ஹிந்து சமுதாயத்தின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா தீர்மானம் 2 - ஹிந்து சமுதாயத்தின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்

பாரதீய அல்லாத சிந்தனைகளின் அடிப்படையில் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து நம்பிக்கைகளையும் பாரம்பரியத்தையும் சிறுமைப்படுத்த தீய சக்திகள் முனைந்துள்ளது என அகில பாரத பிரதிநிதி சபா தீர்க்கமாக கருதுகிறது. இந்தத் திட்டத்தின் சமீபத்திய உதாரணம் சபரிமலை கோவில் நிகழ்வு. 

ஹிந்துதுத்வா என்பது "ஒரே மார்க்கம்" என்பதோ மற்றவர்களை ஒதுக்கித் தள்ளக்கூடிய சிந்தனையோ கொண்டது அல்ல. அது பல்வேறு கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய வழிபாட்டு முறை. பாரம்பரியம் மற்றும் பண்டிகைகளை ஒருமித்தே அடக்கிய வாழ்க்கை சிந்தனை முறையை கொண்டது. நம் நாட்டின் பாரம்பரியத்தின் ஆணிவேரான பன்முகத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது தவறாகும்.

தனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில். ஹிந்து சமுதாயம் என்றுமே காலத்திற்குத் தகுந்த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டு வந்துள்ளது. அத்தகைய சீர்திருத்தங்கள் சமுதாய, மத மற்றும் ஆன்மிக தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு . ஒருமித்த கருத்து வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் சட்ட வரைமுறை அல்ல. பாரம்பரியம் மற்றும் சமுதாய ஒப்புதல் இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த மிக அவசியம்.

சபரிமலையில் எல்லா வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்துகிறோம் என்கிற பெயரில் ஹிந்துக்களின் நம்பிக்கையை கம்யூனிஸ்ட்கள் கேரள அரசு துவம்சம் செய்துக்கொண்டிருக்கும் துரதிரிஷ்டவசமான சூழ்நிலையில் ஹிந்துக்கள் இருக்கிறார்கள்.

கோவிலில் இருக்கும் தெய்வத்திற்கும் பக்தர்களுக்கும் இடையேயான புனிதமான பந்தத்திற்கு சபரிமலை கோவில் ஒரு சிறந்த உதாரணம். பல ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ள வரைமுறைகளை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு அளித்தது துரதிருஷ்டவசமானது. மதத் தலைவர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெண் பக்தர்களின் உணர்வுகளும் கருத்தில் கொள்ளப்படவில்லை. எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் கூறப்பட்ட தீர்ப்பால், காலம் காலமாக சமுதாயம் போற்றி பாதுகாத்து வந்த வரைமுறைகள் தகர்க்கப்பட்டன.

கம்யூனிச கேரளா அரசின் நடவடிக்கை, ஐயப்ப பக்தர்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்துத்துள்ளது. கடவுள் நம்பிக்கை அற்ற மற்றும் தீவிர இடதுசாரி பெண்களை மறைமுகமாக கோவிலுக்குள் செல்ல அனுமதித்த செயல் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கைக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது. கம்யூனிஸ்ட்களின் அற்ப அரசியல் லாபத்திற்காகவும் ஹிந்துக்களுக்கு எதிராக மற்றுமொரு சிந்தாந்த போரை துவக்கும் நோக்கத்திற்காகவும் இது நடத்தப்பட்டுள்ளது. தங்களது மத நம்பிக்கைகளையும் சுதந்திரத்தையும் காத்துக் கொள்ள பக்தர்கள், குறிப்பாக பெண் பக்தர்கள் இதுவரை காணாத வகையில் உடனடியாக எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

பக்தர்கள் கூட்டாக வெளிப்படுத்திய உணர்விற்கு அகில பாரத பிரதிநிதி சபா ஆழ்ந்த மரியாதையை தெரிவித்துக் கொள்கிறது. கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க தொடர்ந்து அமைதியான வழியில் போராட பக்தர்களை அகில பாரத பிரதிநிதி சபா கேட்டுக் கொள்கிறது. கேரள அரசு பக்தர்களின் நம்பிக்கை உணர்வு மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், தங்கள் மக்கள் மீதே வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டாம் என்றும் அகில பாரத பிரதிநிதி சபா கேட்டுக் கொள்கிறது. தன் முன் உள்ள ஆய்வு மனு மற்றும் இதர மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது, உச்ச நீதிமன்றம் மேற்கூறிய எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்ளும் என பிரதிநிதி சபா நம்புகிறது. சபரிமலை புனிதம் காப்போம் இயக்கத்திற்கு நம் நாட்டில் உள்ள அனைவரும் தங்களது ஆதரவை கொடுக்க வேண்டும் என அகில பாரத பிரதிநிதி சபா கேட்டுக் கொள்கிறது. 

Post a Comment

0 Comments