அந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள்-13 (Those 15 days)

அந்தப் பதினைந்து நாட்கள் 

(இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15க்கு முந்தைய நாட்கள் )

13 ஆகஸ்ட் 1947 

மும்பையின் ஜூஹூ விமானநிலையம் டாட்டா விமானசேவையின் கவுண்டரின் முன்பு 8 முதல் 10 பெண்மணிகள் நின்றிருந்தனர் பரபரப்பாக இருந்த அவர்களின் முகத்தில் அழுத்தமான தன்னம்பிக்கை வெளிப்பட்டது ஆம் அவர்கள் எல்லோரும் ராஷ்டிரிய சேவிகா சமிதி அங்கத்தினர்கள் ஆவர் இவர்களின் முக்கிய பொறுப்பாளரான லட்சுமிபாய் கேல்கர் மற்றவர்களால் அத்தை என்று பிரியமுடன் அழைக்கப்படுபவர் கராச்சி செல்லவிருந்தார் அப்போது கராச்சியில் நடந்து கொண்டிருந்த கலவரங்களைப் பற்றி அதன் காரணமான குழப்பமான நிலையில் ஐதராபாத்தில் சிந்து மாகாணத்தில் வசித்த ஒரு சேவிகா அவருக்கு கடிதம் எழுதி இருந்தார் அந்த சேவிகாவின் பெயர் ஜேட்டி தேவாணி. சிந்து மாகாணத்தை சேர்ந்த சாதாரண குடும்பம் ராஷ்ட்ரிய சுயம்சேவக் உடன் தொடர்பு கொண்ட குடும்பம் ஜேட்டி தேவாணியின் கடிதத்தை பெற்ற “அத்தைக்கு” இருப்புக்கொள்ளவில்லை சிந்து மாகாணத்தில் வசிக்கும் சேவிகா சமிதி அங்கத்தினர்களுக்கு உதவும் பொருட்டு உடனே அங்கு செல்லத் தீர்மானித்தார் ராஷ்டிரிய சேவிகா சமிதி அமையப்பெற்று பதினோரு ஆண்டுகள் ஆகியிருந்தன ஆனாலும் சமிதியின் தொண்டாற்றல் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்றால் எல்லைப்புற மாகாணமான பஞ்சாப் சிந்து வங்காளம் வரை அதனுடைய புகழும் பணியும் பரவியிருந்தன 


நாளை கராச்சியில் காயிதே ஆஜாத் ஜின்னா பாகிஸ்தான் தேசத்தின் தலைவராக சபதம் ஏற்க உள்ளார் நாளை அங்கு எத்திசையிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் ஆனாலும் அங்கு செல்ல வேண்டியது அவசியமானது அதனால் அத்தை லட்சுமிபாய் கேல்கர் தனது மற்றொரு சக தோழியான வேணு தாயி கலமகருடன் கராச்சி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார் 40 முதல் 50 பேர் மட்டும் அமரக்கூடிய அந்த சிறிய விமானத்தில் 9 கஜ மராட்டி பாணியில் புடவை அணிந்த இந்த இருவர் மட்டுமே பெண்கள் பயணிகளில் இந்துக்கள் அதிகம் இல்லை காங்கிரஸ் கட்சியில் சோசியலிச சித்தாந்தத்தை உயிர்ப்பித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவ்விமானத்தில் இருந்தார் ஆனாலும் பூனாவைச் சேர்ந்த லட்சுமிபாய்க்கு பரிச்சயமான மற்றொரு நபரும் இருந்தார் ஆனால் அவ்விருவரும் அகமதாபாத்தில் இறங்கிவிட்டனர் அகமதாபாத்தில் இருந்து விமானம் ஏறியவர்களில் அதிகம் முஸ்லிம்களே. இவ்வாறான பயணிகளிடையே இவ்விருவரும் மட்டுமே பெண்கள் விமானத்தில் இருந்த உற்சாக பயணிகள் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கம் எழுப்பினர் போராடி பாகிஸ்தான் தான் பெற்றோம் சிரித்துக்கொண்டே இந்தியாவையும் பெறுவோம் என்று ஒன்றிரண்டு பயணியர் முழங்கினர் ஆனால் லட்சுமிபாயின் தன்னம்பிக்கை இன்னும் திடமானது அவருடைய தீர்மானமும் உறுதியானது அவருடைய முகத்தின் கடுமை ஏறுவதை பார்த்து கோஷமிட்டவர்கள் அமைதியாயினர் ! 

