அந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள் - 2 (Those 15 days)

2 ஆகஸ்ட் 1947
ப்ரஷாந் பொலே 
நேருவின் வீடு பரபரப்பாக இருந்தது. ஆட்சி அதிகாரம் மாறுவதற்கு 13 நாட்களே இருந்தன. சுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும், எது தேசிய கீதமாக அறிவிப்பது முதற்கொண்டு நேரு என்ன உடை அணிய வேண்டும் என்பது வரை விவாதிக்கப்பட்டு வந்தது.

சுதந்திரத்திற்கு முன்பு பல்வேறு சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டிய மாபெரும் பணியை சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டிருந்தார், இதற்காக அவர் திறமை வாய்ந்த V.K. மேனன் என்பவரை பணியிலமர்த்தினார். பிரிட்டிஷ் அதிகாரி பேட்ரிக் என்பவருக்கு மேனன் எழுதிய கடித்ததில் "பெரிய சமஸ்தானங்களான மைசூர், பரோடா, குவாலியர், பிகானீர், ஜோத்பூர், ஜெய்ப்பூர் ஆகியவை இந்தியாவுடன் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. போபால், ஹைதராபாத், இந்தூர் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை" என்று குறிப்பிட்டார். உண்மையில் இந்த மூன்று சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைவதை முதலில் விரும்பவில்லை. இன்னும் சொல்ல போனால் போபால் சமஸ்தானத்தின் நவாப் ஹமீதுல்லாஹ், "நீங்கள் கூறியது சரியே, போபாலில் 80% ஹிந்துக்கள் இருக்கிறார்கள், எங்களை சுற்றியும் ஹிந்து சமஸ்தானங்களே உள்ளன, எங்களுக்கு உதவக்கூடிய நிலையில் பாகிஸ்தான் இல்லை" என எழுதினார்.

குடியரசு தலைவராக பொறுப்பேற்கவிருந்த ராஜேந்திர பிரசாத், பாதுகாப்பு துறை அமைச்சர் சர்தார் பல்தேவ் சிங் க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ராணுவத்தினரும் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய மாகாணம் (இன்றைய உத்திரபிரதேசம்), ஹிந்து மஹாசபா கட்சி, மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசிடம் 10 கோரிக்கைகளை வைத்தது. ஆனால், அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள் எனக்கூறி ஹிந்து மகாசபா பொறுப்பாளர்களை' அரசு கைது செய்தது. 

மறுபுறம் நாகாலாந்தில் வேறொரு பிரச்சனை முளைத்தது. நாகா பழங்குடியின மக்கள், தாங்கள் சுதந்திர பிரதேசமாக இருக்க விரும்புவதாகவும், தனி அரசு அமைத்துக்கொள்வதாகவும், ஆகஸ்ட் 15 கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள விருப்பமில்லை எனவும் தெரிவித்தனர். இவ்வாறு நாடு முழுக்க மலையளவு பிரச்சனைகள் இருந்தன.

சிந்து, பலூச்சிஸ்தான், வங்காள மாகாணங்களை இணைப்பதில் சிக்கல் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் அமைச்சரவையில் இணையுமாறு சர்தார் படேலுக்கு நேரு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சர்தார் படேலின் முழு கவனமும் மாகாணங்களை ஒருங்கிணைப்பதிலும் கை மீறி சென்றுக்கொண்டிருந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதிலும் இருந்தது. 

இவ்வளவு பிரச்சனைகள் நாட்டின் முன்னே இருந்த பொழுது, இவைகள் பற்றி சிறிதும் கவலைக்கொள்ளாது சில இடதுசாரி சிந்தனை கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். காங்கிரஸ் ஆட்சி பீடம் ஏறப்போகிறது, ஆனால் தங்கள் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்று யோசித்த துளசிதாஸ் ஜாதவ், தத்தா தேஷ்முக் உள்ளிட்ட தலைவர்கள் உழைப்பாளர்கள் விவசாயிகள் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். நாடு கொந்தளித்து கொண்டிருக்கும் வேளையில் சுயநலமாக சிந்தித்து துவங்கிய இந்த அமைப்பு, பின்னர் பல்வேறு பிரிவுகளாக உடைந்து, கம்யூனிஸ்ட் கட்சியோடு சங்கமமானது.

ஆங்கிலோ இந்தியர்களுக்குள் ஒரு கவலை குடிக்கொண்டது, அதாவது அவர்கள் நிலை என்ன ஆகும் என்று? சென்னை மாகாணத்தின் நல்வாழ்வுத்துறை அமைச்சர் T.S.S. ராஜன் ஆங்கிலோ இந்தியர்கள் இங்குள்ள சமூகத்தவருடன் தொடர்ந்து வாழ்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று உறுதி தந்தார். 

புனேவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய சாவர்க்கர் "நாமெல்லாம் ஹிந்துக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். தேசத்தை துண்டாக்க முடிவு செய்தது காங்கிரஸ் என்றாலும், பொதுமக்களும் ஒருவகையில் பொறுப்பு. தேசத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றதற்கு காரணம், பொதுமக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வருவதே" என்று பேசினார்/ 

மறுபுறம் காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவின் மனைவி பேகம் அக்பர் ஜஹான் காந்தியை சந்தித்தார். (தேசிய மாநாடு கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவின் தாத்தா தான் இந்த ஷேக் அப்துல்லா). அவருடன் தேசிய மாநாடு கட்சி தலைவர்களும் இருந்தனர். தனது கணவரை விடுதலை செய்ய, காஷ்மீர் மன்னரிடம் வலியுறுத்துமாறு காந்தியிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், சிட்டாகோங், டாக்கா, அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் ஹிந்து முஸ்லீம் இடையே சிறு சிறு மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால் இரவில் பல இடங்கள் தீப்பிழம்பாக காட்சியளித்தது

Post a Comment

0 Comments