வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்
இணைய வழி அறிவியல் விழிப்புணர்வு தேர்வு-
பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் இணைய வழி அறிவியல் விழிப்புணர்வு தேர்வானது இணைய வழி அறிவியல் விழிப்புணர்வு தேர்வ மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து நடத்தி வருகின்றன. மாணாக்கர்களிடம் அறிவியல் விழிப்புணர்வையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்ப்பதே இத்தேர்வின் முக்கிய நோக்கம் ஆகும். 2018- 2019 ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து 7200 மாணாக்கர்கள் இணைய வழியில் அதாவது மடிக் கணிணி, கணிணி, கைபேசி, டேப் ஆகியவற்றில் தேர்வு ஏழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 160 பள்ளிகள் 280 தனி தேர்வர்களும் இதில் அடங்குவர். இத்தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் இத்தேர்வு நடைபெற உள்ளது. 1200 அரசு பள்ளி மாணாக்கர்கள் 50 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வு முழுவதும் ஆண்ட்ராய்டு செயலி, கணினி பயன்படுத்தி இணையவழியில் நடைபெற உள்ளதால் அத்தேர்வை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பற்றிய ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி திருச்சி, ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நடைபெற்றது.
பயிற்சிக்கு வருகை தந்தவர்களை வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில உறுப்பினர் சதீஷ்குமார் வரவேற்றார்.
மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விஞ்ஞான பாரதி ஒருங்கிணைப்புச் செயலாளர் கோபால் தலைமை வகித்தார்.
பயிற்சியில், நவம்பர் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் இத்தேர்வை எவ்வாறு நடத்த வேண்டும், இணையவழியில் இந்தியா முழுவதும் நடைபெறுவதால் , ஆசிரியர்களுக்கான பல்வேறு கேள்வி பதில்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் பதிலளித்தார். மேலும் ஆண்ட்ராய்டு செயலியை எவ்வாறு பயன்படுத்துவது மாதிரி தேர்வுகளை எவ்வாறு நடத்துவது ? என்பது பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த தேர்வினால் மாணாக்கர்களுக்கு கிடைக்கும் பரிசுகள், அதனால் அவர்களுக்கு கிடைக்கும் அறிவியல் விஞ்ஞானிகளின் தொடர்புகள் பற்றி காரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர் விஞ்ஞானி சுதாகர் அவர்கள் ஆசிரியர்களிடம் எடுத்துக்கூறினார்.
நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து 60 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ,விஞ்ஞான பாரதி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வேலுமணி அவர்கள் நன்றி கூறினார்.
0 Comments