முல்தான் - லாகூர் இரயில் பாதை - வட மேற்கு பிராந்திய ரயில்வே 

லாகூருடைய முந்தைய ஸ்டேஷன் ரியாஜாபாத் காலை பதினோரு மணி ! மழைத் துளியும் இல்லை ! ஆகாயம் நிர்மலமாக இருந்தது ஸ்டேஷனில் கிட்டத்தட்ட 100லிருந்து 200 முஸ்லிம்கள் கையில் வாளுடனும் கத்தியுடனும் நின்று கொண்டிருந்தனர் அதையும் தாண்டி அம்பாலா செல்லும் ரயில், ஸ்டேஷனில் மெதுவாக நுழைந்தது பிளாட்பாரம் முழுமையிலும் இந்த ஆயுதம் தாங்கியவர்கள் தவிர வேறு மனிதரில்லை ! ஸ்டேஷன் மாஸ்டர் தன் அறையை பூட்டிக் கொண்டு உள்ளேயே மறைந்திருந்தார் அவருடைய உதவியாளர் ரயில்வே தந்தி முறையை பயன்படுத்தி தன்னுடைய தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க முயன்றுகொண்டிருந்தார் நடுங்கிய கைகளுடன் தந்தியடித்ததால் வழக்கமான கட் கட் ஓசையுடன் டிட டையும் சேர்ந்து தந்தி செய்தி திரும்பத் திரும்ப தவறாகவே ஆகிக் கொண்டிருந்தது ரயில் வண்டி பிளாட்பாரம் வந்து சேரும் வரை மயான அமைதி நிலவியது வண்டி மெதுவாக நுழைந்து கொண்டிருந்தது சத்தமான விசில் ஒலி கேட்டது அடுத்த கணமே தீன் தீன் அல்லாஹு அக்பர் என்ற விண்ணை பிளக்கும் ஒலியுடன் வெட்டு கொல்லு என்ற கூச்சல் கேட்டன ! முல்தான் மற்றும் மேற்கு பஞ்சாப் கிராமங்களில் இருந்து தங்களின் எல்லா சொத்துக்களையும் இழந்தவர்களான இந்து சீக்கியர்களை ரயில் வண்டியில் இருந்து வெளியே இழுத்து கூர்வாளால் கழுத்தை துண்டித்தனர் ! தன்னுடைய அலுவலக ஜன்னல் வழியாக நடுங்கியவாறு ஸ்டேஷன் மாஸ்டர் இதை பார்க்கிறார் ! ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை தன்னை அறியாமலேயே பிணங்களை எண்ணி அவர் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டதை அறிகிறார் ! நடந்த பயங்கரத்தை ஆக்ரோஷத்துடன் எதிர்த்த தாய்மார்களையும் புதல்விகளையும் முஸ்லிம்கள் தங்கள் தோள்களில் தூக்கி சென்றனர் வெற்றிக்களிப்புடன் இன்னும் எவ்வளவு இந்து சீக்கியர்கள் கொல்லப்பட்டார்களோ! “இந்த எல்லா விவரத்தையும் தந்தி மூலம் தலைமையகத்துக்கு அனுப்பு” என்று ஸ்டேஷன் மாஸ்டர் தன் உதவியாளரிடம் கூறினார் ! ஆனால் பஞ்சாபில் அப்போது “சென்சார்” ( செய்தித் தணிக்கை அமலாகி ஆகிவிட்டதால்) இதைப் போல எத்தனை செய்திகள் அமுங்கிப் போனதோ ? 

டில்லி 
பாரத தேசத்தை விட்டு வெளியேறும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் பதவியில் பாரத தேச அதிகாரிகளை அமர்த்துவது நேரு அரசாங்கம் எதிர்நோக்கிய பெரிய சவாலாக இருந்தது. ஒன்றுபட்ட பாரதத்தின் தலைமை நீதிபதி சர் வில்லியம் பேட்ரிக்ஜ்ஸ் பேஜ் நாளை பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் தன்னுடைய பொறுப்பையும் ஒப்படைத்து விடுவார். இவருடைய பொறுப்பை ஏற்க மிகவும் தகுதியானவர் யார் ? சில பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. எல்லா பெயர்களுக்கும் மேலாக குஜராத்தைச் சேர்ந்த சூரத்தைச் சேர்ந்த ஹரிலால் ஜெய்கிஷன் தாஸ் கானியாவின் பெயர் அங்கீகரிக்கப்பட்டது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் 1930 முதல் நீதிபதியாக உள்ளார் 57 வயதான சர்.கானியா தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார் இப்போது தலைமை நீதிபதி ஆகிவிட்டார் சர் வில்லியம் பேட்ரிக்ஸ் பேஜ்  அவர்கள் பாரத பாகிஸ்தான் ஆர்பிட்ரேஷன்-டிரிபூனலின் சேர்மனாக நியமிக்கப்பட்டார். 

