SETU - 35



ஏமாந்த சத்தீஸ்கர் ஹிந்து வாக்காளர்கள்
ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), மார்ச் 17
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் கூடஆகவில்லை, அதற்குள் முதலமைச்சர் பூபேஷ் பகேல் மாநில நலனுக்கோ தேசத்தின் கூட்டாட்சி முறைக்கோ பொருந்தாத விதத்தில், மாநிலத்திற்குள் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) செயல்படக்கூடாது என்று (மேற்கு வங்கத்தின் மமதா பானர்ஜி போல) அறிவித்தார். அவர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த்து. ஆனாலும் அவரை காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக்கியது. ஆபாசம் பரப்பியது, போலி சிடி வெளியிட்டு மிரட்டியது, ஐடி சட்டத்தை மீறியது என பல வழக்குகள். ஆசாமி ஜாமீனில் வெளிவந்து முதலமைச்சரும் ஆகியுள்ளார். இதே வழக்கில் சிறை சென்று தற்போது விசாரணைக்குள்ளாகி வரும் ஒரு நபருக்கு கூடுதல் செயலர் அந்தஸ்து அளித்து தன் அர்சியல் ஆலோசகராக்கிக் கொண்டிருக்கிறார் பகேல். ஜாடிக்கேற்ற மூடி! இவரது அமைச்சரவையில் காபினட் மந்திரி குடியரசு தினத்தன்று கவர்கா என்ற ஊரில் தேசியக் கொடியேற்றினார். ஆனால் (முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்ஸாரி செய்தது போலவே) கொடிக்கு வணக்கம் தெரிவிக்க வில்லை. தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவர்கா தொகுதியில் 2 சதவீதம்கூட முஸ்லிம்கள் கிடையாது. அத்தொகுதி வாக்காளர்கள் மாநிலத்திலேயே மிக அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெளியூர் முஸ்லிமான முகமது அக்பரைத் தேர்ந்தடுத்து அனுப்பி அவர் அமைச்சரும் ஆகியிருக்கிறார். ஆனாலும் பெருவாரி முஸ்லிம்கள் போல இவருக்கும் மதம்தான் முக்கியம் என்று காட்டிவிட்டார். தேசத்தின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும் மாநிலத்தில் வரவிடவில்லை பகேல். 

பசுங் கன்றுகள் இன்று, காளைக் கன்றுகள் நாளை! பலே உத்தராகண்ட் மூளை!!
டேராடூன் (உத்தராகண்ட்), மார்ச் 17

பசு மாடு காளைக் கன்றுகளை அல்லாமல் பசுங் கன்றுளை மட்டுமே ஈனும் வகையில் விந்தணு தேர்வு செய்து சினைப்படுத்தும் முறையை செயல்படுத்தும் முதல் மாநிலம் தேசத்திலேயே உத்தராகண்ட்தான். இந்த முறையை ஏற்றெடுத்ததால் பசுக்கள் ஈனும் கன்றுகளில் 90 சதவீதம் பசுங்கன்றுகளாகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ், ரிஷிகேஷில் உள்ள ஒரு சோதனைச்சாலை, இவ்வாறு பாலினம் தெரிவு செய்யப்பட்ட விந்தணு உற்பத்தியை தொடங்கியுள்ளது என்று பிராணிகள் நலத்துறை செயலர் ஆர் மீனாட்சி சுந்தரம் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த உத்தி விவசாயிகள், கோசாலை நடத்துவோர் ஆகியோரின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திசையில் மிக முக்கியமான நடவடிக்கை என்று அந்த அதிகாரி கூறினார். இந்த முறைக் கருத்தரிப்புக்கு உள்ளாகும் ஒவ்வொரு பசுவிற்கும் மத்திய அரசில் இருந்து 400 ரூபாயும் மாநில அரசில் இருந்து 400 ரூபாயும் மானியமாக கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சந்தையில் இந்த கருத்தரிப்பு முறைக்கு 1,200 ரூபாய் செலவாகும் என்றும் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மானியத்தால் 300 ரூபாய் தான் ஆகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாலின தெரிவு செய்யப்பட்ட விந்தணு முறையை மற்ற மாநிலங்களுக்கும் அறிமுகப்படுத்த உத்தராகண்ட் திட்டமிட்டுள்ளது.

