர்க்கும், தீர்வு காணும் ஆரோக்கிய விசேஷ நிகழ்ச்சி நிரல்கள் ஏற்பாடு செய்யப் படவேண்டும்.
21. பழங்குடியினப் பெண்களின், ஆரோக்கிய நிலைக்கு விசேஷ முயற்சிகள் எடுக்கப் பட வேண்டும்.
0 Comments