பாரீஸ். 

“ஆஜாத் ஹிந்த் சேனையில்” (நேதாஜியின் சேனை) சேர்ந்து போராடும் பல இந்தியர்கள் தற்போது ஜெர்மனியில் ஆங்கிலேய பிரஞ்சுப் பகுதிகளில் குழுமி இருந்தனர் . அந்த அதிகாரிகளும் வீரர்களும் தற்போது இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் இலவசமாக எங்கு வேண்டுமானாலும் போக வர செய்யலாம் பாரீஸில் அமைந்துள்ள “இந்தியன் மிலிட்டரி மிஷன்” இந்த அறிவிப்பை செய்தது. இங்குள்ள கைதிகளில் டாக்டர் ஹர்பன்ஸ் லாலும் இருந்தார். டாக்டர் ஐயா நேதாஜியின் “ஆஜாத் ஹிந்த் சேனை” யில் லெஃப்டினண்ட் ஆக இருந்தார். மற்ற கைதிகளுடன் டாக்டர் லாலும் இந்தியா திரும்ப வர இருந்தார். 

151 பேனலியாகாட், கல்கத்தா. 

ஹைதரீ மாளிகை மதியம் 3 மணி அளவில் ஒரு பழைய ஷெவர்லே காரில் சோடேபூர் ஆசிரமத்திலிருந்து காந்திஜி ஹைதரீ மாளிகை வந்தடைந்தார் அவருடன் மனு, மஹாதேவ் இன்னும் இரண்டு உதவியாளர்கள் இருந்தனர் அவருக்கு பின்னால் வந்த காரிலும் நான்கைந்து செயல் வீரர்கள் இருந்தனர் சமீபத்தில் பெய்த மழையினால் நாற்புறமும் சேறும் சகதியுமாக இருந்தது ஹைதரீ மாளிகையில் முன்புறம் மக்கள் நின்று கொண்டிருந்தனர் அவர்களை பெருமளவில் இந்துக்களே. 

காந்திஜியின் கார் நின்றவுடன், பெருமளவில் காந்தியின் பெயரை சொல்லி கோஷங்கள் எழுந்தன. ஆனால் இம்முறை அந்த கோஷங்கள் அவரை வரவேற்பதற்காக இல்லை மாறாக அவரைப்பற்றிய சுடுசொற்களும் சாபங்களே ஆகும். காரிலிருந்து இறங்கிய வண்ணம் இந்த கோஷங்களை கேட்ட காந்திஜியின் முகம் பதட்டம் ஆனது. ஆனாலும் அவருடைய முகத்தில் எந்தவிதமான பாவத்தையும் வெளிக்காட்டாமல் இருக்க வெற்றிகரமாக முயன்றார். 

கோஷங்கள் தொடர்ந்தன. 

“காந்திஜீ திரும்பிப்போ” “நவகாளி சென்று இந்துக்களை காப்பாற்று” “முதலில் இந்துக்களின் உயிருக்கு உத்திரவாதம். பின்பு முஸ்லீம்களுக்கு நாடு.” இந்து விரோதி காந்தி என்பனவாக கோஷங்களுடன் கல்வீச்சு பாட்டில் வீச்சு இவைகளின் பொழிவும் நடந்தது. 

காந்திஜி ஒரு க்ஷணம் நின்று, அமைதியுடன் பின்புறம் திரும்பி கையில் உள்ள சால்வையை சரி செய்தவாரே கூட்டத்தை நோக்கி அமைதியாக இருக்கும் படி கைகளால் செய்கை செய்தார் . கூட்டமும் சிறிது அமைதியானது. 