கேரளத்தின் ’ஹலால் சிக்கன்’ போர்டுகள் காட்டும் திசை!
திருவனந்தபுரம் (கேரளா), மார்ச் 17

லோக் சபா தேர்தல் நெருங்குவதால் அரசியல்வாதிகள் கட்சி விட்டு கட்சி தாவும் காட்சிகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. பாஜகவில் பல துறை நிபுணர்கள் சேர்ந்து வருவதும் அடிக்கடி செய்தியாகிறது. அந்த வகையில் கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர் பதவி வகித்தவரான கே. எஸ். ராதாகிருஷ்ணன் டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்று ஒரு செய்தி. இவர் காலடி ஸ்ரீ சங்கரா சம்ஸ்கிருத பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக விளங்கியவர். அத்வைதம் இவரது தனி ஈடுபாடு. ராதாகிருஷ்ணன் சிறந்த எழுத்தாளர், சொற்பொழிவாளர், தத்துவ நிபுணர், கல்வியியலாளர் என்று குறிப்பிடப்படுகிறார். கேரளத்தின் ஒரு நாளிதழ் நிருபராக வாழ்வைத் தொடங்கியவர் ராதாகிருஷ்ணன். குர்ஆனைத் தீவிர ஆராய்ச்சி செய்தவர் இவர். 1990 களுக்கு பிறகு கேரளத்தில் வஹாபிய இஸ்லாம் தலை தூக்குவது ஆபத்தானது என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த 2017 அக்டோபர் 7 பேட்டியில் இவர் பதிவு செய்திருக்கிறார். முஸ்லிம்களின் உடை முதல் உணவு வரை அரபி பாணியில் மாறி வருவதை குறிப்பிட்ட அவர் முன்பெல்லாம் கேரளத்தில் எங்குமே ஹலால் சிக்கன் என்ற போர்டு காணப்பட்டதே கிடையாது என்று சுட்டிக்காட்டுகிறார். செக்கானூர் மௌலவி இஸ்லாத்தின் உண்மையான தன்மை பன்முக இயல்பு என்று பேசியதற்காக கொலை செய்யப்பட்டார். அந்த மௌலவியை ஆதரித்து தான் ஒரு கட்டுரை எழுதியதற்காக முஸ்லீம் வெறியர்களின் மிரட்டலுக்கு உள்ளனதாக அந்த பேட்டியில் ராதாகிருஷ்ணன் சொன்னார்.

பறந்து பறந்து அடிக்கும் சாம்பியன்!
புணே (மகாராஷ்ட்ரா), மார்ச் 17

ஒரு குட்டி ஆளில்லா விமானம் (டிரோன்) வாங்குகிறீர்கள். அதில் காமிராவை பொருத்தி புகைப்படம் எடுக்கச் செய்யலாம். செல்போன் டவர் சோதிக்க டிரோனை அனுப்பலாம். நகரப் போக்குவரத்தில் சிக்காமல் மருந்தை பறந்து சென்று பிணியாளரிடம் சேர்ப்பிக்கச் செய்யலாம். ஒரு சேமிப்புக் கிடங்கில் எத்தனை மூட்டைகள் இருக்கின்றன என்று கணக்கெடுக்கவும் அதை அனுப்பலாம். இது போல எந்த ஒரு பணியையும் செய்வதற்கு அதில் ஒரு செயலியை (ஆப்) பொருத்தினால் போதும். சொன்ன வேலையை டிரோன் செய்யும். இந்த செயலியை உருவாக்கியவர்கள் புனே நகரிலுள்ள ப்ளைட் பேஸ் என்ற புதிய நிறுவனம் (ஸ்டார்ட் அப்). இந்த கண்டுபிடிப்புக்காக ஜப்பானின் ’நிப்பன் டெலிகிராப் அண்டு டெலிபோன்’ நிறுவனம் நடத்திய சர்வதேச புதிய உத்திகள் போட்டியில் ப்ளைட் பேஸ் முதலிடம் பெற்று சாம்பியன் ஆகியுள்ளது என்று செய்தி. இந்தப் போட்டியில் 18 நாடுகளில் இருந்து 400 புதிய நிறுவனங்கள் பங்கு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. (படத்தில் ஜப்பானிய நிறுவன அதிகாரியுடன் பிளைட் பேஸ் நிறுவனர் நிதின் குப்தா).

Post a Comment

0 Comments