விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு

திரு . அலோக்குமார் , சர்வதேச செயல் தலைவர் - விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு .

ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சொந்தமான 42 ஏக்கர் நிலத்தை மறுபடியும் அவர்களுக்கே வழங்குமாறு மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஸ்ரீ ராமருக்கு கோயில் அமைப்பதற்காக அந்த நிலம், ராம ஜென்ம பூமி அறக்கட்டளையால் பல ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்டது. 

1993ம் ஆண்டு, மத்திய அரசு 67.703 ஏக்கர் நிலத்தை பெற்றது. இதில் ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலமும் அடங்கும். தற்போது வழக்கில் உள்ள நிலமானது 0.313 ஏக்கர் தொர்புடையது மட்டுமே . ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் மற்றும் பிற இடங்கள் தொடர்பாக எந்த ஒரு சர்ச்சையும் இல்லை. 

இஸ்மாயில் என்பவர் தொடுத்த வழக்கில், உபரி நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. எனவே, மாண்புமிகு உச்சநீதிமன்றம், மத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் நம்புகிறது.

Post a Comment

0 Comments