காந்திஜி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார் “நான் இங்கு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமமாகவே சேவை செய்ய வந்துள்ளேன். நான் உங்களின் பாதுகாப்புக்காக இங்கு இருப்பேன். நீங்கள் விரும்பினால் நேரடியாக என்னை தாக்கலாம். நான் இங்கு உங்களுடன் இருந்து கொண்டு இந்த பேலியாகாட்டில் இருந்து கொண்டு நான் நவகாளி இந்துக்களின் உயிரை காப்பாற்றவேன்- முஸ்லிம் தலைவர்கள் என் முன்னால் வாக்களித்திருக்கிறார்கள். இந்துக்களாகிய உங்களிடம் நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். கல்கத்தாவில் உள்ள முஸ்லீம் தோழர்களின் மேல் ஒரு துரும்புகூட விழக்கூடாது 

பேச்சின்றி அங்கு நின்ற மக்களை விட்டு காந்திஜி ஹைதரீ மாளிகையின் உள்ளே நுழைகிறார் ஆனால் கூட்டத்தில் இந்த அமைதி அடுத்த சில நிமிடங்கள் தான் நீடித்தது. ஏன் என்றால் ஷஹீத் சுக்ராவர்தீ அப்போது அங்கு வந்ததால் கூடியிருந்த கூட்டம் மீண்டும் கோபாவேசம் ஆனது கூட்டத்தின் கோபம் வெடித்துவிட்டது 5000 இந்துக்களின் கொலைக்கு காரணமான கொடூரன் தங்கள் கண் முன் போவதை பார்த்து எந்த இந்துவால் தான் அமைதியாக இருக்க முடியும் ? கூட்டம் கட்டிடத்தின் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு அதிலிருந்து சில இளைஞர்கள் ஹதரீ மாளிகையின் மேல் கல் வீசத் தொடங்கினர். 

ஒன்றுபட்ட பாரதத்தில் அனைவராலும் உயர்ந்து மதிக்கப்பட்ட மகாத்மா காந்தி இப்படி ஒரு வேதனையான அவமானகரமான அவமதிப்புக்கு உள்ளாவது இது ஒரு முதல் முறையான நிகழ்வு. 
_____________ 
காலை பத்தரை மணி அளவில் பம்பாய் ஜூஹு விமான நிலையத்திலிருந்து கிளம்பி “அத்தையின்” விமானம் அஹமதாபாத்தில் சிறிது நேரம் தங்கி சுமார் நாலரை மணி நேர பிரயாணத்திற்கு பிறகு கராச்சி த்ரீக் ரோட்டில் உள்ள விமான நிலையத்துக்கு மதியம் 3 மணிக்கு அடைந்தது. விமான நிலையத்தில் “அத்தையின்” மருமகன் சோல்கர் வந்திருந்தார். 

“அத்தையின்” மகள் வத்சலாவின் கணவர் தான் இந்த சோல்கர். 

வத்சலாவிற்கு படிப்பில் நாட்டம் இருந்தால் வீட்டிலேயே அவரை படிக்க வைக்க ஏற்பாடு செய்து அவருக்கு முழுமையான கல்வி அளித்தார். பின்னர் வத்சலாவும் ராஷ்ட்டிரிய சேவிகா சமிதியின் அங்கத்தினராகி தன்னுடைய உழைப்பை அர்ப்பணித்தார். கராச்சி “ஷாகா” வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு விமான நிலயத்தில் 15 முதல் 20 சேவிகாக்கள் “அத்தையை” வரவேற்க காத்திருந்தனர் பாதுகாப்பிற்காக சில ஸ்வயம் சேவகர்களும் இருந்தனர் ஒரு சேவிகாவின் காரில் “அத்தையை” சுமந்தபடி இந்த வாகன அணிவகுப்பு வெளியில் வந்தது 

ராஷ்ட்ர சேவிகா சமிதியின் தலைவி லட்சுமிபாய் கேல்கரின் விமானம் கராச்சியின் த்ரீக் ரோடு விமான நிலையத்தில் இறங்கிய அதே நேரம், ஒன்றுபட்ட பாரதத்தின் கவர்னர் ஜெனரல் லார்ட் மவுண்ட்பேட்டனை சுமந்த டகோடா விமானம் கராச்சியில் மெளரிபுரில் உள்ள ராயல் ஏர்ஃபோர்ஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. 


விமானத்தில் இருந்து வெளியே வந்த லார்டு மெளண்ட் பேட்டன் அவர் துணைவியார் எட்வினா மவுண்ட்பேட்டன் இவர்களை வரவேற்க உதயமாகும் பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகள் உச்சமட்ட அதிகாரிகளின் குழு காத்திருந்தது. விமான நிலையத்துக்கு ஜின்னா வரவில்லை. காயிதே ஆஜம் ஜின்னாவும் அவரது சகோதரி பாத்திமாவும் மவுண்ட்பேட்டன் தம்பதியை வரவேற்க அவர்களது அரசாங்க இல்லத்தில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சிந்து மாகாணத்தின் கவர்னர் மாளிகை தான் தற்போது ஜின்னாவின் அரசு இல்லமானது. விக்டோரியா பாணி கட்டடக்கலையில் கட்டப்பட்ட இந்த விசாலமான ஒரு பெரிய அரசவை வரவேற்பறையில் பிரமாதமான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பங்களா முழுமையும் ஹாலிவுட் படங்களுக்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான செட்களுக்கு நிகராக காட்சி அளித்தது. இப்படி பேரரசர்களுக்கு சமமான ஏற்பாடுகளினால் வரவேற்பறையில் காயிதே ஆஜாம் ஜின்னாவும் அவரது சகோதரி பாத்திமாவும் மௌண்ட் பேட்டன் தம்பதியை வரவேற்றனர் 

