ஸ்ரீ நாரதர் ஜெயந்தி மற்றும் நாரதர் விருது விழா, சேலம்

சேலம் விஸ்வ சம்வாத் கேந்திரம் சார்பில் பத்திரிக்கையாளர், எழுத்தாளர்களுக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது. 

சேலம் விஸ்வ சம்வாத் கேந்திரம் சார்பில் ஸ்ரீ நாரதர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சேலம் இன்ஜீனியர்ஸ் அசோசியேஷன் வளாகத்தில் நடந்த இந்த விழாவிற்கு சிடிஎன் டிவியின் முன்னாள் மூத்த செய்தி ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார். அவர் பேசும்போது, சர்வதேச அளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதும், அச்சுறுத்தலும் இருக்கும் போது இதுபோல் விருது வழங்குவது வரவேற்புகுறியது. எழுத்தாளர்களுக்கு எப்போதும் அச்சுறுத்தல் இருந்துகொண்டே உள்ளது. ஆனாலும் அதையும் தாண்டிதான் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பத்திரிக்கையாளர்களை அடக்க நினைக்கும்போதுதான் இன்னும் வேகமாக பணியாற்றுகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர் என்றார். 

சிறந்த பத்திரிக்கையாளர்களாக தி ஹிந்து இணை ஆசிரியர் இளங்கோவன், நியூஸ் 18 தமிழ்நாடு இணை ஆசிரியர் கண்ணன், அகில இந்திய வானொலி செய்திபிரிவு இணை ஆசிரியர் காமராஜ், எழுத்தாளர் இன்சுவை ஆகியோர் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்பட்டது. இதில், இளங்கோவன் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை. காமராஜ் பணி நிமர்த்தமாக சென்றதால் அவருக்கு பதில் பன்னீர்செல்வம் விருதை பெற்றுக்கொண்டார். 
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெச்சூர் ஓவியர் சங்க தலைவர் ராசி க சரவணன் பேசியபோது, பத்திரிக்கையாளர்களுக்கு சமூகத்தில் நன்மதிப்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு பத்திரிக்கையாளர் ஒருவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டுமனை ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் பத்திரிக்யைாளர்களுக்கு வழங்கப்படுகிறது. நாரதர் பெயரில் பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்குவது வரவேற்க தக்கத்து. கந்தர்வ குலத்தில் பிறந்த நாரதர் சாபத்தின் காரணமாக முனிவர் ஒருவருக்கு மகனாக பிறந்தார். ராம பக்தனாக வளர்ந்தார். அப்போதில் இருந்து நாரதமுனி என்ற அழைக்கப்படுகிறார். மூன்று லோகம், முக்காலத்தையும் உணர்ந்தவர். அவருடைய எழுத்துகளான பஞ்சரத்னா, நாரதஸம்ருதி ஆகியவை இன்றளவும் போற்றப்படுகிறது. 1605 ஆம் ஆண்டே இங்கிலாந்தில் பத்திரிக்கை தொடங்கப்பட்டாலும், இந்தியாவில் 1780 ஆம் ஆண்டு இந்தியா பெங்கால் கெஜட் என்ற இதழ் வெளியானது. தமிழகத்தில், 1782ல் சுதேசி மித்திரன் துவங்கப்பட்டது என்று பத்திரிக்கை வரலாற்றை பேசி சென்றார். தொடர்ந்து விருது பெற்ற கண்ணன் பேசும்போது, உழைப்பு மட்டுமே ஒருவரை உயர்த்தும். சின்ன வயதில் பேப்பர் போடும் சிறுவனாக வாழ்கையை தொடங்கி தற்போது இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். கடவுள் பக்தி அதிகம் உள்ள ஒரு விறகு வெட்டி காட்டில் செல்லும் போது, முன் கால்களை இழந்த நரி ஒன்றை பார்க்கிறார். இது எப்படி சாப்பிடும் என்று நினைக்கும்போதே, வேட்டையாடிய மானுடன் வந்த புலி அருகிலேயே சாப்பிட்டு விட்டு மீதியை விட்டு செல்கிறது. மீதி உணவை நரி சாப்பிடுகிறது. இதை பார்த்த விறகு வெட்டி, கடவுள் அனைவருக்கும் உணவு வழங்கி விடுவார் என நினைத்து கொள்கிறார். இதனால், கோடாரியை தூக்கி எறிந்துவிட்டு, கோவிலில் சென்று கடவுள் நினைவுடன் அமர்ந்துவிடுகிறார். ஆனால், பல நாட்கள் ஆகியும் அவருக்கு உணவுஇல்லை. மயக்க நிலைக்கு விறகு வெட்டி சென்றபோது, கடவுள் காட்சிதருகிறார். அப்போது விறகு வெட்டி நரியை சுட்டிகாட்டி உண்ணையே நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு ஏன்உணவு வழங்கவில்லை என கேள்வி எழுப்புகிறார். அப்போது, கடவுள் நீ நரியை ஏன் பார்த்தாய். உடல் ஊனமுற்றவர்களுக்கு உழைத்து கொடுத்த புலியை அல்லவா பார்த்து வாழ்க்கையை நீ பின்பற்றியிருக்க வேண்டும் என கூறினார். இதானல், உழைப்புதான் அனைவரையும் உயர்த்தும். வைகோவை பேட்டி எடுக்கும்போது, நான் கேள்வியை கேட்டு முடிக்கும் முன்பு கோவித்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டார். பல மாதங்கள் அவரிடம் பேசி என்னுடைய நிலையை விளக்க சொல்ல முயன்றும் முடியவில்லை. அவர் எழுந்து போனதால், அவரது கட்சி காரர்கள் இரவு நேரங்களில் போன் போட்டு மிரட்ட தொடங்கினர். 3 மாதகள் வரை மன உளைச்சலால் அவதிப்பட்டேன். இவைகளை தாண்டிதான் பத்திரிக்கையாளர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது என்றார். 
விருதை பெற்ற பேராசிரியர் இன்சுவை பேசியதாவது: எனக்கு வழங்கு பட்ட இந்த விருதை என் பெற்றோருக்கு காணிக்கையாக்குகிறேன். பெரும்பாலும் பெரிய எழுத்தாளர்களுக்குதான் விருது வழங்கப்படும். என்னை போன்ற கட்டுரை எழுதுபவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சிறப்பான கட்டுரை வந்தாலும் என் உடன் வேலை செய்பவர்கள் அதை பாராட்டியது இல்லை. அந்த கட்டுரையை புரட்டிவிட்டு அடுத்த பக்கம் உள்ள கொலை, கொள்ளை பற்றி பேசுவார்கள். என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுக்கு கூட என் எழுத்து பற்றி தெரியாது. என்னுடன் பேசும்போது, பலர் ஆட்சிபணியில் உள்ள என் சகோதரர்களிடம் சிபாரி கேட்டு பேசும்போது, வருத்தமாக உள்ளது. என் மனதில் இருக்கும் ஆதங்கம், கோபம் உள்ளிட்ட உணர்வுகள் தான் என்னுடைய கட்டுரையில் வெளியாகிறது. என்னுடைய கட்டுரையை படித்த சிறை கைதிகள் இருவர், பாராட்டி, உங்களுடைய கட்டிரையை முன்பே படித்திருந்தால் நான் சிறைக்கே வந்திருக்க மாட்டேன் என கூறியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுக்கு பதில் எழுதவில்லை என்பது இன்றளவும் வேதனையாக உள்ளது. பெண்கள் எழுத்தாளர்களாக வருவதில் மிகவும் சிரமம் உள்ளது. வீட்டு வேலைகளுக்கு நடுவே அவர்கள் சாதிப்பது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடி எழுதிய எக்ஸாம் வாரியர் புத்தகத்தை மொழி பெயர்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. மொழி பெயர்க்கும்போது முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்த விருது என்னை போன்ற சிறிய எழுத்தாளர்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும் என்றார். 
விஜயபாரதம் பிரசுரம் அறக்கட்டளை சேர்மேன் டாக்டர் குமாரசாமி பேசும்போது, நல்ல பத்திரிக்கையாளர்களை உலகம் இன்றளவும் கொண்டாடி வருகிறது. 8ஆம் வகுப்பை கூட தாண்டாத ேஷக்‌ஷ்பியர் நாடகத்தை முதுநிலை பாடத்திலும், ஆய்வும் செய்து வருகின்றனர். இன்றைய நாளிதழ், ஊடகங்களிலும் எதிர்மறையான செய்திகள்தான் அதிகம் வருகிறது. ஒரு பிரபல நாளிதழ் உரிமையாளரிடம் இது பற்றி பேசும்போது, நேர்மறை, நல்ல சிந்தனை செய்திகள் இருந்தால் கொடுங்கள் பிரசுரிக்கிறோம் என்றார். ஆனால், அவ்வாறு தர முடியவில்லை. தற்போது, வி.எஸ்.கே என்றழைக்கப்படும் விஸ்வ சம்வாத் கேந்திரம் அந்த பணியை செய்து வருவது பாராட்டுக்குரியது. பாரதியார், சுவாமிநாத அய்யர் ஆகியோருடன் பெரியாரும் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார். ஆனால் அவர் பணி முற்றிலும் மாறுபட்டது. பத்திரிகையாளர்கள் நேர்மறையுடன் செய்தியை வழங்கவேண்டும். சுய வெறுப்பு, விருப்பு இல்லாமல் பணியாற்றி சமூதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார். 
முடிவில் சேலம் விஸ்வ சம்வாத் கேந்திரம் சீனிவாசன் நன்றி கூற விழா முடிவடைந்தது.
சுமார் 85 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments