Committed Consumers Meet in Chennai


   
"வெற்றிப் பாதையில் ABGP " நிகழ்ச்சி, டிசம்பர் 2 ,ஞாயிறு மாலை 3 மணியிலிருந்து 7.30 மணிவரை,சென்னை கோடம்பாக்கம், ஆற்காடு சாலை,மீனாட்சி மகளிர் கல்லூரியில், இலட்சிய நுகர்வோர்க் கூட்டமாய் நடைபெற்றது. 

இக்கூட்டத்துக்கு வந்திருந்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி,ABGP அகில இந்திய தலைவர் திரு.நாராயணபாய் ஷா மற்றும் பொதுச் செயலாளர் திரு.அருண் தேஷ்பாண்டே அவர்களையும், ABGP வடதமிழக இணைச் செயலாளர் திரு. பசுபதி வரவேற்றார். 

துக்ளக் பத்திரிகை ஆசிரியர், திரு.S.குருமூர்த்தி பேசுகையில் , " குடும்ப பந்தங்களற்ற, அமெரிக்க சமுதாயம், சேமிப்பைப் பற்றிய தேவை மற்றும் அக்கறையற்ற சூழ்நிலையில் "வாங்கும் நுகர்வோர்" கலாச்சாரமாக இருந்துகொண்டு மற்ற உலக நாடுகளையும் அதே கலாச்சாரத்துக்கு மாற்ற முயற்சித்து வருகிறது. 

1992 - 93 வருடங்களில், Dr .மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது, Dr.ஜெகதீஷ் பகவதியை நமது அப்போதைய பிரதமர் அழைத்து,இந்திய பொருளாதாரத்தை வளப்படுத்த வழிமுறைகளை கேட்டபோது, அவர் கொடுத்த 72 பக்க ஆராய்ச்சி அறிக்கையில், இந்தியாவின் சேமிப்பு,மொத்த GDPயில் 23 % ஆகவும், அதில் குடும்பங்களின் சேமிப்பு 19 % ஆகவும் உள்ளதை சுட்டிக் காட்டி, இதை 8 % குறைத்து ,மக்களை அதற்கு பொருட்களை வாங்க வைத்தால், தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்பதை பின்பற்ற இந்திய அரசு முடிவெடுத்து,நுகர்வோரை கவரும் அந்நிய நாட்டுப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய ஆவண செய்தது.அதிக சம்பளங்கள் மூலம் வாங்கும் சக்தியை அதிகப்படுத்தியது. ஆனால் இந்திய சமுதாயத்தில், குடும்பங்களுக்காக தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் பெண் சமுதாயத்தால் இன்று குடும்ப சேமிப்பு இன்னும் அதிகரித்துள்ளது. நமது குடும்ப கலாச்சாரமே விலை உயர்வைத் தடுத்து நுகர்வோரை காப்பாற்றி வருகிறது என்று உரையாற்றினார். 

மேற்படி கூட்டத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்திருந்த கவர்னர் மேதகு. பன்வாரிலால் புரோஹித் அவர்களை ABGP வடதமிழகத் தலைவர் திரு. வெங்கட்ராமன் வரவேற்றார். 

ஆளுநர் தன் உரையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நுகர்வோர் குறை தீர்க்க தமிழக மாநில அளவிலான தீர்ப்பாயம் 2018 வரை 86% குறைகளையும் , மாவட்ட அளவிலான தீர்ப்பாயம் 92% குறைகளையும் தீர்த்து வைத்துள்ளதாகக் கூறினார். 1974 முதல் செயல்படும் ABGP , 800 கிளைகளுடன் இந்தியா முழுவதும் செயல் படுவதாகவும் கூறினார். 

நுகர்வோருக்கான இன்றைய பிரச்சினைகளாக, பொருட்களின் MRP விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம்,மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வெளிநாட்டு பொருட்களின் நுகர்வோர் குறை தீர்ப்பு முறைகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுவது போன்றவற்றை கூறினார். ஆகவே நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார். 

நுகர்வோர் எப்போதும் தேவைக்கு மேல் நுகரக் கூடாது. இது தேவை மற்றும் வழங்கல் இடையே பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தி விலை ஏற்றத்தை உருவாக்கும்; நுகர்வோர் காந்திஜியை போன்று எளிமையுடன் இருக்கவேண்டும். 

மேலும் தன் எளிமை மனோபாவத்தால் கவர்னர் மாளிகையின் மொத்த செலவுகளை சைவ உணவு,சுய சுத்த நீர் கருவிகள், சாதாரண வகுப்பு விமானப் பயணங்கள், சொகுசு ரெயில் பெட்டிகளை தவிர்ப்பது போன்ற வகைகளில் 70% வரை குறைத்து, அரசாங்க வீண் செலவுகளை குறைத்தது பற்றிக் கூறினார். 

ஒவ்வொரு குடிமகனும் தனது குடும்பத்தின் பாதுகாவலராக இருந்து, நேரத்தில் எல்லாவற்றையும் செய்து, தன் குடும்பத்தினரிடம் வெளிப்படையாக இருந்து, எல்லாவற்றையும் கற்றறிந்து,விழிப்புணர்வுடன், காந்திஜியின் சுதேசி கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார். 

அவருக்குமுன் பேசிய ABGP பொதுச் செயலாளர் திரு.அருண் தேஷ்பாண்டே அவர்கள், ABGP யின் குடும்பம் சார்ந்த நுகர்வோர் கலாச்சாரக் கொள்கையை ஐக்கிய நாடுகள் சபை(UNO) பாராட்டி கடிதம் எழுதியுள்ளது போன்ற எல்லா இந்திய மற்றும் தமிழக சாதனைகளை எடுத்துக்கூறி, தமிழக ABGPயின் சமீபத்திய "இணைவழி RTI " கோரிக்கையை ஒரு பாதியை மட்டும் (சரியான தகவல் பெறமுடியாத பட்சத்தில் மேல்முறையீடு செய்ய மட்டும் இணைவழி அனுமதிப்பது) ஏற்ற தமிழக அரசு, முழு RTI சேவைகளையும் இணைவழி பெற மேதகு. கவர்னர் ஆவண செய்து உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

ABGP வடதமிழகச் செயலாளர், திரு. முரளி நன்றியுரை ஆற்றினார். 


Post a Comment

0 Comments