கராச்சி 

நாளை பாகிஸ்தானில் சுதந்திரம் பெறும்- அதற்கு முன்பு பாரதம் பாகிஸ்தான் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் அடங்கிய ஒரு முக்கியமான சந்திப்பு நடந்து கொண்டிருந்தது . 

பாரதம் பாகிஸ்தான் இரண்டினுடைய ஆட்சி பங்கீடு சுமுகமாக அமைய வேண்டி இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது வணிகம் தொலைத்தொடர்பு கட்டுமானம் ரயில்வே சுங்கம் ஆகிய எல்லாத் துறைகளுக்குமான விவாதம் நடந்துகொண்டிருந்தது அப்போதைய சூழ்நிலையில் ஒன்றுபட்ட பாரதத்தின் விதிமுறை நிதி நடைமுறைகள் 1948 வரை இரண்டு நாட்டிலுமே தொடரப்படும் என்று முடிவானது மார்ச்சுக்குப் பிறகு இரண்டு நாடுகளும் விதி ஆட்சி நடைமுறைகளை தங்கள் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம் 

தபால் தந்தி துறையும் மார்ச் வரை இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதாக இருக்கும் இரண்டு நாடுகளின் குடிமக்களும் பரஸ்பரம் இரண்டு நாட்டிற்கும் எந்த கட்டுப்பாடுமின்றி போக வர முடியும் என்றும் தீர்மானம் ஆனது. 

லாகூர் 

மதியம் 4 மணி 

டெம்பிள் ரோடில் வசிக்கும் முஜாஹித் தாஜூதீன் அந்த சாலையிலேயே ‘நான்’ “குல்ச்சா’ (உனவுப் பொருள்) இவைகளை விற்கும் சாமானிய ஏழை மனிதன். ஆனால் இன்று காலையில் இருந்தே அவனுடைய மண்டையை ஏதோ குடைந்து கொண்டிருந்தது. தாஜுதீனின் கிட்டத்தட்ட எல்லா நண்பர்களும் “முஸ்லிம் நேஷனல் கார்ட்” என்ற அமைப்பின் உறுப்பினர்கள். அவர்கள் எல்லோரும் மற்றும் அருகாமையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் ஹவில்தாரும் சேர்ந்து இன்று காலை அவரிடம் சொன்னார்கள் “டெம்பிள் ரோட்டில் உள்ள சீக்கியர்களின் மிகப்பெரிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தி அதை அடையாளம் தெரியாமல் அழிக்க வேண்டும். இது நாம் நம் மதத்திற்கு செய்யும் தொண்டு” என்று. 

தாஜுதீனுக்கு ‘நான்’ ‘குல்ச்சாவை’ தவிர எதுவும் தெரியாது. ஆனால் மற்றவர்களின் தூண்டுதல் அவனுடைய மண்டையில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. அவன் மதியமே தன்னுடைய கடையை மூடிவிட்டு குருத்வாராவை தாக்குவதற்கு நின்று கொண்டிருந்த தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டான். 

லாகூர் டெம்பிள் ரோட்டில் அமைந்துள்ள மோஜங் குருத்வாரா “சேவீன் பாதஷாஹி” என்ற வகுப்பு சீக்கியர்களுக்கு எல்லாவற்றிற்கும் மேலான புனிதமான குருத்வாரா. மகாராஜா ரஞ்சித் சிங் தானே இந்த குருத்வாராவில் நிர்மாணித்தார். 1619 ல் குரு ஹர்கோவிந்த்சிங்ஜி திவான் சந்த் உடன் இங்கு வந்தார். அப்போது அவர் எந்த இடத்தில் வாசம் செய்தாரோ அந்த இடத்திலேயே இந்த குருத்துவாரா நிர்மாணம் செய்யப்பட்டது. 

குருத்வாராவில் தினசரி பூஜை நியமமாக “அர்தாஸ்” மற்றும் லங்கர் முதலானவை நியமப்படி நடந்தன குருத்வாராவில் பாதுகாப்பிற்காக “நிஹங்க் சந்த்” தங்கள் வாட்களுடன் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கையே நான்கு தான். அதிக சீக்கியர்கள் தொழிலாளர்கள். இந்த காலை நேரம் அவர்கள் தொழிலுக்கு முக்கியமான நேரம். அதனால் இரவில் தான் அவர்கள் இங்கு கூடுவர். இப்போது குருத்வாராவில் குறைந்த ஆட்களே உள்ளனர். 

சரியாக 4 மணிக்கு “முஸ்லிம் நேஷனல் கார்ட்” குருத்வாராவை தாக்கியது. தாஜூதீன் எல்லாரையும் விட முன் வரிசையில் நின்றான். முதல் பெட்ரோல் பாமை அவன்தான் வீசினான். 40 முதல் 50 வாளேந்திய முஸ்லிம் குண்டர்களை எதிர்த்து நான்கு சீக்கியர்கள் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியும் இருந்த போதிலும் அவர்கள் அசாதாரண வீரத்துடன் போராடி நாலு முஸ்லீம்களை வெட்டி 7-8 பேரை காயமும் படுத்தினர் ஆனால் கடைசியில் அந்த நாலு சீக்கியர்களும் தங்கள் ரத்த கடலிலேயே விழுந்தனர். 

மஹாராஜா ரஞ்சித் சிங் கட்டிய இந்த குருத்வாரா “சேவீன் பாதஷாஹி குருத்துவாரா” ஒரு பாவமும் அறியாமல் சீக்கியர்களின் ரத்தத்தில் நிறைந்தது. 

பெஷாவர் 
இந்த ஊர் “நார்த்வெஸ்ட் பிராண்டியர் பிராவின்ஸின்” (NWFP) தலைநகரம். பெஷாவரில் தனது விசாலமான வீட்டில் 57 வயதான கான் அப்துல் கபார்கான் வேறு ஏதோ சிந்தித்தவாறு அமர்ந்திருந்தார்- தனியாக, கவலையுடன். 

கான் அப்துல் கபார்கான் ஒரு கனமான பெயர் அந்தப் பெயரைப் போலவே கனமான சரீரம் கொண்டவர் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் முழுவதிலும் மிகவும் மதிக்கப்பட்ட கான் சாஹேப். காந்திஜியின் உற்ற தோழரும் சக பயணியும் கூட. அதனால் தான் இவருக்கு “எல்லைப்புற காந்தி” என்ற பட்டமும் உண்டு ஆனால் அவர் தனது சக பட்டாணியர்களால் பாதுஷா கான் என்ற பெயரில் அதிகமாக அறியப்படுகிறவர். அவர் இந்த மலைப் பிரதேச படிப்பறிவில்லாத எல்லா ஆதிவாசி களையும் கபார்கன் காங்கிரஸின் கொடி அடியில் அணிவகுக்க வைத்தார். 

அதனால்தான் 1945 இல் நடந்த மாகாண தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றது. முஸ்லிம்களுக்கு பெரியதாக சீட் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியா 

பிரிக்கப்படுவது உறுதி என்பது இப்போது தெளிவாகி விட்டதால் பட்டாணியர்கள் முன்பு, “நாம் எந்தப் பக்கம் போவது” என்ற கேள்வி பலமாக நின்றது. பட்டாணியர்களுக்கும் பாகிஸ்தான் பஞ்சாபிற்கும் இருக்கும் இடையேயான பகை மிகவும் பழமையானது. இக்காரணத்தினால் இந்த மாகாணத்தில் உள்ள சாதாரண மக்கள் அனைவரும் பாரதத்துடன் செய்வதற்கு விருப்பமாக இருந்தனர். மாகாண சட்டசபையின் பெரும்பான்மை விருப்பமும் இதுவாகவே இருந்தது. ஆனால் மேற்கு கிழக்கு பாகிஸ்தான் இடையே இருந்த 2000 மைல் தூர இடைவெளி இந்த வாதத்திற்கு வலு சேர்த்தது. இன்னொரு அபிப்ராயம் காஷ்மீர் ராஜ்யம். பாரதத்துடன் சேர்ந்து விட்டால் இந்த பூகோள இடைவெளியின் வாதமும் அடிபட்டு போகும். ஏனென்றால் தெற்கு எல்லைகள் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் எல்லையை ஒட்டி இருந்தது. 

