கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, சென்னை


பல்வேறு அமைப்புகள் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 8.20 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது 

சென்னையில் டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, பாரதி சேவா சங்கம், ஸ்ரீமதி அன்னம்மாள் விவேகானந்தர் அறக்கட்டளை, ஜன சேவா அறக்கட்டளை, மாதவ சேவா சமிதி, தமிழ்நாடு சேவா நிதி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 120 ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 8.20 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சனிக்கிழமை (06-07-2019) டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி அலுவலகத்தில் நடைபெற்றது. குடும்பத்தினர் உட்பட 248 பேர் கலந்து கொண்டனர். 

ஸ்ரீ V நாகராஜன், தலைவர், தமிழ்நாடு சில்லறை வர்த்தகப் பிரிவு, பாரத பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட், தலைமை தாங்கினார். படிக்கும்போதே என்னவாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு படிக்க வேண்டும் என்று கூறினார். தூய்மை இந்தியாவின் அவசியத்தை வலியுறித்தினார் . 

ஸ்ரீ R K பிரசாத், நிர்வாகக் குழு உறுப்பினர், டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சிறப்புரையாற்றினார். ஏழ்மை முன்னேற்றத்திற்கு தடையாக இருக்க முடியாது என்று கூறினார். கணித மேதை ராமானுஜர் வாழ்வு ஒரு சிறந்த உதாரணம். இம்மாதிரி முன்னோர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்றார். 

ஸ்ரீ M K R மோகன், டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதியின் செயலாளர் அறக்கட்டளையின் பல்வேறு பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார். இந்த விழா சென்னை மற்றும் புறநகருக்கான பகுதிகளுக்கானது. இதைப்போல் பல்வேறு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாக்கள் தமிழ்நாடு முழுக்க நடைபெறுகின்றன என்று கூறினார். 

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சென்னை நகரத் தலைவர் ஸ்ரீ எஸ் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்

Post a Comment

0 Comments