விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்களை பெருமைபடுத்தும் பொருட்டு ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழா 17.06.2019 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.
விழாவில் திருச்சி தினமலர் ஆசிரியர் முனைவர் ஸ்ரீ ஆர் .ராமசுப்பு ஜி அவர்கள் தலைமை தாங்கி பேசியதாவது “ஒரு செய்தியை அல்லது கதையை கம்ப்யூட்டரில் படிப்பதைவிட புத்தகத்தில் படித்தால் எவ்வளவு சுகம் என்பது படித்து அனுபவித்தவர்களுக்குதான் புரியும். விழாவுக்கு ஏன் நாரதர் ஜெயந்தி என்று பெயர் வைத்தார்கள் என்று சற்று புதிராகவும் , ஆச்சரியமாகவும் இருந்தது . உலகின் முதல் பத்திரிகையாளர் நாரதர் என்று புராண தகவல்கள் கூறுகின்றன . அதனாலோ , என்னவோ பத்திரிகையாளர்களை பாராட்டி விருது வழங்க ' நாரதர் ஜெயந்தி என்று பெயர் வைத்திருப்பார்கள் என்று கருதுகிறேன் . நாரதர் பணி மூவுலகையும் சுற்றி வந்து ஒருவர் பற்றிய செய்திகளை மற்றொருவரிடம் கூறி கலகம் செய்து நன்மையில் முடிவதாக கூறுவதுண்டு. அதுபோல் பத்திரிகைகளில் வரும் சர்ச்சையான பரபரப்பான , விமர்சனத்துக்குள்ளான பலசெய்திகள் கலகத்தில் ஆரம்பித்தாலும் நன்மையில் முடிந்ததற்கு உதாரணமிக்க செய்திகள் உண்டு. ஒருகாலத்தில் மிகப்பெரியதொரு ஊடகமாக பார்க்கப்பட்ட அச்சு ஊடகம் , பின்னாளில் காட்சிஊடகமாக , ஆன்லைன் ஊடகமாக , சமூக ஊடகமாக , மொபைல் ஊடகமாக புதிது , புதிதாக அவதாரம் எடுத்து வருகிறது. என்றார்
நிகழ்ச்சியில் , தமிழக அரசியல் இதழ் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் திரிசக்தி சுந்தர்ராமன் ( எ ) கார்கோடன் , தினசரி டாட் காம் இணைய இதழ் ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம் , வளம் பத்திரிகை முதன்மை ஆசிரியர் ஹரன் பிரசன்னா ஆகியோருக்கு ‘சந்தேஷ் புரஷ்கார்’ விருது வழங்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் பிரேமா நந்தகுமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். ஆர்எஸ்எஸ் தென் பாரத செயலாளர் ஸ்ரீ ராஜேந்திரன் ஜி அவர்கள் ,திருச்சி கோட்ட தலைவர் ஸ்ரீ செல்லதுரை ஜி அவர்களும் பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்எஸ்எஸ் தென் மாநில செய்தி தொடர்பாளர் ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி ஜி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழக பொறுப்பாளர் ராம்நாத் நன்றி கூறினார்.
0 Comments