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் நடுவில் நேரு பொதுவாக்கெடுப்பு (referendum) என்ற தடை கல்லைப் போட்டு அதன் பேரில் தான் நாம் தீர்மானத்திற்கு வரமுடியும் என்றார். 

இது சூடான விவாதப் பொருளானது. சர்தார் பட்டேல் இந்த “பொதுவாக்கெடுப்பு” யோசனையை கடுமையாக நிராகரித்தார். மாகாண சட்டசபைகளில் தீர்மானமே அவர்கள் யாருடன் இணைந்து என்பதற்கு போதுமானது என்பது சர்தார் பட்டேலின் அபிப்பிராயமாக இருந்தது. நாட்டின் மற்ற மாகாணங்களில் இந்த வழிமுறைதான் பின்பற்றப்பட்டது. எங்கெல்லாம் முஸ்லிம் லீக் பெரும்பான்மையினரோ அவர்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர். இதே நியாயத்தின் ஆதாரத்தில் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் இந்தியாவில் இணைய வேண்டும் ஏனென்றால் அங்கு காங்கிரஸ் பெரும்பான்மை உள்ளது. ஆனால் நேரு பிடிவாதமாக இதற்கு சம்மதிக்கவில்லை “நான் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவன். மாகாண மக்கள் யாருடன் இணைய விரும்புகிறார்கள் என்று தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றார். 

பாதுஷா கான் செய்தித்தாள்கள் மூலம் தான் இதை அறிந்தார் அதாவது -அந்த மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என்று. இத்தனை கடினமான சூழ்நிலை மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசம் என்ற இந்த இக்கட்டான நிலவரத்திலேயும், எந்த பாதுஷா கான் அந்த மாகாணத்தை காங்கிரஸ் கோட்டையாக ஆக்கினாரோ அந்த பாதுஷாகானை இப்படி ஒரு முக்கியமான கட்டத்திலே கலந்தாலோசிக்க தகுந்தவராகக் கூட நேரு கருதவில்லை ! ஆகவேதான் நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட கான் அப்துல் கபார்கான் துயரத்துடன் சொன்னார் “காங்கிரஸ் இந்த மாகாணத்தை அலங்கரித்த தாம்பாளத் தட்டில் வைத்து முஸ்லிம்களுக்கு தாரை வார்த்து விட்டது என்று. 

இந்த மாகாணத்தில் “பொதுவாக்கெடுப்பிற்கான” ஏற்பாடுகள் 20 ஜூலை 1947 ஆரம்பித்தது. இது பத்து நாட்கள் நடந்தது. வாக்கெடுப்பின் போதும், பெரிய அளவில் மத ரீதியான உணர்வுகள் முஸ்லிம்களிடத்தில் கிளரப்பட்டன். இதைப்பார்த்த காங்கிரசார் “பொது வாக்கெடுப்பை” புறக்கணித்தார்கள். 

குதாயி-கின்மத்கார் (பாதுஷாகானின் பட்டப் பெயர்) நேருவின் தவறினால் இன்னும் என்ன விபரீதங்கள் ஆகுமோ இன்னும் என்ன தண்டனை அனுபவிக்க வேண்டுமோ என்று வருந்தினார். 

இந்த வாக்கெடுப்பே ஒரு பெரிய ஏமாற்று வேலையே. எந்த ஆறு ஆதிவாசி குழுக்கள் மேல் கான் அப்துல் கபார்கான் ஆழமான கட்டுப்பாடு இருந்ததோ அவர்களை தேர்தலில் சேர விடாமல் தடுத்தார்கள் 35 லட்சம் ஜனங்களில் 5 லட்சத்து 72 ஆயிரம் பேர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். சவத், தீர்,அம்ப், மற்றும் சித்ரால் போன்ற தாலுகாக்களில் வாக்கெடுப்பே நடைபெற வில்லை. 

தகுதியான வாக்காளர்களில் 51% மட்டுமே வாக்கு பதிவானது. பாகிஸ்தானில் இணைய விரும்பி வாழ்த்து அளிப்பவர்களுக்கு பச்சை நிற வாக்குப்பெட்டி வைக்கப்பட்டது. ஆனால் இந்தியாவுடன் இணைய வாக்களர்களுக்கு சிவப்பு நிற வாக்குப்பெட்டி. பாகிஸ்தானின் வாக்குப் பெட்டியில் 2,89,244 வாக்குகளும், காங்கிரசின் புறக்கணிப்புக்கு பின்னும் பாரதத்தில் சேர வாக்களித்த வாக்குப் பெட்டியில் 2874 வாக்குகள் இருந்தன. அதாவது 35 லட்சம் ஜனத்தொகையில் சுமார் 3 லட்சம் வாக்குகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தது. 

