SETU - 38

பிஹார் 
தேசம் தந்த தெம்பு

பிஹார் மாநிலம் பாகல்பூர் நகரில் ராஜநந்தினி தேவி ஏப்ரல் 6 அன்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலம் என்று வழக்கமாக கூறுவது போல கூற முடியவில்லை. குறைமாதப் பிரசவம். பிறந்த குழந்தைக்கு பல உடல் நல பாதிப்புகள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது. தேவியின் தந்தை துயரம் தாங்காமல் “என் குடும்பத்தில் இன்னொரு நபரையும் பறி கொடுக்க வேண்டுமா?” என்று கதறினார். குழந்தையின் தாய்க்கு நம்பிக்கை இருக்கிறது. “என் கணவர் ஆறு மாதங்களுக்கு முன் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டபோது தேசமே எங்களுக்கு ஆறுதல் கூறியது. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டது. அதுபோல் இப்போதும் இந்தக் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்கிறார். ஆம், இவர் புல்வாமாவில் படுகொலை செய்யப்பட்ட அந்த 44 சி.ஆர்.பி.எப் வீரர்களில் ஒருவரான ரத்தன் டாகுரின் மனைவி. மறுபடியும் எதிரி நம் ஜவான்களைப் படுகொலை செய்யத் துணியாதபடி அவனுக்கு படுபயங்கர தண்டனை கொடுக்க வேண்டும் என்று அப்போது இந்தக் குடும்பம் கோரியது.

உத்தராகண்ட்
கல்வி நிலையத்தில் ஒரு கொல்லும் கும்பல்!

டேராடூன் நகரில் சில்ரன்ஸ் ஹோம் அகாடமி ஸ்கூல்‘ என்ற பாதிரிகள் நடத்தும் கல்வி நிலையம் மதமாற்ற மையம் என்று ‘புகழ்’ பெற்றது. படிப்பு இலவசம் என்பதால் பிள்ளைகளை சேர்க்க வரும் ஏழை தாய் தந்தையரை ஆசை காட்டி மதம் மாற்றுகிறார்கள். பிள்ளைகளை சர்ச்சுக்கு கொண்டு போகிறார்கள். அண்மையில் இந்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு தெரிந்தே இரண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பத்து வயது வாசு யாதவ் என்ற மாணவன் ஒருவனை நாலு மணிநேரம் அடித்து சித்திரவதை செய்து கொன்றார்கள். பள்ளி நிர்வாகம் அவசர அவசரமாக அந்த குழந்தையின் பிணத்தை பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே புதைத்து கொலையை மறைக்க முயற்சி செய்தது. குழந்தையின் பெற்றோர் கேட்டபோது ஃபுட் பாய்சனிங் (கெட்டுப் போன உணவு) என்று பொய் சொன்னார்கள். காவல்துறை புலனாய்வு செய்தபோது கொலை என்று உறுதியாயிற்று. தற்போது கொலைக் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் 
உயிரைக் கொடுத்தாவது
ஊரைக் காப்பது என்பது...
ம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் என்ற பகுதியில் ஜிகாதிகள் நடமாட்டம் அதிகம். விழிப்புள்ள ஹிந்துக்கள் அந்தப் பகுதியில் வன்முறை சக்திகளை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். அதன் ஈட்டி முனையாக செயல்பட்டவர் மெடிகல் ஷாப் வைத்திருக்கும் சந்திரகாந்த். அண்மையில் இந்த தேசபக்தரை தேசதுரோகிகள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். சந்திரகாந்த் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொண்டுப்பணிகளை ஒருங்கிணைத்து வந்தவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கொலையாளிகளை விரைவாக கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று மாநில அரசைக் கோரியுள்ளார். மாநில அரசு அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும் உணர்ச்சிப் பிழம்பாக ௧௫,௦௦௦ பேர் சந்திரகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் ரூபேஷ் குமார், மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, மாநில சட்டமன்ற சபாநாயகர் நிர்மல் சிங் உள்ளிட்டோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பஞ்சாப் 
பலிதானிகளை மறக்கலாமா? 

ஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் நான்காம் வகுப்பு பஞ்சாபி மொழி பாடநூலில் ‘பாலகன் சுகதேவ்' என்று ஒரு பாடத்தை சேர்த்துள்ளது. அதற்கான படத்தை அச்சிட்டதில்தான் சர்ச்சை வெடித்துள்ளது. சுகதேவின் முழுப்பெயர் சுகதேவ் தாப்பர். அவர் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாடத்தில் அவர் படத்தை போடுவதற்குப் பதிலாக மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ராஜகுரு படத்தை அச்சிட்டிருக்கிறார்கள். பாடநூல் வழங்கப்பட்டுவிட்டது.பகத்சிங்குடன் ௧௯௩௧ ல் ஆங்கிலேய அரசு ராஜகுருவையும் சுகதேவையும் தூக்கிலிட்டுக் கொன்றது வரலாறு. அது நமக்கெல்லாம் தெரிகிறது. கல்வித்துறையாருக்கு தெரியவில்லை. குறிப்பாக பஞ்சாபைச் சேர்ந்த சுகதேவ் யாரென்று தெரியாமல் போய்விட்டது அவர்களுக்கு! ‘‘பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தாய்நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தார்கள். ஆனால் இன்று காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில் அதிகார வர்க்கத்தினருக்கு அந்த மாநிலத்தையே சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுகதேவ் யார் என்று அடையாளம் காண முடியாமல் இருக்கிறது. இது அவமானம்'' என்று அந்த மூன்று பலிதானிகள் பற்றி ஆய்வு செய்துள்ள சமன்லால் தெரிவித்தார். ஏதோ ஒரு பஞ்சாப் பள்ளிக்கூட ஆசிரியர் இந்த அபத்தத்தை கண்டுபிடித்ததால் சரியான படம் போட்டு பிழை திருத்தமாவது செய்யமுடிகிறது.

Post a Comment

0 Comments