பாதுஷாகான் மனதில் இந்த விஷயத்தினால் மிகுந்த கோபம் இருந்தது. “ நேருவும் காந்தியும் நம்மை அனாதையாக்கி ஆக்கி விட்டார்கள். அதுவும் இந்த பாகிஸ்தானியர் என்ற ஓநாய்களின் முன்பு.” இப்படியான எண்ணம் அவர் மனதில் தொடர்ந்த வண்ணமே இருந்தது. 

ஆகவே பெஷாவர், கோஹட், பாநு, சுவாதி ஆகிய பகுதி மக்கள் “நாம் இந்தியாவில் அடைக்கலம் புகுந்து விடுவோமா” என்று கேட்டபோது எல்லை காந்தியிடம் இதற்கான பதில் இல்லை. என்ன பதில் சொல்வது என்று புரியாமல் இருந்தார். 

கராச்சி 

காய்தே ஆஜம் ஜின்னா வீடு - இரவு 9 மணி. லார்ட் மவுண்ட் பேட்டனை கௌரவிக்க, பாகிஸ்தான் சுதந்திரதின முதல் நாள் மாலை ஜின்னா ஒரு “அரச விருந்து” ஏற்பாடு செய்திருந்தார். ஒரு சில வெளிநாட்டு தூதர்களும், அரசியல் தலைவர்கள் அங்கு வருகை தந்தனர் தந்திருந்தனர். தண்ணீரை போல விலை உயர்ந்த மது வகைகள் பரிமாறப்பட்டன. ஆனால் இந்த கேளிக்கையில், விருந்து அளிப்பவர் அதாவது காய்தே ஆஜம் ஜின்னா எல்லோரிடம் இருந்து சற்று தள்ளியே இருந்தார். 

சம்பிரதாய விருந்து ஆரம்பிக்கும் முன் விருந்தளிப்பவரின் சுருக்கமான உரை வழங்கும் நேரம் வந்தது. ஜின்னா தன்னுடைய ஒரு கண்ணில் மட்டுமே அணிந்த கண்ணாடியை மூக்கின் மேல் சரி செய்த வண்ணம் உரையை படிக்கத்தொடங்கினார். “யுவர் எக்ஸலன்ஸி, யுவர் ஹைனஸ், ஹிஸ் மெஜஸ்டி சக்கரவர்த்தியின் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக தங்களின் முன்னிலையில் இந்த மதுவை அர்ப்பணிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” 

“யுவர் எக்ஸலன்ஸி லார்ட் மவுண்ட் பேட்டன் ! ஜூன் 3ந் தேதி நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட கொள்கை முடிவுகள், சட்ட முடிவுகள் இவைகளை நீங்கள் எவ்வளவு முழுமையுடனும் திறமையுடனும் நிறைவேற்றினீர்கள் ! நான் அதற்காக உங்களை பாராட்டுகிறேன். பாகிஸ்தானும், பாரதமும் உங்களுடைய இந்த பங்களிப்பை மறக்கவே முடியாது” . 

என்ன ஒரு தடுமாற்றம்- இஸ்லாமுக்காகவும், இஸ்லாமியக் கோட்பாடுகளுக்காகவும், எந்த ஒரு நாடு நாளை உதிக்க போகிறதோ, அந்த தேசத்தின் கட்டுமானம் மதுவை நதியாக ஓட விட்டு செய்யப்படுகிறது !! 

ஆல் இந்தியா வானொலி - லாஹுர் நிலையம். இரவு 11.50 ரேடியோவில் செய்தி ஒலிக்கிறது. “ இது ஆல் இந்தியா ரேடியோ லாகூர் வானொலி நிலையம். எங்களது அடுத்த அறிவிப்புக்காக சில நொடிகள் காத்திருக்கவும்”. அடுத்த பத்து நிமிடங்களுக்கு வாத்திய இசை ஒலிக்கிறது. 

சரியாக 12 மணி ஒரு நிமிடம் - 

“அஸ்ஸலாமு அலேக்கும். பாகிஸ்தான் பிராட்காஸ்டிங் சர்வீஸ் உங்களை வரவேற்கிறது. நாங்கள் லாகூரில் இருந்து பேசுகிறோம் -சுதந்திர திருநாளின் காலை நேரம்….” 

இவ்வாறு பாகிஸ்தானில் உதயம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. 




Post a Comment

0 Comments